லஞ்ச ஊழல் பணத்தில் மது போதையில் தள்ளாடும் ஊராட்சி செயலர் !நடவடிக்கை எடுப்பாரா கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்!
கன்னியாகுமரி மாவட்ட புதிய ஆட்சியராக 21/07/2024 அன்று பொறுப்பேற்றுக்கொண்ட அழகு மீனா ஐஏஎஸ் அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்! கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. அதில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர்
ஊராட்சி விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையராகப் பணியாற்றி வருபவா் சையதுஉசேன் (46). இவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஊழியா் அளித்த புகாரின்பேரில், விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் விசாரணையில், சையதுஉசேன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதுதொடா்பாக அக்குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் அறிக்கை அளித்தனா். அதன் தொடா்ச்சியாக, சையதுஉசேனை பணி இடைநீக்கம் செய்து, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா அதிரடி உத்தரவிட்டாா். என்பது குறிப்பிடத்தக்கது. வன்னியூர் ஊராட்சி மன்ற தலைவராக பாப்பா உள்ளார். வன்னியூர் ஊராட்சி செயலராக ஊராட்சி B C … சைபின் ராஜ் என்பவர் உள்ளார்.
இவர் பணிக்கு ஒழுங்காக வருவதில்லை.இவர் எப்போதுமே மது போதையில் தள்ளாடிக் கொண்டுதான் இருப்பார் என்றும் இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்வதற்கு மிகுந்த அச்சத்துடன் இருப்பதாக ஊராட்சி கிராம பொதுமக்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் வன்னியூர் ஊராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் இருந்து தற்போது வரை 7 ஆண்டுகளாக அரசு ஒப்பந்ததாரர்களின் EMD ( Earnest Money Deposit ) தொகையை குறைந்தது பல லட்ச ரூபாய் திரும்ப வழங்காமல் இருப்பதாகவும் இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் வன்னியூர் ஊராட்சி செயலர் சைமன் ராஜிடம் EMD தொகையை திரும்ப கேட்கும் போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் எழுத நேரம் இல்லை. நான் மது போதையில் இருப்பதால் பதிவேட்டில் எழுத விருப்பமில்லை. ஆகவே என் மீது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் அல்லது Project Director – ஆகியோரிடம் புகார் செய்யுங்கள் என அலட்சியமாக பதில் கூறி மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எது எப்படியோ அரசாங்க டெண்டர்களுக்கு விண்ணப்பித்திருந்தால், அதற்கு அடிக்கடி டெண்டர் கட்டணம் மற்றும்/அல்லது EMD அல்லது ஈர்னஸ்ட் பண வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். டெண்டரில் EMD என்பது டெண்டரை வெளியிட்ட நிறுவனம்/அரசுத் துறைக்கு வைப்புத் தொகையாக வழங்கப்படும் தொகை. டெண்டர் எடுத்த ஏலதாரரை அறிவித்த பிறகு, EMD தொகையை செலுத்திய அனைத்து ஏலதாரர்களுக்கும் Earnest Money Deposit திருப்பியளிக்கப்படும் என்பதுதான் சட்ட விதி. ஆனால் இதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பாக ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த ஏழு வருடங்களாக பணத்தை திருப்பி தராமல் எங்கு வேண்டுமானாலும் என்னை புகார் கொடுங்கள் என மது போதையில் கூறிவரும் வன்னியூர் ஊராட்சி செயலர் சைபின் ராஜ்
மீது புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா ஐஏஎஸ் விசாரணை மேற்கொன்டு விசாரணையில் குற்றச்சாட்டின் மீது உண்மை தன்மை இருக்கும் பட்சத்தில் உடனடியாக வன்னியூர் செயலர் சைமன் ராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் 7 ஆண்டுகளாக திரும்ப வழங்கப்படாமல் இருக்கும் EMD தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு திருப்பி கொடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்!