லஞ்ச ஊழல் முறைகேடு கொடிகட்டி பறக்கும் கொடிகட்டி பறக்கும் வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகம்! நடவடிக்கை எடுப்பாரா திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்!
வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடிகட்டி பறக்கும்
லஞ்ச ஊழல் முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்!?
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் ஜோலார் பேட்டையைச்சேர்ந்த இரா.சாந்தி.
இவர் வாலாஜா வட்டத்தில் வருவாய் ஆய்வாளராகவும். அணைக்கட்டு வட்டத்தில் மண்டல துணை தாசில்தாராகவும், திருப்பத்தூர் கலால் தாசில்தாராகவும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் வருவாய் துறையில் பல்வேறு பிரிவினின் கீழ் பணியாற்றியுள்ளார்.
இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் காசு பணம் துட்டு மணி மணி என்ற வார்த்தைக்கு பேர் போனவராம். வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பட்டா மாறுதல் செய்ய, பட்டா வழங்க, இலவச வீட்டு மனை பட்டா வழங்க, தடையில்லா சான்று வழங்க, ஒருங்கிணைந்த சான்றிதழ், விதவை மகள் சான்றிதழ், திருமணம் ஆகாதவர் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் வழங்க, புறம்போக்கு குடியிருப்புப் பகுதிகளில் மின் இணைப்புக்கு சான்றிதழ் வழங்க என சான்றிதழுக்கு ஒவ்வொரு சான்றிதழும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பயனாளிகள் மூலமே தாசில்தார் இரா.சாந்தி மினிமம் ரூ.5000 முதல் ரூ.50 ஆயிரம் வரை. தனது கணவர் மூலம் லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. பட்டா சப் டிவிஷன் செய்ய வேண்டும் என்றால் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு தனி ரேட் நிர்ணயிக்கப்பட்டு வட்டத் தலைமை சர்வே ஆய்வாளரை கொண்டே அதிகம் லஞ்சம் பெற்று வருவதாகவும் ஒருபுறம் தகவல் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றிய சம்பத் என்பவர் ஊழல், லஞ்சம் வாங்குவதாக பல்வேறு செய்தித்தாள்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் மணல் மாஃபியாக்களிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆகிய நானும் தாசில்தார் சம்பத்தை விட சலித்தவள் அல்ல நான் இந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு என்னை பொருத்த மாட்டிலும் காசு பணம் துட்டு மணி. மணி மாற்றுமே. மேலும் மணிமைன்ட் இரா.சாந்தி என்று இவருக்கு பட்டமும் சூட்டியுள்ளனர் வாணியம்பாடி பகுதி மக்கள். மேலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகள், டிராக்டர் மூலமாக இரவு நேரங்களில் பாலாற்றில் மண் கனிமவளங்களை சுருட்டுப்பவர்களிடமிருந்து தாசில்தார் இரா.சாந்தியின் கணவர் மூலம் ஒரு பெரும் தொகை லஞ்சமாக அவ்வப்போது வாங்கி வருகிறாராம்.
வட்டாட்சியர் ஊழியர் வட்டாரங்கள். இவர் தாசில்தாராக வந்த பிறகு வழக்கத்தை விட லஞ்சத்தை அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது, எந்த வேலை செய்ய வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் மட்டும் பணி உடனே பைல்கள் நடக்கிறது , அதுமட்டுமின்றி தாசில்தார் சாந்தியின் கணவர் அனைத்து ஆய்வுகள் செய்வதும் எப்போதும் உடன் இருப்பதும் அவரின் தொலைபேசி மூலமாகவும், தாசில்தார் சாந்தியின் தொலைபேசியிலேயே அனைத்து செட்டில் மட்டும் நடக்கிறதாம். மேலும் தனது கணவர் வனசாரகத்தில் தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து பணி ஓய்வுக்கு பின்னால் தனது மனைவி இரா.சாந்தி தாசில்தாராக உள்ள நிலையில் அவருடன் கைகோர்த்துக் கொண்டு அனைத்து வேலைகளிலும் அரசு கோப்புகளை ஆய்வு செய்வது. சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களிடம் மாதம். மாதம் லஞ்சம் மாமூல் வாங்குவது தாசில்தார் சாந்தி கண் அசைத்தால் பட்டா, பெயர் மாற்றுதல் தொடர்பான பல்வேறு சான்றிதழ்களுக்காக வரும் பயனாளிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு லஞ்ச லாவண்யா சூசகமாக பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாணியம்பாடி தாசில்தார் இரா.சாந்தி சாமானிய மக்களின் வரிப்பணத்தில் வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்கிறார் ஆனால் சிறு, சிறு பணிகளுக்கு கூட லஞ்சம் வாங்குவதே இவருடைய வாடிக்கையாக உள்ளதாம். இவரை ஏதாவது அலுவலக ஊழியர்கள் கேள்வி கேட்டால் ஜாதியைப் பற்றி பேசி திட்டுவதும் தரை குறைவாக பேசுவதும் போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறாராம். மேலும் தாசில்தார் சாந்தி செய்யும் ஊழல்கள் தில்லுமுல்லு வேலைகள் பற்றிய தகவல் வெளியே கசிந்திட கூடாது என்பதற்காக சரிவாரியாக அலுவலகத்திற்கு வருவதில்லையாம் இதனால் மக்கள் பணிகள் பல்வேறு கோப்புகள் கையெழுத்து இடாமல் மாத கணக்கில் தேங்கியுள்ளதால் அலுவலகத்திற்கு வரும் பயனாளிகள் இந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் இருக்கிறாரா?. இல்லையா?. என்று எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. நாங்கள் தாசில்தாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் தொலைபேசி எடுப்பதில்லை நேரில் வந்து அலுவலகத்தில் பார்த்தாலும் ஆள் இருப்பதில்லை ஆனால் எங்களிடம் பணம் மட்டும் வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்கிறார். அல்லது நேரில் வருகிறேன் விசாரணைக்காக அப்போது பணம் கொடுத்தால் போதும் என்று கூறுகிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடம் பயனாளிகள் நாள்தோறும் வந்து கேட்டுக் கொண்டு போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தாசில்தார் இரா.சாந்தியை பொறுத்தவரையில் தாசில்தார் சீட்டில் உட்கார்ந்து எப்பொழுதும் வேலை பார்க்க மாட்டாராம். அப்படி ஏதோ தவறி பணிக்கு வந்தாலும் இரவு 7. மணி முதல் இரவு 9 மணி வரையில் பணி புரிகிறாராம். அதிலும் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வருவதாக பயனாளிகள் புகார் கூறுகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் ஒருவர் பணியில் உள்ளாரா.? என்பது சந்தேகமாக உள்ளது. ஏன் என்றால்.? அவரை நேரில் சென்றாலும் பார்க்க முடியவில்லை!. போனில் தொடர்புகொண்டாலும் போனை எடுப்பதில்லை!. என்பதால் மக்கள் பெரும் அவதிபடுவதாக குற்றசாட்டு தெரிவித்து வருகின்றனர். பொது மக்களிடம் நேரிடையாக தொடர்பில் உள்வர்களுக்கு தமிழக அரசு மக்கள் வரிப்பணத்தில் அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறது. அதில் மக்கள் எளிதில் தொடர்பு கொள்ள அரசு ஊழியர்களுக்கு மாதம் 1000.00 ரூபாய் செலவில் செல்போன் பயன்படுத்த கொடுக்கிறது. அதுவும் தாசில்தாருக்கு அதிக சலுகைகள் வழங்குகிறது. ஏன் என்றால்.? மக்கள் குறைகளை உடனடியாக களைய வேண்டும் என்ற எண்ணத்தில்!. வாகன வசதிகள், ஒயர்லஸ் வசதி, டெலிபோன் வசதி, குளிர்சாதன வசதி, போன்ற எண்ணற்ற வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. எதற்கா என்றால் தாசில்தாரிடம் மக்கள் 24 நான்கு மணிநேரமும் எளிதில் தொடர்பு கொண்டு குறைகளை கூறவேண்டும் என்ற நிலையில்!. வாணியம்பாடி தாசில்தார் இரா.சாந்தி அவர்கள் மேற்கண்ட அரசு சலுகைகளை அனுபவித்துக்கொண்டு பொது மக்கள் போன் செய்தால் எடுப்பதில்லையாம்!. அப்போது அவருக்கு போன் எதற்க்கு.? மக்களின் குறைகளை கேட்க பயன்படாதபோது எதற்க்கு?. அவருக்கு மாதம் போன் செலவிற்காக 1000. ரூபாய்?. நேரிலும் பார்க்க முடியவில்லை!.. போனிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை!. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாணியம்பாடி தாசில்தாருக்கு அறிவுறுத்த வேண்டும். அவருக்கு அறிவுறை வழங்க வேண்டும். மற்றும் அரசு செல்போன் எண்ணில் பொது மக்கள் பலமுறை தொடர்பு கொண்டாலும் பயனாளிகளின் அழைப்பை ஏற்காமல் இருப்பது தவறு. என்பதையும் விளக்க வேண்டும் ஒரு வேலை இந்த விதிமுறைகளை வாணியம்பாடி தாசில்தார் இரா.சாந்தி அறியாமல் கூட இருக்கலாம் பாவம்!. அந்த அறியாமையை அவருக்கு விளக்க வேண்டும் காசு மணி துட்டு மணி, மணி என்ற நோக்கத்திலே செயல்படும் தாசில்தார் சாந்தி 24 மணி நேரமும் லஞ்சம், லஞ்சம் கொடுத்தால் போதும் எந்த வேலையும் சுலபமாக செய்து கொடுப்பார் என வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் பேசப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நமது செய்தியாளர் விசாரித்தபோது தாசில்தார் இரா.சாந்தி அனைத்து தரப்பினரும் அவர் நன்றாக பணியாற்றி வருகிறார் உங்கள் ஊரில் தாசில்தார் சாந்தியை நன்றாக பாராட்டி வருவதாக சொல்கிறாரே அது உண்மையா என்று கேட்டபோது எது லஞ்சம் வாங்குவதில் என்று நமட்ட சிரிப்புடன் சொல்லுகின்றார் வட்டாட்சியர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் நமக்கு கிடைத்த தகவலை எழுதியுள்ளோம்.
இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர், தெ.பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ். அவர்கள் துரிதமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாணியம்பாடி வட்டாட்சியர் பகுதி மக்கள் வேண்டுகோள் ஆகும்..
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அரசுத் துறைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தி கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் வரை கைப்பற்றி வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கும் பதிந்து அவர்களை சிறைக்கும் அனுப்பி வருகின்றனர். அதேபோன்று திடீரென வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டால் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வரும் சாந்தி தனது கணவர் மூலம் லஞ்சம் லாவண்யத்தை சாதிக்கும் ஊழல் பட்டியல்கள், லஞ்ச லாவண்யங்கள் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அத்துடன் அவரையும், அவரது கணவரையும் கையும் களவுமாக பிடித்து இருவர் மீது வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் காப்பு மாட்டி சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.