வனப்பகுதியில் மது அருந்திவிட்டு மது போதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய வனச்சரக அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பார்களா கோவை மாவட்ட வனச்சரக உயர் அதிகாரிகள்!?

கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வனப்பயிற்சி கல்லூரியில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் சுரேஷ் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வனச்சரக அலுவலராக பணிபுரியும் மணிகண்டன் என்பவரும் 6.5.2025 தேதியன்று இரவு வனப் பகுதியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு 7.5.2025 அன்று அதிகாலையில் TN 38 CV 9813 என் கொண்ட (Suzuki brezza ) சொகுசு காரை

மது போதையில் தானே தானே வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்தபோது உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போடிபட்டி உடுமலை மூணார் சாலையில் அதிவேகமாக வந்த கார் வனச்சரக அதிகாரியின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி

அதிவேகமாக புளிய மரத்தில் மோதியதில் காரின் முன் பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கி விட்டது.

வனச்சரக அதிகாரியின் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதன் பின்பு விபத்து நடந்த காரை
உடுமலை காவல் நிலைய காவல்துறையினர்


உடுமலை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து நிறுத்திவிட்டனர்.
இந்த விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் அந்தப் பகுதியில் மற்ற வாகனங்கள் எதுவும் சொல்லாமல் இருந்ததால் எந்த அசம்பாவிதமும் உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
ஆனால் விபத்து நடந்து இரண்டு தினங்கள் ஆகியும் மது போதையில் காரை ஓட்டி வந்த வனச்சரக அதிகாரி மீது எந்தவித வழக்கு பதிவு செய்யாமல் உடுமலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் காலதாமதம் செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர். இது சம்பந்தமாக அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது
கோயமுத்தூர் வனச்சர அலுவலராக பணிபுரியும் சுரேஷ் நள்ளிரவு வேளையில் மது அருந்துவதற்காக உடுமலைப்பேட்டை வனப்பகுதிக்கு சென்றதாகவும்
வனப்பகுதியை காப்பாற்ற வேண்டிய இரண்டு வனச்சரக அலுவலர்கள் சட்டவிரோதமாக வனப்பகுதியில் மது அருந்திவிட்டு மது போதையில் காரை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி இருப்பதால் இவர்கள் இரு மீதும் கோவை மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகள் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சார்பாகவும் விவசாய சங்கங்கள் சார்பாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




