முதல்-அமைச்சரின் அதிகாரமிக்க துறை… உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில்!!சூப்பர் பவர் அமைச்சர்…!

சூப்பர் பவர் அமைச்சர்…! உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டில் முதல்-அமைச்சரின் அதிகாரமிக்க துறை அமைச்சருக்கான சான்றிதழை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து வாழ்த்து பெற்றார்.
பொறுப்பான துறையைப் பொறுப்புள்ள ஒருவரிடம் ஒப்படைத்துள்ளதாக மூத்த திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பெருமிதம்!

தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக திமுக அமைச்சரவையில் இன்று 35 வது அமைச்சராக காலை 9.30 மணிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ள
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புதிட்ட செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள்,மற்றும் ஊரக கடன்கள் போன்ற துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
சிறப்புதிட்ட செயலாக்கத்துறை என்பது இது கிட்டத்தட்ட ஒரு சூப்பர் பவர் போன்றது. இந்த துறையை வைத்து இருக்கும் அமைச்சர். எந்த துறைக்கு கீழ் வேண்டுமானாலும் நலத்திட்டங்களை அறிவிக்க முடியும்.
உதாரணமாக கல்வித்துறை அமைச்சர் போக்குவரத்து துறையில் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது.
ஆனால் இந்த சிறப்பு திட்ட செயலாக்க துறையை கையில் வைத்து இருக்கும் அமைச்சர் எந்த துறையில் வேண்டுமானாலும் சிறப்பு திட்டங்கள் என்ற பெயரில் அறிவிப்புகளை வெளியிட முடியும்.
தற்போது முதல்-அமைச்சரிடம் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த துறை சென்றுள்ளது. இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் “சிறப்பு” திட்டங்களை கண்காணிக்க முடியும். அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக எப்படி செய்வது என்பது தொடர்பாக இந்த துறை ஆலோசனைகளை வழங்க முடியும்.
மற்ற துறைகளை கண்காணிக்கும் வாய்ப்பு உதயநிதிக்கு கிடைக்கும். இதன் மூலம் மற்ற துறைகளுடன் உதயநிதி இணைந்து பணியாற்ற முடியும்.
உதயநிதி போட்ட முதல் கையெழுத்து.

தமிழ்நாடு அரசு இளைஞர் நலன்&விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றபின், தலைமைச்செயலகத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளை ரூ.47 கோடி செலவில் 16 பிரிவுகளில் நடத்துவதற்காக மாவட்ட-மாநில அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைத்திட கோரும் கோப்பில் கையெழுத்து போட்டார்.
நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.6ஆயிரமாக உயர்த்தவும், இந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான 6 மாதத்தில் விண்ணப்பத்தவர்களில் தகுதியான 9 வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினார்.


அதேபோல் சீனியர் அமைச்சர்களுடன் உதயநிதி ஸ்டாலின் இணைந்து பணியாற்ற முடியும். அதேபோல் பல துறைகளில் உதயநிதி அனுபவம் பெறுவதற்கு வசதியாக இந்த துறை வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான தனிப்பிரிவில் வெள்ளி வென்ற கோயம்புத்தூர் செல்வி நிவேதிதா-வுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டு உரிய காசோலைகளை வழங்கினார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது குறித்து அவருடைய தம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி மகனான சினிமா தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி ட்வீட் செய்துள்ளார். சூரியன் எமோஜியுடன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் புகைப்படத்தை தயாநிதி அழகிரி டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.