இந்தியா
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, பஞ்சாப், சத்தீஷ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.