மோசடி வழக்கில் மதுரை திருமங்கலம் பெண் காவல் ஆய்வாளர் கீதாவை கைது செய்ய மதுரை மண்டல டிஐஜி அதிரடி உத்தரவு!
விசாரணை என்ற பெயரில் 95 பவுன் நகையை வாங்கி 42 லட்சம் ரூபாய்க்கு தன்னுடைய வங்கியில் அடமானம் வைத்து மோசடி செய்த
மதுரை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மோசடி வழக்கில் கைது
செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த
மதுரை டி.ஐ.ஜி.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர்
கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினையா. இவர்களுக்கு திருமணம் நடந்த ஓராண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
இன்ஸ்பெக்டர் கீதா, ராஜேஷ்-அபினையா தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் அபினையா தனது பெற்றோர் திருமணத்திற்கு போட்ட
95 பவுன் நகையை கணவர் ராஜேசிடம் திருப்பி தரும் படி கேட்டார். ராஜேஷ் 95 பவுன் நகையை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து காவல் ஆய்வாளர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும் படி கூறி உள்ளார். நகையை பெற்றுக்கொண்ட காவலா ஆய்வாளர் வங்கிக்கு எடுத்துச் சென்று ரூ.42 லட்சத்திற்கு
அடமானம் வைத்து அந்த பணத்தை காவல் ஆய்வாளர் எடுத்துச் சென்று விட்டு புகார் அபினையாவிடம் இந்த செய்தியை சொல்லாமல் மறைத்துள்ளார் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்.
ஆனால் புகார் கொடுத்த அபிநயா தன் கணவர்
ராஜேஷ் தரப்பினரிடம் நகையை கேட்டு போன் செய்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த அபிநயா கணவர் ராஜேஷ் 95 பவுன் நகையை காவல் ஆய்வாளரிடம் கொடுத்து விட்டதாக கூறிவிட்டு ராஜேஷ் காவல் ஆய்வாளரிடம் நகையை கேட்க அவர் முன்னுக்குப் பின் பதில் அளித்துள்ளார்.
. இதனால் நகையை சந்தேகம் அடைந்த அபிநயா கணவர் ராஜேஷ்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் கடந்த மே மாதம் புகார் கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து 95 பவுன் நகையில் 10 பவுன் நகையை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி நகையை தரவில்லை.
அதன் பின்னர்
ராஜேஷ் மதுரை மண்டல டிஐஜி இடம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் குறித்து கொடுத்துள்ளார்.
இந்த புகார் மீது விசாரணை நடத்திய டி.ஐ.ஜி. ரம்யா பாரதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாவை அதிரடி பணியிடை நீக்கம் செய்து நகைகளையும் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பின்பு அடகு வைத்த 92 பவுன் நகையில் 42 பவுன் நகைகளை சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் கீதா திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள 38 பவுன் தங்க நகைகளை தரும்படி சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் கீதாவுடன் திருப்பி கேட்பதற்கு நகைகளை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். அதன் பின்பு ராஜேஷ் அவரது தந்தை திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருமங்கல காவல் ஆய்வாளர் புகார் ஒன்று கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் கீதாவை 420/406 இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய அதிரடி உத்தரவிட்டார். அடிப்படையில் திருமங்கலம் நகர் காவல் நிலையம் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் கீதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். .
விசாரணை என்ற பெயரில் வேலியே பயிரை மேய்வது போல காவல் ஆய்வாளரே நிவாரணம் கேட்டு வந்தவர்களிடம் மோசடி செய்த இந்த சம்பவம் காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.