முக்கியச் சோதனைச் சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்படும் . நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமான
நீலகிரியானது கடல் மட்டத்திலிருந்து, 900 மீட்டர் முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வடக்கே கர்நாடகா மாநிலமும், கிழக்கே கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டமும், கேரளா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. நீலகிரியின் இயற்கை அழகும் மற்றும் குளிர்ச்சியான வானிலையும் பலரை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. இதனால், கோடை காலத்தில் பலரது சுற்றுலா செல்லும் விருப்பமான இடங்களில் ஒன்றாக நீலகிரி இருக்கின்றது. மேலும், கோடை விடுமுறை என்பாதாலும், அதிக மக்கள் படையெடுப்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் .
நீலகிரிக்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு 01.04.2024 முதல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு


இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டுவந்த நிலையில் .கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் இறுதி வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தது. இதன்படி இ பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது . இதற்காக நீலகிரி வரும் வாகனங்களுக்கு மொத்தம் 14 இடங்களில் இ பாஸ் சோதனை நடைபெற்றது.
இ பாஸ் சோதனை காரணமாக

கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்னல் சரியாக கிடைக்காததால் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்வதில் எற்படுவதில் தாமதம் ஆகியவற்றால் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் இருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக அத்தியாவசிய பணிக்காக செல்லும் உள்ளூர் மக்களும் இதில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
ஆகையால் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி தற்போது கல்லாறு, குஞ்சப்பணை, மசினகுடி,. மேல் கூடலூர் ஆகிய நான்கு நுழைவு ஆகிய நான்கு நுழை வாயில்களில் மட்டும் இ-பாஸ் நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு E பாஸ் தேவையில்லை. இந்நிலையில், இ-பாஸ் பெறுவதற்கு https://epass.tnega.org/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். பயணிகள் தங்களது செல்லிடப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் போதுமானது.
என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.