முதல்வர் வருகையையொட்டிதேனி மாவட்டத்தில் நடக்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்! முதல்வர் ஆய்வுக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
மார்ச் 5, 6ந்தேதிகளில் மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கு முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
மாவட்டத்தில் நடக்கும் பணிகளை மதுரையில் முதல்வர் ஆய்வு கூட்டத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு!
அதன்படி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , தேனி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நேரடி கள ஆய்வு செய்ய உள்ளார்.
5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), கீழடி அகழ் வைப்பகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு நடந்து பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காட்சிப்படுத்த அகழ் வைப்பகம், 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு இருக்கிறது. பழமை மாறாமல் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கு ஏற்ப பணிகள் நடந்து முடிந்துள்ளன.
செட்டிநாடு கட்டுமான பாணியில் கட்டப்பட்ட இந்த அகழ் வைப்பகத்தை வருகிற 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை), நேரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருக்கிறார்.
இதை எடுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மதுரை ராமநாடு சிவகங்கை திண்டுக்கல் தேனி ஐந்து மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் நல திட்டங்கள் எந்த அளவிற்கு முடிவடைந்துள்ளது இன்னும் எத்தனை நாட்களில் முடிவடையும் என்பதை பற்றி அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுடன் ஆலோசிக்க உள்ளார்.
இந்த ஆய்வுக்குட்டம் நடப்பதற்கு முன்பு அமைச்சர்கள் நேரு மற்றும் ஐ பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் தேனி ராம்நாடு மாவட்டங்களில் நடக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டக்கரை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் (13.31 கோடி மதிப்பில்) (நீர் ஆதாரம் சோத்துப்பாறை அணை) மற்றும் போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட பரமசிவன் கோயில் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயல்படும் சுத்தகரிப்பு நிலையத்தையும் (76.15 கோடி மதிப்பில்) முல்லைப் பெரியாறு நீர் ஆதாரம் ( 30 கோடி மதிப்பில்) பணிகள் முடிவுற்று சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அமைச்சர் நேரு மற்றும் ஐபிஎல் சாமி அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பின்பு பத்திரிக்கையாளர் சந்தித்து தமிழக முதல்வர் வருகையை ஒட்டி ஐந்து மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை 6 ஆம் தேதி மதுரையில் நடக்கும் முதல்வர் ஆய்வு கூட்டத்தில் வழங்க உள்ளோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது