வனத்துறை

வனத்துறை அலுவலகத்தில் நடந்தது கொலைதான்! தற்கொலையாக மாற்ற முயற்சிக்கும் முக்கிய குற்றவாளிகளான உடுமலை மற்றும் அமராவதி வன சரகர்கள் மீது
நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் (PCCF).
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்!?
நடந்தது என்ன!
அதிர்ச்சித் தகவல்


வன உயிரின பாதுகாப்புச் சட்டம் -1972 (திருத்தப்பட்டது 2022)ன் படி அரசால் தடை செய்யப்பட்ட வன உயிரினங்கள் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுதல், துன்புறுத்துதல், வாழ்விடங்களை அழித்தல், வீட்டில் வளர்த்தல் போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 51 A (ஜி) படி வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமக்களின் அடிப்படை கடமையாகும்.எனவே அனைத்து மாவட்ட பொதுமக்கள் வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை 1800 599 7699 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.மேலும் புகார் தெரிவிப்போர் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினங்கள் கட்டுப்பாட்டுத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம்  வன அலுவலராக ராஜேஷ் இருக்கிறார்.


உடுமலை வனச்சரக அலுவலராக வாசு என்பவர் இருக்கிறார் .


இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டுப் பிரிவின் மண்டல அலுவலகத்தில் பணியில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் தற்போது அமராவதி வனச்சரகராக புகழேந்தி தற்போது பணியில் பணியில் இருக்கிறார்.


கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு


கேரள மாநிலத்தில் உள்ள
மேல் குருமலை பழங்குடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மீது
கஞ்சா கடத்தியதாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், கடந்த ஜூலை 29 அன்று உடுமலை நீதிமன்றம் மாரிமுத்துவை விடுதலை செய்தது .
29-ஆம் தேதி பிற்பகல்
கடந்த 29/ 7 /2025 அன்று
கேரள மாநிலத்தில் உள்ள
மேல் குருமலை பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 58). உடுமலைப்பேட்டை நீதிமன்றத்திற்கு கஞ்சா வழக்கு சம்பந்தமாக ஆஜராகி உள்ளார். விசாரணையில் மாரிமுத்து கஞ்சா வைத்திருந்ததற்கான ஆதாரம் இல்லாததால் உடுமலை நீதிமன்றம் அவரை விடுவித்தது.
29 )7/2025 அன்று மதியம் 2:00 மணிக்கு உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு செல்லும் பேருந்தில் மாரிமுத்து  மேல் குரு மலை பழங்குடி கிராமத்திற்கு சென்றுள்ளார்.
ஆனால் கஞ்சா வழக்கில் இருந்து மாரிமுத்து விடுதலை ஆனதை தாங்கிக் கொள்ள முடியாத உடுமலை வனச்சரகர் வாசு மற்றும் அமராவதி வன சரகர் புகழேந்தி ஆகிய இருவரும்  மாரிமுத்துவை ஏதாவது வழக்கில் உடனே கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் அதுவும் குறைந்தது மூன்று வருடம் வெளியே வர முடியாத வழக்கு பதிவு செய்ய வேண்டும்  முடிவு செய்த இருவரும் மாரிமுத்து புலி பல் வைத்திருப்பதாக ஒரு கட்டுக் கதையை உருவாக்கி
உடுமலைப்பேட்டையில் இருந்து மூணாறு பேருந்தில் செல்லும் மாரிமுத்து தமிழ்நாட்டில் இருந்து புலி பல்லை கடத்தி கேரளாவுக்கு தப்பி வருவதாகவும்
ஆகவே மூணாறுக்குச் செல்லும்  பேருந்தை நிறுத்தி 6 நம்பர் இருக்கையில் உட்கார்ந்து இருக்கும்  மாரிமுத்துவை பிடித்து  வைக்குமாறும் அது மட்டும் இல்லாமல் அவர் வைத்திருக்கும் பையில் புலி பல் இருப்பதாகவும் அதையும் பத்திரமாக வாங்கி  வைக்குமாறும் நாங்கள் அங்கு வந்து கொண்டிருக்கிறோம் என்றும் 
உடுமலை வனச்சரகர் வாசு மற்றும் அமராவதி வனச்சரகர் புகழேந்தி ஆகியோர்
கேரள மாநில சின்னாறு வன சோதனைச் சாவடிக்கு தகவல் கொடுத்து விட்டு அமராவதி வனச்சரகர் புகழேந்தி தன்னுடைய  வாகனத்திலும்   உடுமலை வனச்சரகர் வாசு தன்னுடைய வாகனத்திலும் தனித்தனியாக சென்றுள்ளனர். அமராவதி வனச்சரகர் வாகனத்தை  நவீன் குமார்  சென்றுள்ளார்
உடுமலை வனச்சரகர் வாசு வாகனத்தை  தற்காலிக ஊழியர் அங்கு குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.
சரியாக நான்கு மணிக்கு சின்னாறு கேரளா வன சோதனை சாவடிக்கு  சென்றுள்ளனர். கேரளா வன சோதனை சாவடியில் பணியில் இருந்த வன காவலர்கள்  உடுமலை வனச்சரகர் வாசு மற்றும் அமராவதி வனச்சரகர் புகழேந்தி இடம்  மாரிமுத்துவை நல்ல நிலையில் ஒப்படைத்து விட்டதாக எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டு  அவன் பின்பு அந்த  மாவட்ட வன அதிகாரிக்கும் மற்றும் கேரளா மாநில வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் உடுமலை மற்றும் அமராவதி வன சரகர்கள் திருப்பூர் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கொடுக்காமல் மாரிமுத்துவை சின்னாறு வன அலுவலகத்தில்  இரவு 10 மணி வரை வைத்து விசாரணை என்ற பெயரில் அவரை அடித்து உதைத்து உள்ளனர். அதன் பின்னர்
உடுமலை வன சரகர் வாசு மற்றும் அமராவதி வனச்சரக புகழேந்தி ஆகிய இருவரும் வாகனத்தில் மாரிமுத்துவை ஏற்றிக்கொண்டு ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக  அலுவலகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். 
ஆனால் இது சம்பந்தமாக வனச்சரகர் வாசு மற்றும் புகழேந்தி ஆகிய இருவரும் திருப்பூர் மாவட்ட வன அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்த தகவலும் கொடுக்காமல்
இரவு இரண்டு மணி வரை மாரிமுத்துவை சுமார் ஆறு பேர் அடித்து உதைத்து காலால் மாரிமுத்துவின் நெஞ்சில் மிதித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் வலி தாங்க முடியாத மாரிமுத்து உயிரிழந்துள்ளார்.
உடனே மாரிமுத்து உயிரிழந்ததை மறைப்பதற்காக வன அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் மாரிமுத்துவை போட்டுவிட்டு
உடுமலை வன சரகர் வாசு மற்றும் அமராவதி வன சரகர் புகழேந்தி ஆகிய இருவரும்
தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் நடத்தி வருகின்றனர்.

கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும்
அடித்து உதைத்து கொலை செய்ததை தற்கொலை செய்ததாக மாற்ற உடுமலை வன சரகர் வாசு மற்றும் அமராவதி வன சரகர் புகழேந்தி ஆகிய இருவரும் முழு பூசணிக்காய் சோத்தில் மறைக்க முயற்சிப்பது போல் வனச்சரக அலுவலகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டதாக கூறியதை மறைந்த  மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இது கொலைதான் எனவும் இரவு பணியில் இருந்த அனைவரையும் பணியிட நீக்கம் செய்ய வேண்டும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என

மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
உடனே உடுமலை காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் இருவருக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாரிமுத்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு உடுமலை  மாஜிஸ்திரேட்டு நித்யகலா ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை  வனச்சரக அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதன்பின்பு
உடுமலை மாஜிஸ்திரேட்டு நித்யகலா முன்னிலையில் மருத்துவர் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடுமலை ஆர்.டி.ஓ., குமார், டி.எஸ்.பி., நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் மாரிமுத்துவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவரது குடும்பத்தினர் அடையாளம் உறுதிப்படுத்திய பின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அங்கு திரண்டிருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பிரேத பரிசோதனை கூடம் முன் அமர்ந்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாரிமுத்துவின் உறவினர்கள், பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும். இந்த வழக்கை வன்கொடுமை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல் குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டார்.

ஆனால் ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வன அலுவலகத்தில் இரவு பணியில் இருந்த
பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாரிமுத்துவை அடித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் முக்கிய குற்றவாளிகளான உடுமலை வன சரகர் வாசு மற்றும் அமராவதி வன சரகர் புகழேந்தி ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட வன அலுவலர் புகார் கொடுத்து இருப்பதாகவும் ஆனால் அந்த புகாரின் மீது

முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஸ்ரீ சீனிவாச ரெட்டி (ஐஎப்எஸ்)  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உடுமலை வன அலுவலகத்தில் மாரிமுத்துவை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததால் தான் இறந்ததாகவும் இது கொலைதான் தற்கொலை இல்லை என  கூறிய சமூக ஆர்வலர்கள் சில அதிர்ச்சி தரும் தகவலையும் தெரிவித்தார் .


அது என்னவென்றால்
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு 29/07/25 அன்று

பேரணியானது உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக நகராட்சி மன்றத்தில் நிறைவடைந்தது .

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனசரகம் பகுதியில் உடுமலை புலிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர் பேரணி நடைபெற்றது.  19 பள்ளிகள் மற்றும் 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

19 பள்ளிகள் மற்றும் 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அன்று முழுவதும் திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் உடுமலை மாவட்ட வன உலகத்தில் தான் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் மாரிமுத்துவை கைது செய்து அழைத்து வர உடுமலை மற்றும் அமராவதி வன அலுவலர்கள் சென்றதும் திருப்பூர் மாவட்ட வன அலுவலருக்கு நன்றாக தெரியும் என அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றார் சமூக ஆர்வலர். அதுமட்டுமில்லாமல்
உடுமலையிலிருந்து மூணார் செல்லும் பேருந்தில் செல்லும் மாரிமுத்து விடம் புலி பல் இருந்ததாக கூறும் உடுமலை வன சரகர் வாசு மற்றும் அமராவதி வன சரகர் புகழேந்தி ஆகிய இருவரும் கேரளா சின்னாறு சோதனைச் சாவடிக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறை சோதனை சாவடி மற்றும் தமிழ்நாட்டு எல்லைக்குள் உள்ள சின்னாறு வன சோதனைச் சாவடி மற்றும் 9/6 சோதனைச் சாவடி ஆகிய மூன்று சோதனைச் சாவடிகளிலும் தகவல் கொடுக்காமல் கேரளா மாநில சின்னாறு  சோதனை சாவடியில் உள்ள வன அலுவலர்களுக்கு தகவல் கொடுத்து அங்கு போய் அவர்களை கைது செய்து அழைத்து வந்ததாக கூறுவதற்கு என்ன காரணம்!?
அதுமட்டுமில்லாமல் அழைத்து வந்த மாரி  உடுமலை வன அலுவலகத்தில் விசாரணை செய்தபோது திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷுக்கு நன்றாக தெரியும் என்றும் ராஜேஷ் இரவு முழுவதும் உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தில் தான் இருந்தார் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.

வன அலுவலகத்தில் தான் இருந்தார் ஆனால் அடுத்த 12 மணிநேரத்தில் 30.07.2020ம் தேதியில் தலைமையிடத்தில் இருக்கும் திரு பே ராஜேஷ் துணை இயக்குநர் ஒருவர் தொலைபேசி மூலமாக கேரளா வனத்துறையின் உயர் அலுவலர் தகவல் தெரிவிக்கின்றனார்.
ஆனால் குற்றாவளியாக ஒரு துறை மூலமாக நல்ல நிலையில் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு வனத்துறை உயர் அலுவலர் மற்றும் துணை இயக்குனர் மாரிமுத்துவை விசராணை செய்ய செல்ல வில்லை என்பது தான் இந்த இறப்பின் முழுக்காக முழுகாக பொய்யான தகவல்களை தெரிவித்து வருகின்றனார்.
உடுமலை வன அலுவலகத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாரிமுத்துவை வன அலுவலர் வாசு மற்றும் அமராவதி வன அலுவலர் புகழேந்தி மற்றும் பத்துக்கு மேற்பட்ட
வன காவலர்கள் சேர்ந்து அடித்து உதைத்து காலால் மிதித்து சித்திரவதை செய்ததில் வலி தாங்க முடியாமல் மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது எனவும் இது ஒரு கொலை தான் என்றும் தற்கொலையாக மாற்ற திருப்பூர் மாவட்ட வன அலுவலர் மற்றும் உடுமலை மற்றும் அமராவதி வன அலுவலர்கள் வாசு மற்றும் புகழேந்தி ஆகியோர் முயற்சி செய்து வருவதாகவும்  குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் உடுமலை வனச்சரகர் வாசு மற்றும் அமராவதி வனச்சரகர் புகழேந்தி ஆகிய இருவர் மீதும்
கொலை வழக்கு பதிவு செய்யாமல் இருப்பதற்கு
காரணம் என்னவென்றால் உடுமலை வன சரகராக தற்போது பணியில் இருக்கும் வாசு இதற்கு முன்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியில் இருந்தார்  என்றும் இதனால் சென்னையில் உள்ள வனத்துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாகவும்  இவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் ஆக்கி வருவதாகவும். அதுமட்டுமில்லாமல் உடுமலை வன சரகர் வாசு திருவள்ளுவர் மாவட்டத்திலிருந்து உடுமலைக்கு வருவதற்கு சுமார் 10 லட்சம் வரை உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து கொடுத்து தான் வந்ததாகவும் அதனால்தான் உயர் அதிகாரிகள் உடுமலை வன சரகர் வாசு மீது  நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.

எது எப்படியோ
திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில்  உடுமலை வன அலுவலகத்தில் வைத்து
மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்த   மாரிமுத்துவை
அடித்து உதைத்து மிதித்து சித்தரவதை செய்து கொலை செய்துவிட்டு தற்கொலை என மாற்ற முயற்சிக்கும்

திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் மற்றும் உடுமலை வனச்சரகர் வாசு மற்றும் அமராவதி வனச்சரகர் புகழேந்தி ஆகிய இருவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சமூக நீதி காவலன் என போற்றப்படும்  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடுமலை காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என மறைவால் பழங்குடி இன மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

.

வன அலுவலகத்தில் தான் இருந்தார் ஆனால் அடுத்த 12 மணிநேரத்தில் 30.07.2020ம் தேதியில் தலைமையிடத்தில் இருக்கும் திரு பே ராஜேஷ் துணை இயக்குநர் ஒருவர் தொலைபேசி மூலமாக கேரளா வனத்துறையின் உயர் அலுவலர் தகவல் தெரிவிக்கின்றனார்.
ஆனால் குற்றாவளியாக ஒரு துறை மூலமாக நல்ல நிலையில் பெற்றுக் கொண்டு தமிழ்நாடு வனத்துறை உயர் அலுவலர் மற்றும் துணை இயக்குனர் மாரிமுத்துவை விசராணை செய்ய செல்ல வில்லை என்பது தான் இந்த இறப்பின் முழுக்காக முழுகாக பொய்யான தகவல்களை தெரிவித்து வருகின்றனார் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பொறுத்திருந்து பார்ப்போம் முதன்மை வன பாதுகாவலரின் நடவடிக்கையை.

Related Articles

Back to top button