ஆன்மீகத் தளம்

மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டும் திருச்செந்தூர் கோவில் நிர்வாக உயர் அதிகாரி! நடவடிக்கை எடுக்க தயங்கும் ஆணையர்!?

மாதம் பல லட்ச ரூபாய் கல்லா கட்டும் திருச்செந்தூர் கோவில் உயர் அதிகாரி!

திருச்செந்தூர் கோவிலில்  தினந்தோறும் 15,000 க்கும்  மேற்பட்டவர்களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டு வருகிறது.
அன்னதானம் வழங்கும் இடத்தில்  தனி நபர்கள்  தண்ணீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இரண்டு மூன்று பிரிவுகளாக தண்ணீர் பாட்டிலை விற்று வரும் நபர்கள் அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதும் இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அது மட்டும் இல்லாமல் கோவில் வளாகம் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட நடைபாதை கடைகள்  இருப்பதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்பந்தமாக பல புகார்கள் கோயில் நிர்வாக இணை இயக்குனரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் கோவில் நுழை வாசலில் விநாயகர் கோயில் அருகே கோவில் வளாகத்தில் இருக்கும் கடை வைத்திருப்பவர்களின்  நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விநாயகர் கோயிலை சுற்றி வர முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் கோவில் வளாகத்தில் உள்ள டீக்கடை உணவு கடைகளில் உள்ள கழிவு நீரை கோவிலுக்கு செல்லும் பாதையில் ஊற்றி வருவதால் பாதைகள் முழுவதும் அருவருப்பாக துருநாற்றம் வீசி காணப்படுவதால் கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் முகம் சுளித்தவாறு சாமி தரிசனம்  செய்து செல்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல் கோவில் வளாகங்களில் உள்ள டீக்கடை மற்றும் உணவகங்களில் வீட்டிற்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டலை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக கோவில் நிர்வாகமும் திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக கோவிலை சுற்றி என்ன நடக்கிறது என புலனாய்வு மேற்கொண்டதில் அதிர்ச்சி நிறுவனம் தகவல்களை  ஒரு சிலரிடம் விசாரித்ததில் அவர்கள் கூறிய தகவல் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது.
அது என்னவென்றால்  கோவிலில் நாளொன்றுக்கு 15000 பேருக்கு  அன்னதானம் வழங்கி வருவதாகவும் அன்னதானம் வழங்கும் இடத்தில்  நான்கு தனி நபர்கள் வாட்டர் பாட்டில் விற்பனை செய்து வருகின்றனர். நாளொன்றுக்கு 2000 பேர்  வாட்டர் பாட்டில் விற்பனை  செய்வதாகவும் கோவில் நிர்வாகத்தில் உள்ள முக்கிய அதிகாரி ஒருவரின் பினாமியாக விற்று வருவதாகவும் ஒரு வாட்டர் பாட்டிலுக்கு 5 ரூபாய்  கொடுக்க வேண்டும்.நாளொன்றுக்கு குறைந்தது 10,000 கிடைப்பதாகவும் மாதம் இரண்டு லட்சம் வரை   கமிஷன்  கிடைக்கும்  என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த வாட்டர் பாட்டில் தரம் இல்லாத வாட்டர் பாட்டில் அதிக விலைக்கு விற்பதாக விற்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். வெயில் காலங்களில் மட்டும்  கோயிலில் நிர்வாகத்தில் உள்ள முக்கிய அதிகாரி வாட்டர் பாட்டில் விற்பனையில் மட்டும் பல லட்சம் ரூபாய் சம்பாதித்து உள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.கோவில் நிர்வாகமே  தண்ணிர் பாட்டில் விற்பனை நிலையம் வைத்து தரமான தண்ணீர் பாட்டில் பக்தர்களுக்கு வழங்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் கோவில் வளாகம் சுற்றி உள்ள நடைபாதை கடைகளுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு  100 முதல் 500 ரூபாய் வரை கோவில் நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
நடைபாதை கடைகளில் வசூல் செய்வது மட்டும் மாதம் பல லட்ச ரூபாய் இருக்கும் எனவும் வளர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் கோவில் வளாகங்களில் வைத்திருக்கும் கடைகளில் தரமற்ற பொருள்களை அதிக விலைக்கு விற்று வருவதாகவும் பக்தர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்
இப்படி திருச்செந்தூர் கோவில்களில் ஊழல்  முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல்
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் பழனி கோயில்களில் பக்தர்கள் 
கோவிலுக்குள்
செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் பக்தர்கள் கையில் கொண்டு வரும் செல்போன் வைத்துச் செல்ல செல்போன் பாதுகாப்பு பெட்டகம் அறை அமைக்கப்பட்டு அங்கு செல் போன் வாங்கி வைக்கப்படுகிறது.
ஆனால் திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தின்
செல்போன் வாங்கி வைக்கும் இடத்தில் மின்சாரம் இல்லை என்று ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்போன் வாங்கவும் கொடுக்கவும் முடியாமல் பல மணிநேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது . இது சம்மந்தமாக அங்கு இருந்த கோவில் மேலாளர் இடம் கேட்டபோது  அதற்கான பதிலை சரியாக சொல்லாமல் ரவுடிகள் போல் செயல்படுகின்றனர்.
ஆகையால் பக்தர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து வந்த நிலையிலும் செல்போன் பாதுகாப்பு பெட்டகத்தில் இருக்கும் ஊழியர் வரவில்லை .
இதனால் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.


திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு  வருவதாக வரும் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க ஆணையர் தயங்கி வருவதாகவும் ஆகவே உடனடியாக திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரிகள் மீது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

திருச்செந்தூர் இணை ஆணையர் மு.கார்த்திக்

கடந்த 05/ 11/2023 அன்று திருச்செந்தூர் கோவில் இணை ஆணையராக கார்த்திக் பொறுப்பேற்றுக் கொண்டார் .இவர் கோவை மண்டல உதவி ஆணையராக (நகைகள் சரிபார்ப்பு) பணியாற்றி வந்த நிலையில் பதவி உயர்வு பெற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button