மாதம் 25 லட்சம் வரை கல்லாகட்டும் ஆணவத்தின் உச்சத்தில் பொதுமக்களை மதிக்காத
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்!
சாட்டையை சுழற்று வார்களா!? லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்

இடைத்தரகர்களின் ஆதிக்கத்திற்கு கட்டவிழ்த்து விடப்பட்ட

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் மற்றும்

மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகிய இருவரும் அலுவலகத்திற்குள் உட்கார்ந்து கொண்டு புது வாகனங்களுக்கு உரிமம் பெற வருபவர்களிடம்

இடைத்தரகர்களை வைத்து எவ்வளவு தொகை லஞ்சமாக வாங்கலாம் என டீலிங் பேசுவதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர்
https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் அனைத்து உரிமங்கள் பெற

https://sarathi.parivahan.gov.in/ என்ற இணையதளம் மூலம் வழங்கப்பட்டு உரிமம் புதுப்பித்தல் புது வாகனங்களுக்கு பதிவு எண் போன்ற அனைத்தையுமே இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்லைன் மூலம் உருவாக்கப்பட்ட படிவம் 2
மருத்துவ சான்றிதழ் படிவம் Form1-A (போக்குவரத்து வாகனங்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள்)
படிவம் 5 மற்றும் படிவம் 15 (ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மூலம் பயிற்சி பெற்றவர்கள்)
கட்டணம்
போக்குவரத்து வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணம் ரூ.450/-
போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தலுக்கான கட்டணம் ரூ.500/- பதிவு செய்து அதன்பின் அந்தத் தேதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தால் போதும் என்ற நிலையை மாற்றி தற்போது புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்

இடைத்தரகர்கள் இல்லாமல் வரும் எந்த ஒரு உரிமத்திற்கும் கையெழுத்து போடுவது இல்லை என புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசாங்கம் விதித்த கட்டணத்தைவிட

இடைத்தரகர்கள் ஒரு கட்டணத்தை நிர்ணயித்து வசூல் செய்வது தான் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்போதைய அதிர்ச்சித் தகவல்.
(1). நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி காண்பிக்காமல் ஓட்டுநர் உரிமம் பெற 5,000 ரூபாய்
. இரண்டு சக்கர வாகனத்திற்கு ஓட்டுநர் உரிமம் பெற வாகன சோதனையில் 8 போடும் போது தன்னுடைய ஒரு காலை தரையில் வைத்தால் அதற்கு 500 ரூபாயும்
இரண்டு கால்களை தரையில் ஊன்றினால் அதற்கு 1000ரூபாய்
இந்தக் கட்டணத்தை இடைத்தரகர்கள் உரிமம் பெற வரும் நபர்களிடம் வசூல் செய்து புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜனிடம் ஒப்படைக்க வேண்டுமாம். அப்படி ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்கள் இவர்கள் கேட்கும் பணத்தை தர மறுத்தால் உடனே வாகன சோதனையில் சரியாக வாகனத்தை ஒட்டவில்லை என்று உரிமம் தர மறுத்து விடுவதாக தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல்
புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ளே சென்றால்

இடைத்தரகர்கள் அதிகாரிகள் போல் இருக்கைகளில் அமர்ந்து இருப்பதைத் தான் காண முடிகிறது .நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களின் உரிமங்களை புதுப்பிக்க இந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருவதால் அரசுக்கு வரும் வருமானத்தை விட மூன்று மடங்கு வருமானம் இடைத்தரகர்கள் மூலம் புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோருக்கு கிடைப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் கனிம வளங்களை எடுத்து செல்லும் ஆயிரக்கணக்கான கனரக டாரஸ் லாரிகள் புதுப்பிக்க புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும்பொழுது கனரக வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளிடம் மாதம் ஒரு பெரிய தொகையை இடைத்தரகர்கள் நிர்ணயம் செய்து விடுவார்கள் . அப்படி நிர்ணயம் செய்த ரூபாய் மாதம் சுமார் 10 லட்சம் வரை புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜனுக்கு கிடைப்பதாகவும் ஒரு அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஏற்றிச்செல்லும் பள்ளி கல்லூரி வாகனங்கள் புதுக்கோட்டையில் மட்டும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் தனியார் பயணிகள் பேருந்து இயக்கப்படுகிறது .
பள்ளி மற்றும் கல்லூரி .
பேருந்துகளில்
80 கிமீ வேகம் செல்லும் வகையில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொறுத்திருக்கப்பட வேண்டும்.
தனியார் பயணிகள் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் அதிகபட்சமாக 85 டெசிபல் முதல் 90 டெசிபல் வரையிலான ஒலி அளவீடு இருக்கிறதா
என்பதை உறுதி செய்துபுதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் தரச்சான்று வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை பெயரளவில் சோதனை செய்துவிட்டு தகுதிச் சான்றிதழ் கொடுத்து விட்டு பள்ளி உரிமையாளர் மற்றும் தாளாளர்களிடம் மாதம் ஒரு பெரிய தொகையை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இடைத்தரகர்கள் மூலம் பெற்றுக் கொள்வதாகவும்
அதேபோல் தனியார் பயணிகள் பேருந்து உரிமையாளர்கள் அசோசியேஷன் மூலம் பெரிய தொகையை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் பெற்றுக் கொள்வதாகவும் அதேபோல் இரு சக்கர வாகனங்கள் விற்கும் தனியார் பைனான்ஸ் நிறுவனங்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனத்திற்கு குறைந்தது ஆயிரம் முதல் 5000 வரை சன்மானமாக கொடுக்கப்படுவதால் உரிமையாளர்களிடம் வாகன உரிமத்தின் ஆவணங்களை வழங்காமல் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் வழங்கும் நிறுவனங்களிடம் ஆவணங்களை வழங்கி வருவதாகவும்
இப்படி பல விதங்களில் மாதம் பல லட்சங்கள் கல்லாகட்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் மற்றும் மோட்டாரா வாகன ஆய்வாளர் நடராஜன் ஆகிய இருவரும் பொதுமக்கள் யாரையும் மதிப்பதில்லை என்றும் அதற்குக் காரணம் இடைத்தரகர்கள் மூலம் மாதம் வரும் பல லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தில் கல்லாக்க கட்டும் ஆணவத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகிய இருவர் மீது பல குற்றச்சாட்டுகள் புகார்கள் தற்போது எழுந்துள்ளது.
எது எப்படியோ
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை பொருத்தவரை பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மட்டும் ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் மாதம் ஒரு முறை தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை செய்தால்
இடைத்தரகர்களை வைத்து பல லட்சங்களை லஞ்சம் வாங்கும்
புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்
நடக்கும் லஞ்ச ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் நடராஜன் மற்றும் பிரபாகர் ஆகிய இரண்டு பெருச்சாளிகளை
கையும் களவுமாக பிடித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இடைத்தரகர்கள் இல்லாத புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்லும் பொது மக்களின் அச்சம் நீங்கும் என்பது தான் நிதர்சனம்.
பொறுத்திருந்து பார்ப்போம்..
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
2022 ஆம் ஆண்டு
புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலராக ஜெயச்சந்திரன் இருந்தபோது போது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள ஜெயச்சந்திரன் வீட்டில் சோதனை – 100 சவரன் நகைகள் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், வாகனங்கள், வீடு மற்றும் பெட்ரோல் பங்கிற்க்கான ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேர்மையான, ஊழல் இல்லாத சமுதாயத்தை கட்டியெழுப்ப, சமூகத்தின் அனைத்து பிரிவுகளும், குறிப்பாக இளைஞர்களின் கவனத்தை ஈர்க்கஇந்த விழிப்புணர்வு நிச்சயம் உதவும்.
விதிகள் இங்கு பின்பற்ற அல்ல, மீறவே என்கிற பார்வை கொண்டவனாகவே மாறிவிட்டான்
ஒருமைப்பாடு மற்றும் நெறிமுறைகள்தான் ஒரு தேசத்தின் அடித்தளமாக உள்ளன. ஒவ்வொரு தனிநபர் மற்றும் அமைப்புகள் நேர்மையாக இருக்கும் போது நாட்டில் வளர்ச்சி ஏற்படும். ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு, சட்டங்களை உருவாக்கினால் மட்டும் போதாது.
தனி மனிதனுக்குள் ஒழுக்கநெறிகளை ஆழமாக வேரூன்ற வேண்டும். எனவே, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், அனைத்து மத்திய அரசு துறைகளையும் இணைத்து, பொதுமக்களிடம் நெறிமுறைகளை வளர்க்க தேவையான மேம்பாட்டு நடவடிக்கை செய்ய வேண்டும்.




