Uncategorized

மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினரை பாராட்டும் பொதுமக்கள்

மூன்று வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு!

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல்துறையினரை பாராட்டும் பொதுமக்கள்! 

28.08.2024  திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மே மாதம் (03.05 2024)-ஆம் தேதி  03 வயது சிறுமிக்கு பிச்சைமணி வயது 38 பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் விரு வீடு காவல்நிலையத்தில் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். விசாரணை நடத்திய போலீசார், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். 

இதையடுத்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்து போலீசார், பிச்சை மணி என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து நிலக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் பிச்சை மணி ஆஜர்படுத்தப்பட்டார். 

 விசாரணை நடத்திய மேஜிஸ்திரேட், 15 நாட்கள் அவரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மூன்று வயது  குழந்தைக்கு  பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குழந்தைகளிடம் இதுபோன்று அத்துமீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்

 இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அறிவுறுத்தலின்படி நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் .சத்திய பிரபா நீதிமன்ற முதல் நிலை காவலர் அனிதா மேரி மற்றும் அரசு வழக்கறிஞர்  மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் (28.08.2024)  திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  குற்றவாளி பிச்சைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.மேலும் இந்தாண்டு இதுவரை 38 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதையடுத்து அச்சத்துடன் இருந்த நிலக்கோட்டை சுற்றியுள்ளப் பகுதி மக்கள்  தற்போது பெருமூச்சு விட்டு நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.

Related Articles

Back to top button