வருவாய்த்துறை

வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கும் லஞ்ச பணத்திற்கு உரிய ரசீது வழங்க கோரிக்கை! அதிர்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

வட்டாட்சியர் அலுவலகத்தில் வாங்கும் லஞ்சத்திற்கு உரிய ரசீது வழங்க கோரிக்கை விடுத்துள்ள ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு குழு!


பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடி கட்டி பறக்கும் லஞ்சம் ஊழல் முறைகேடு!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்காமல் வழங்கப்படுவதில்லை என வாங்கப்படுவதாக என தொடர்ந்து சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது வட்டாட்சியர் அலுவலகம் மூலம் வழங்கும் ஆன்லைன் பட்டா இலவச வீட்டு மனை பட்டா முதியோர் ஓய்வூதியம் இறப்புச் சான்றிதழ் என ஒவ்வொரு சான்றிதழ் வழங்க எவ்வளவு பணம் லஞ்சம் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது .
ஆகவே சமூக ஆர்வலர்கள் பொதுமக்களை ஒன்று சேர்த்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு
லஞ்சம் வாங்குவதற்கு அரசு சார்பில் உரிய லஞ்ச ரசீது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
ஏனென்றால் லஞ்ச ஊழல் இல்லாமல் இந்த அலுவலகம் இருக்காது என்பதால் இதை வெளிப்படையாக அறிவித்து செய்வதே நாளைய சமுதாயம், நாளைய தலைமுறை வாழ்வதற்கும்,வளர்வதற்கும் நன்மை பயக்கும் சமூக ஆர்வலர்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.
பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ஊழல் முறைகேடுகளில் ஈடுபடும் ஒரு சில அதிகாரிகள் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என
இரா சதீஷ்குமார்
மாநில செயலாளர்
சட்ட விழிப்புணர்வு அணி
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்,குழு ஒருங்கிணைப்பாளர்
ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு குழு. கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button