காவல் செய்திகள்
வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யாத வாடிப்பட்டி காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.
மதுரை வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞரை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிபவர் சந்திரசேகர்
இவரை முன்பகை காரணமாக அடையாளம் தெரியாத சிலர் தாக்கியதால் உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகியும் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யவில்லை எனக் கூறி காவல் துறையை கண்டித்து வாடிப்பட்டி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வழக்கறிஞர் சந்திரசேகரை தாக்கிய குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.