மருத்துவ காப்பீடு அடையாள அட்டையில் புகைப்படம் இல்லாததால் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு! புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!
தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
.இதற்காக கொடுக்கப்பட்டு உள்ள அடையாள அட்டையில் ஓய்வூதியம் பெறுபவர்களின் புகைப்படம் இல்லை என்றும் புகைப்படம் இல்லாமல் வெறும் பெயர் மட்டும் கொண்ட அடையாள அட்டை வழங்கியுள்ளதாகவும் இதனால் இன்சூரன்ஸில் முறைகேடு நடக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் பென்ஷன் பெறும் அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை புகைப்படத்துடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இதற்கான படிவங்களை டவுன்லோட் செய்ய முடியும்.அந்த படிவங்களை நிரப்பி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இதில் போட்டோவை பதிவேற்றுவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் கொடுப்பட்டு இருக்கும். உங்களுடைய போட்டோ அப்டேட் செய்யப்பட்டபின், நீங்களே ஆன்லைன் வழியாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் உங்கள் புதிய அடையாள அட்டையை பெற முடியும்.
தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பென்சன் பெறுவோருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.
இதற்காக கொடுக்கப்பட்டு உள்ள அடையாள அட்டையில் புகைப்படம் இல்லை. புகைப்படம் இல்லாத வெறும் பெயர் மட்டும் கொண்ட அடையாள அட்டை உள்ளது. இதனால் இன்சூரன்ஸில் முறைகேடு நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பென்ஷன் பெறும் அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை புகைப்படத்துடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இதற்கான படிவங்களை டவுன்லோட் செய்ய முடியும்.
அந்த படிவங்களை நிரப்பி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இதில் போட்டோவை பதிவேற்றுவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் கொடுப்பட்டு இருக்கும். உங்களுடைய போட்டோ அப்டேட் செய்யப்பட்டபின், நீங்களே ஆன்லைன் வழியாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் உங்கள் புதிய அடையாள அட்டையை பெற முடியும்.