வங்கி லாக்கரில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் விற்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய வங்கி உதவி மேலாளர் கைது!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில்

பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில்
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். பெரும்பாலானார் விவசாயிகளாக இருப்பதால் தங்கள் குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களுக்காக குறைந்த வட்டிக்கு தங்களது நகைகளை இந்த வங்கியில் அடமானமாக வைப்பது வழக்கம்.

இந்நிலையில், வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் அதாவது சுமார் 70 பவுன் தங்க நகைகள் காணவில்லை

என வங்கி மேலாளர் கிறிஸ்டோபர், வங்கி மண்டல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி வங்கியில் ஆய்வு மேற்க்கொண்டனர்
இதில் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள தங்க நகைகளுக்கும் கடன் பெற்ற நபர்களின் எண்ணிக்கையும் வித்தியாசம் தெரியவந்தது.
இதில் வங்கி லாக்கரில் வைக்க பட்ட சும்மர் 580 கிராம் 70பவுன் தங்க நகைகள் மாயமானதை கண்டுபிடித்தனர் .
இதையடுத்து ஆய்வு செய்த அலுவலர்கள் நகைகள் இல்லாததை மண்டல அதிகாரிக்கு தகவல் கூறினார்கள். அதன் பின்பு
அவர்களும் வங்கிக்கு வந்து பார்வையிட்டனர் தொடர்ந்து வங்கி பணியாளர்களிடம் விசாரணை செய்ததில் முறையான பதில் கூறாமல் முன்னுக்குப் பின் முரணாக கூறிய நிலையில் வங்கியின் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .
இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம் முதற்கட்டமாக போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் காவல்துறையினருக்கு
பேங்க் ஆப் பரோடா வங்கியின் உதவி மேலாளர் கணேசன் மீது சந்தேகம் எழுந்துள்ளது.தொடர் விசாரணை செய்ததில் வங்கி லாக்கரில் இருந்த நகைகளை உதவி மேலாளர் கணேசன் அடமானம் வைத்த நகைகளை திருடி குற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து வங்கியில் நகைகளை திருடி மோசடி செய்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்பி வைத்த
சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.