லஞ்சம் வாங்கிக் கொண்டு கோவில் நிலம் மற்றும் பஞ்சமி நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ள காட்பாடி சார் பதிவாளர்! அதிரடி சோதனை நடத்துவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் !?
கொடிகட்டி பறக்கும் லஞ்ச ஊழல் முறைகேடு வேலூர் மாவட்ட காட்பாடி சார் பதிவாளர் அலுவலகம் !
வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது சார்பதிவாளர் (பொறுப்பு ) பணியில் இருப்பவர் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கவிதா.
இவர் பெயரைக் கேட்டாலே கலெக்ஷன். கரப்ஷன் க்கு பெயர் போனவரம்?.
இவர் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பத்திரப்பதிவு அலுவலகங்களில் உதவியாளராகவும், சார் பதிவாளர் (பொறுப்பு) பணியில் பணியாற்றி வந்துள்ளாராம்.
இவர் தற்போது வேலூர் மாவட்டம், காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு (பொறுப்பு) சார் பதிவாளராக வந்து சேர்ந்த சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட குடியாத்தம் மெயின் ரோட்டின் அருகாமையில் உள்ள சுந்தரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் மெய்த்தன்மை சான்றுகள், இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தின் ஆவணங்களை சரி பார்க்காமலும் பருப்பு சார் பதிவாளரின் சொந்த ஊரான குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த (document writer ) பத்திரம் எழுதுபவர் மூலம் பெரிய தொகையை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கோவிலுக்கு சொந்தமான நிலம் என்று கூட பாராமல். கோவில் இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவர்கள் காட்பாடி சார் பதிவாளர் பொறுப்பில் இருந்த கவிதா அவர்களிடம் விளக்கம் கேட்டு மனு கொடுத்தும் அந்த மனுவுக்கான விளக்கத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் , இந்த முறைகேடான பத்திரப்பதிவு சம்பந்தமாக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அதே போல் 15.12.2023 அன்று காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட ஏரந்தாங்கல் கிராமத்திற்கு உள்ளடங்கிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுயுள்ள சரஸ்வதி என்பவரின் பெயரில் உள்ள ( D C land) பஞ்சமி இடமான சர்வே எண் 335/1B3. 8. சென்ட் இடத்தை காட்பாடி சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். பதிவு எண் : 11677/2023. இந்த 8 சென்ட் இடத்திற்கு பத்திரப் பதிவு செய்ததுடன். (DC land ) பஞ்சமி பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் முழு ஆவணம் கேட்டு வாங்கி பரிசளிக்க வேண்டும். மேலும்( D C ) பஞ்சமி நிலங்கள் வைத்திருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் பெயர் மாற்றி பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்ற விதி உள்ளது. அவ்வாறு அந்த இடத்தை வேறு யாராவது வாங்கினாலும் செல்லாது. இந்த நிலையில் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பொறுப்பில் பணிபுரியும் கவிதா என்பவரிடம் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பஞ்சமி நிலத்தை எவ்வாறு பதிவு செய்தீர்கள் என சார் பதிவாளர் அவர்களிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்டதற்கு நான் பார்த்துக் கொள்கிறேன். என்று கூறி போனை துண்டித்து விட்டார். அதன் பின்பு காட்பாடி சார் பதிவாளர் (பொறுப்பு) கவிதாவை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பல்வேறு புகார்கள் இருப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டு அடிப்படையில் பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகள் இதுவரை அந்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நடத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
எது எப்படியே முறைகேடான பத்திரப்பதிவு செய்து வரும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் பொறுப்பில் இருக்கும் கவிதாவின் மீது தமிழக பத்திரப் பதிவுத்துறை மந்திரி மூர்த்தி அவர்கள், அரசு செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, இ.ஆ.ப., அவர்கள், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இ.ஆ.ப, ஆகியோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது சம்பந்தமாக பத்திரப்பதிவுத்துறை வேலூர் மாவட்ட துணைத் தலைவர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சமீபத்தில் வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச புகார்கள் பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் பேரூராட்சி அலுவலகத்திற்கு திடீரென நுழைந்து அதிரடி காட்டி சோதனையிட்டதில் கணக்கில் வராத 1.லட்சத்து 68 ஆயிரம் கைப்பற்றி வழக்கும் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் வேலூர் மாவட்ட ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அது போன்று
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் கவிதாவின் மீது தனி கவனம் செலுத்தி நோட்டமிட்டு திடீர் சோதனை மேற்கொண்டால் பல ஆவணங்கள். பல லட்சம் சிக்கக்கூடும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.