மாவட்டச் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு உணவு கடத்தல் பிரிவு அதிகாரியாக பணிநியமனம்! குமரி மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை!!??

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வந்து கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் இரண்டு பிரதான மாவட்டங்கள் ஒன்று கோவை மாவட்டம் மற்றொன்று கன்னியாகுமரி மாவட்டம் இந்த இரண்டு மாவட்டங்களில் இருந்ததால் கேரள எல்லைக்குள் சுலபமாக ரோஷன் அரிசி மூட்டைகளை கடத்த முடியும்.

அந்தவகையில் கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு சக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதை புகைப்பட ஆதாரங்களுடன் உணவு கடத்தல் தமிழக முதல்வருக்கு செய்தியாக அனுப்பி இருந்தோம் அதனடிப்படையில் கோவை மாவட்டம் உணவு கடத்தல் பிரிவு துறையில் உடந்தையாக இருந்த சில அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லைகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில் சில பேர் பிடிபட்டனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்திய கேரளாவுக்கு கொண்டு செல்வதை விசாரணையில் கண்டுபிடித்தனர் அதில் குமரி மாவட்டம் காஞ்சாம் புரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணி செய்துகொண்டு இதுபோன்று ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுக்கு உடந்தையாக இருந்ததை உணவுப்பொருள் கடத்தல் பிரிவு காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பின் ராதாகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.
அதன் பின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் ராதாகிருஷ்ணன் மீண்டும் அதே துறையில் பணியில் சேர்கிறார் . மீண்டும் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுடன் ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் படி உணவு கடத்தல் பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜன் ராய் உடனே ராதாகிருஷ்ணன் பணியிடம் மாற்ற பரிந்துரை செய்கிறார் அதன்பின் வேறு துறைக்கு ராதாகிருஷ்ணனிடம் பணி இடமாற்றம் செய்யப்படுகிறார். தற்போது குமரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீராசாமி உதவியுடன் உணவு கடத்தல் பறக்கும்படை பிரிவிற்கு அதிகாரியாக 21/10/21 அன்று நியமிக்கப்பட்டுள்ளார் . அதனை அடுத்து தற்போது களியக்காவிளை அருகே மஞ்சவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்த அரிசி கடத்தல் ஜோசப் என்பவரை ராதாகிருஷ்ணன் தான் வைத்திருக்கும் TN 75v 1576 வாகனத்திற்கு ஓட்டுநராக சேர்த்துள்ளார் . இந்தத் தகவல் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஒரு துறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றம் வரை சென்று வந்த ராதாகிருஷ்ணனுக்கு உணவு கடத்தல் பறக்கும் படை பிரிவில் பதவியை வழங்கியுள்ள குமாரி மாவட்ட நிர்வாகத்தின் மீது சாமானிய பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எது எப்படியோ ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை அதுவும் மாவட்ட நிர்வாகத்தில் மட்டும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை என்று பொது மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது என்றால் லஞ்சம் ஊழல் செய்யும் அதிகாரிகள் பணபலத்தால் தங்களை அதே இடத்தில் தக்க வைத்துக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எது எப்படியோ தமிழகம் இந்தியாவில் முதல் மாநிலமாக மாற்றுவதே என் லட்சியம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் எண்ணம் நிறைவேற இதுபோன்ற கடத்தல் கும்பலுக்கு உதவியாக இருக்கும் அரசுஅதிகாரிகளை துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அரசுக்கும் ஆட்சி செய்யும் முதல்வருக்கும் ஸ்டாலின் தலைவராக இருக்கும் திமுக கட்சிக்கும் நற்பெயர் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button