வருவாய்த்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியின் அவல நிலை!இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கொடுக்கும் மனுக்கள் மீது தவறான தகவலை கூறி தொடர்ந்து நிராகரித்து வரும் அருப்புக்கோட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?!
2021 திமுக கட்சி வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்பு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஏழை, எளியோருக்கு 6,52,559 இலவச வீட்டுமனை பட்டாவருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளதாகவீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விருதுநகரில் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி பயனாளிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 40,148 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசியபோதுதமிழக முழுவதும் மாவட்டம் தோறும் கள ஆய்வை தொடர்ந்து நடத்தி வருவதாகவும்மக்கள் குறைகளை தீர்ப்பது ஒரு அரசின் கடமை. வருவாய்த் துறைக்கான உத்தரவு பிறப்பித்து அதில் வீடற்ற ஏழை மக்களுக்கு இலவசமாக எந்த அளவிற்கு இடம் வழங்க முடியுமோ அந்த அளவிற்கு வழங்க உத்தர விட்டதாகவும் நத்தம் புறம்போக்கு நிலங்கள் போதுமான அளவிற்கு இல்லை.அதனால் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை நத்தமாக வகை மாற்றம் செய்து வீடற்ற ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க உத்தர விட்டதாகவும் அந்த நடவடிக்கையால் 2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் இதுவரை 10,03,824 பேருக்கு இ.பட்டாக்கள் வழங்கியிருப்பது மிகப்பெரிய சாதனை என்றும் நில உரிமையை வழங்குவதில் திராவிட மாடல் ஆட்சி தலைசிறந்த ஆட்சியாக நடந்து வருகிறது. சமூகத்தில் சமூக நீதியும் பொருளாதாரத்தில் சம நீதியும் வழங்க தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே திராவிட இயக்கம். அதிக நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய ஆட்சி திமுக ஆட்சி என விருதுநகரில் நடந்த அரசு விழா மேடையில் பேசியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனுவின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டுபட்டா உண்மையிலேயே வழங்கினார்களா இல்லையா என்பது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.
உண்மையில் நடந்தது என்னவென்றால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கொடுத்த ஆயிரக்கணக்கான மனுக்கள் மீது
அருப்புக்கோட்டை வட்டாட்சியர்
மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையர் ஆகியோர் உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் உங்கள் மனு நிராகரிக்கப்பட்டது என தொலைபேசி எண்ணில் மெசேஜ் அனுப்பி விட்டு எப்போதும் போல் அருப்புக்கோட்டை வருவாய்த்துறை தங்களது லஞ்ச வசூல் வேட்டையில் தீவிரமாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதற்கு உதாரணமாக
அருப்புக்கோட்டை தாலுகா டி மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் பயனாளி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4/11/2024 அன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் அன்று இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்துள்ளார். (TN/REV/VNR/P/COLLMGDP/04NOV 24/10426703)அந்த மனு மீது
அருப்புக்கோட்டை வட்டாட்சியர் செந்தில்வேல் மற்றும்T. மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவண சாமிவருவாய் ஆய்வாளர் பாத்திமா நில அளவையர் பிச்சை ஆகியோர் மனுதாரரை பற்றி சரியாக விசாரிக்காமல் கள ஆய்வு மேற்கொள்ளாமல் பட்டா கேட்டு விண்ணப்பித்த இடத்தில் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று மனுதாரரிடம் விசாரணை செய்யாமல் கிராமத்தில் யாரோ ஒருவரிடம் விசாரணை செய்தது போல் அறிக்கையை தயார் செய்து அனுப்பி உள்ளார்.
.அதன் பின்பு 19/11/2024 அன்று மனுதாரர் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில்உங்கள் மனு எண்: TN/REV/VNR/P/COLLMGDP/04NOV24/10426703 உங்கள் மன நிராகரிக்கப்பட்டது என்றும் மேலும் விவரங்களுக்கு 1100 ஐ அழைக்கவும் அல்லது இங்கே கிளிக் செய்யவும் https://cmhelpline.tnega.org – TNGOVT என மனு கொடுத்த பெண்ணின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. உடனே 1100 எண்ணிற்கு தொடர்பு கொண்டு மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கேட்டபோது மனுதாரரின் கணவர் மற்றும் தந்தையின் பெயரில் வீடு மற்றும் நிலம் இருப்பதாகவும் அதனால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க முடியாது எனவும் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.ஆகவே ஏதாவது தகவல் தேவை என்றால் அருப்புக்கோட்டை ஆட்சியர் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும் என கூறினர். அதன் பின்பு அருப்புக்கோட்டை வட்டாட்சியர் செந்தில் வேல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் ஏதும் மனு மீது விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் படி மனுவை நிராகரித்து அனுப்பியுள்ளோம் என தகவல் தெரிவித்து போனை கட் செய்துவிட்டார்.எது எப்படியோ விருதுநகர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் இது போன்ற அலட்சியப் போக்கான செயல்ஏழை எளிய சாமானிய வீடு இல்லாத குடும்பங்களை ஏமாற்றும் மோசடி வேலை என்றும் அதுவும் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் இருக்கும் மாவட்டத்தில் குறிப்பாக அமைச்சரின் சொந்த தொகுதி மக்களுக்கே இது போன்ற நிலை என்றால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு வருவாய்த்துறை மீது எப்படி நம்பிக்கை வரும் என்றும் மொத்தத்தில் அருப்புக்கோட்டை வருவாய் துறை செயல்படாமல் கோமாவில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாகமீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலரின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பதாகவும் பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதாகவும் மிரட்டும் தூணியில் பதில் சொல்வதாகவும் கிராமப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் டி மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவணா சாமி ராணுவ கோட்டாவில் கிராம நிர்வாக அலுவலராக வந்தவர் என்பதால் லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி என அவரே தன்னைத்தானே கூறிக்கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் எந்த ஒரு மனு மீதும் உரிய ஆய்வு மேற்கொள்ளாமல் அருப்புக்கோட்டையில் ஏதோ ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டது போல் அறிக்கையை அருப்புக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி விடுவதும் அதேபோல் பத்திரப்பதிவு செய்த இடங்களுக்கு பட்டா மாறுதல் கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு ஒரு வருடம் ஆகியும் இதுவரை அந்த பட்டா மாறுதல் சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டிருக்கிறார் என பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் குற்றம் காட்டுகின்றனர்.அது மட்டும் இல்லாமல் T.மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலகம் கட்டிடம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது வரை அலுவலக கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்து பல ஆண்டுகளாக இடிந்து விழும் நிலையில் காட்சி பொருளாக இருப்பதால் அந்த கட்டிடத்தை அகற்றி புதிதாக கிராம நிர்வாக அலுவலகத்தை கட்டுவதற்கான முயற்சியை வருவாய்த்துறை அதிகாரிகள் எடுக்காததால் டி.மீனாட்சிபுரம் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலகம் இல்லாததால் ஆகையால் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வராமலேயே கிராமத்தில் உள்ள அதிமுக கட்சியை சேர்ந்த இரண்டு மூன்று பேரிடம் தொலைபேசியில் எண்ணை கையில் தொடர்பு கொண்டு அவர்கள் சொல்வதை அப்படியே எழுதி வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு கிராமத்திற்கு வராமலேயே உல்லாசமாக சுற்றி வருவதாகவும் கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அப்படியே மீனாட்சிபுரம் கிராமத்திற்கு விஏஓ சரவண சாமி வந்தாலும் அங்கு உள்ள இ சேவை மையத்தில் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் உட்கார்ந்து விட்டு சென்று விடுவது வழக்கமாம். அதன் பின்பு அவருக்கு தொலைபேசியில் யார் தொடர்பு கொண்டாலும் தொலைபேசியை எடுத்து பேச மாட்டார். இவர் 2025 ஜூன் மாதம் பணி ஓய்வு பெற இருப்பதால் மக்கள் மற்றும் அதிகாரிகள் யாரையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஏஓ சரவணா சாமி மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு சில ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் இவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பரவலாக பேசப்படுகிறது. திமுக ஆட்சி மற்றும் கட்சிக்கு உள்ள நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட வருவாய்துறை மற்றும் குறிப்பாக அருப்புக்கோட்டை வட்டாட்சியர்T. மீனாட்சிபுரம் கிராம நிர்வாக அலுவலர் சரவண சாமிவருவாய் ஆய்வாளர் பாத்திமா நில அளவையர் பிச்சை ஆகியோர் மீது தமிழக முதல்வர் உடனடியாக பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக உள்ளது.