மாவட்டச் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தைக் கருணையே இல்லாமல் ஒரு வருடமாக கிடப்பில் போட்டு மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் !தமிழக முதல்வர் கருணை காட்டுவாரா!?

ஒரு வருடமாக மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் கருணையே இல்லாமல் கிடப்பில் போட்டு மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திருப்பூர் மாவட்ட ஆவின் மேலாளர்! தமிழக முதல்வர் கருணை காட்டுவாரா!?

கலைஞர் எப்படியோ அப்படியே ஸ்டாலின்.. 2010 மார்ச் முதல் நாள், தமிழக மாற்றுத்திறனாளிகளின் வரலாற்றில் தனித்துவ நாளாய் தங்கிவிட்டது. காரணம், கலைஞர். மார்ச் முதலாம் நாள் பிற்பகலில், ‘இனி ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கப்படுவர்’ என்கிற அரசின் அறிவிப்பு தொடங்கி, அதே மாதம் 19-ஆம் தேதி, அன்றைய நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மாநில நிதிநிலை அறிக்கையின் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உருவாக்கப்பட்டது

2010 – 2011ஆம் நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான ஆணையும் அன்றே பிறப்பிக்கப்பட்டது

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்ற பின்பு
தன்னுடைய நேரடி மேற்பார்வையிலேயே மாற்றுத்திறனாளிகள் துறையைக் கவனித்து வருகிறார்.

அதுமட்டும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது .

ஜூன் 06/2023
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில்

சில தினங்களுக்கு முன்பு சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்பேசியபோது மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும் தான் காப்பாற்ற வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக் கூடிய ஒரே ஒரு நம்பிக்கை… இந்த அரசுதான்” – முதல்வர் ஸ்டாலின்
. அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும் தான் காப்பாற்ற வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 6) ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (ஜூன் 6) ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “இந்தத் துறையானது ஸ்கூட்டர் கொடுத்தோம், கருவிகளைக் கொடுத்தோம், நிதி கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல், நம்பிக்கையும் கொடுத்தோம் என்று சொல்லும் அந்த அளவுக்கு இந்தத் துறை செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய நம்பிக்கையை உருவாக்குவது சாதாரணமான காரியம் அல்ல, அதற்கு இந்தத் துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர் வரைக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
துறையை நோக்கி வருபவர்கள் சிலர்தான். அந்த சிலரது கோரிக்கைகளை செவி மடுத்துக் கேட்க வேண்டும். உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், சில வாரங்களுக்குள்ளாவது நிறைவேற்றித் தர வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும்தான் காப்பாற்ற வேண்டும்.அனைத்து துறை வளர்ச்சி – அனைத்து மக்களின் வளர்ச்சி – என்ற திராவிட மாடலுக்குள் இது போன்ற விளிம்பு நிலை மக்களின் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் தான் அடங்கி இருக்கிறது. அவர்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அவர்களது மகிழ்ச்சியில் தான், என்னுடைய மகிழ்ச்சி, இந்த அரசாங்கத்தினுடைய மகிழ்ச்சி இருக்கிறது. ஏன், இந்தத் துறையில் பணியாற்றும் அனைவரின் மகிழ்ச்சியும் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

ஆனால் முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் முதல்வர் கூறியதை எல்லாம் ஒரு சடங்காக நினைத்து தற்போது திருப்பூர் மாவட்ட ஆவின் முன்னாள் பொது மேலாளராக இருந்த நடராஜன் மற்றும் தற்போது ஆவின் பொது மேலாளர் உள்ள சுஜாதா முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்கவிட்டு அலட்சியப் போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆவின் நிர்வாக பொது மேலாளருக்கு பரிந்துரை செய்யும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் வகையில் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் சுஜாதா


மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாடு அடைவதற்காக மானிய உதவியுடன் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்க
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார் .அதில் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்து அதன் விவரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றும்
விருப்ப முள்ளோர் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, புகைப்படம் ஆகியவற்றுடன் மாற்றுத் திறனாளிகள் (மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும்
தனியார் தொழில் வளாகங்கள், மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க முன்னுரிமை அடிப்படையில் இடவசதி அளித்து அவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய உதவலாம்.முன்தொகையாக செலுத்த வேண்டிய 25 ஆயிரம், ஆவின் பொருள்கள் கொள்முதல் செய்ய மானியமாக 25 ஆயிரம் உள்பட மொத்தம் 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் என்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறிப்பு உண்மை என்று நம்பி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் பெதப்பம்பட்டி சாமவரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் பெண் 80 சதவீதம் மாற்றுத்திறனாளியான லட்சுமி
த/பெ தேவராஜ் .

80 சதவீதம் மாற்றுத்திறனாளி லட்சுமி

கடந்த ஆண்டு 05/07/22 அன்று திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் உடுமலைப்பேட்டை நீதிமன்ற வளாகம் அருகே ஆவின் பாலகம் வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளார்.
அந்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளருக்கு 07/07/22 அன்று மாற்றுத்திறனாளி கோரிக்கை மீது ஆவின் பாலகம் வைக்க நடவடிக்கை எடுத்து அந்த விவரத்தை மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்கப்பட்டுள்ளது.

அதன் பின்பு வங்கி மேலாளருக்கு மாற்றுத்திறனாளிகள் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்குமாறு திருப்பூர் மாவட்டம் கனரா வங்கி பெதப்பம்பட்டி கிளை மேலாளருக்கு மாற்றுத்திறனாளி நல அலுவலர் 14/07/2022 அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு வருடம் ஆன நிலையில் இதுவரை ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எந்த வித பதிலும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்திற்கு அனுப்பாமல் கிணற்றில் போட்ட கல் போன்று செயலிழந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் நடராஜன்

அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகள் நல கனரா வங்கி கிளை மேலாளருக்கு அனுப்பிய கடிதத்திற்கும் எந்த பதிலும் கொடுக்கவில்லை அது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது ஒரு வருடம் முடிந்த நிலையில் தற்போது ஆவின் அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுள்ளார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசிய போது ஆவின் சம்பந்தமாக எந்தவித சந்தேகத்தையும் அந்தந்த ஆவின் மேலாளர் அலுவலகத்தில் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று ஓபனாக பேசினார் ஆனால் அப்படி நடக்கிறதா என்றால் அதற்கு சாத்தியமே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

தற்போது உள்ள திருப்பூர் மாவட்ட ஆவின் பொது வேளாளர் சுஜாதா

தற்போது திருப்பூர் மாவட்ட ஆவின் முன்னாள் பொது மேலாளராக இருந்த நடராஜன் அவர்கள் மற்றும் தற்போது பொதுமேலாளராக பொறுப்பேற்றுள்ள சுஜாதா அவர்கள் அலுவலகத்தில் இருப்பதை அறிந்து கொள்ள அலுவலகத்திற்கு சென்றால் பொது மேலாளர் இருக்கிறார் என்று அலுவலகத்தில் உள்ளவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. ஏனென்றால் பலமுறை ஆவின் பொது மேலாளர் அலுவலகத்திற்கு நேரடியாக மனுக்களை கொடுப்பதற்கு செல்பவர்களை யாரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுகளை பெற மறுத்து வருகிறார் என்று மாற்றுத்திறனாளிகள் வேதனையாக தெரிவித்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்காக தற்போதுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி வருகிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது ! ஆகையால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா அல்லது வழங்கப்பட்டதாக முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய நேர்மையான அதிகாரிகள் குழுவை அமைக்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஒப்புதல் வழங்கிய இதுவரை திருப்பூர் மாவட்ட ஆவின் பொது மேலாளர் அந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆவின் பாலகம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு கடவுளாக கலைஞரின்100 ஆண்டு (ஜூன் 3ஆம் தேதி) பிறந்தநாள் காணும் மாற்றுத்திறனாளிகளின் கனவை நினைவாக்குவார் என்று எதிர்பார்ப்புடன் மாற்றுத்திறனாளி!

ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலகவங்கி நிதியுடன் ஆயிரத்து 763 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைக் காக்கவும் அவர்கள் சமுதாயத்தில் சமநிலையில், சுயமரியாதையுடன் வாழும் நிலையினை உறுதி செய்யும் வகையில் தனித்துறையாக உருவாக்கப்பட்டது.கவனத்தோடு இத்துறையை முதல்வர் ஸ்டாலின் தனி கவனிப்பில் வைத்திருப்பதாக கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


அரசு இத்திட்டத்தின் கீழ் மேலும் மாற்றுத் திறனாளிகள் பயனடைய விண்ணப்பித்து காத்திருப்போர் 24,951 நபர்களுக்கும் தற்போது மாவட்ட உதவித்தொகை வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்
ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த தா.கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற பின்பு இவருடைய செயல்பாடுகள் மிகவும் வருந்தத்தக்கதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button