காவல் செய்திகள்

வழக்கு பதிவு செய்ய போடி துணை காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டும் வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் சின்னமனூர் காவல் உதவி ஆய்வாளர்கள்!!நடவடிக்கை எடுப்பாரா தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!


Chinnamanur – Bodinayakanur Sub Division Police Stations in Theni
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் காவல் உட்கோட்டம் .

சின்னமனூர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.


சின்னமனூர் ஸ்ரீரங்கம் தெருவில் வசிக்கும் காந்தி ராஜன் வயது 76 . இவருக்கு கதிரவன் என்ற ஒரு மகனும் கலைச்செல்வி பொன்னி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது மகன்  காதல் திருமணம் செய்து கொண்டதால் கடந்த 13 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு விலகி தனியாக வாழ்ந்து வருகிறார்.
இவருடைய மகள் பொன்னி கலைச்செல்வி இரண்டு பேரும் திருமணம் செய்து தனித்தனியாக கணவருடன் வாழ்ந்து இந்த நிலையில் காந்தி ராஜன் தன் மனைவியுடன் சின்ன மனூர் ஸ்ரீரங்கம் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு 25/4/2022 அன்று காந்தி ராஜன் மனைவி உடல்நிலை சரியில்லாமல் களமாகிவிட்டார். உடனே இவருடைய மகள்கள் இரண்டு பேரும் வந்து தாயை அடக்கம் செய்து அனைத்து காரியங்களையும் செய்து கொண்டிருந்த மூன்றாவது நாள்  வீட்டை விட்டு ஒதுங்கி இருந்த மகன் கதிரவன் திடீரென்று 27/04/22 அன்று வீட்டிற்கு வந்துள்ளார். அன்று அவரது தந்தை காந்தி ராஜனுடன் மது போதையில் தகராறு செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல்30/04/2022 அன்று  வீட்டில் பீரோவில் இருந்த  அவருடைய தாயின்  பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு தந்தையை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு வீட்டை பூட்டி விட்டதாகவும்

தேனி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த

இது சம்பந்தமாக சின்னமனூர் காவல் நிலையத்தில்  அப்போது இருந்த ஆய்வாளர் சேகர் அவர்களிடம் காந்தராஜன்  புகார் கொடுத்துள்ளார்.

சின்னமனூர் முன்னாள் காவல் ஆய்வாளர் சேகர்
சின்னமனூர் காவல் ஆய்வாளர் துரை சுப்பிரமணியம்.

அந்த புகாரின் மீது விசாரணை என்ற பெயரில் லஞ்சம் வாங்கிக் கொண்டு புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதன் பின்பு 31/04/2022 அன்று கதிரவன் மனைவி நாகேஸ்வரி கணவரின் சகோதரிகள் அடித்ததாக  போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பின்பு புகாரின் மீது  போடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் வசந்தி அவர்கள் விசாரித்த  போது அடித்ததாக சாட்சி சொல்ல ஆட்டோ ஓட்டுநரை சொல்லச் சொல்லி உள்ளனர்.அந்த புகாரை விசாரித்த போடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் ஆட்டோ ஓட்டுநர் என்னை இதுபோன்று சொல்ல சொன்னார்கள் அவர்கள் ஆட்டோவில் என்ற போது ஸ்பீட் பிரேக்கில் அவரது தலையில் அடிபட்டதாகவும் கதிரவனின் சகோதரிகள் யாரும் அடிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து இந்த புகார் பொய்யாக புனையப்பட்டதாகவும் அதனால் புகாரில் உண்மையில்லை என்று அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து விட்டார். அதன்பின்பு 2022 மே மாதம் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் தன்னுடைய மகன் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு அடித்து துன்புறுத்துவதாக கதிரவனின் தந்தை காந்தி ராஜ் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் மீது விசாரிக்க சின்னமனூர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்ட பின்பு 01/06/2022 சின்னமனூர் காவல் நிலையத்திலிருந்து  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்த 77 வயதுடைய  காந்தி ராஜன் அவர்களுக்கு இரவு 9.15  போன் செய்து உடனே காவல் நிலையத்திற்கு வர சொல்லி அதற்கு காந்திராஜன் சார் இரவு நேரமாக உள்ளது எனக்கு வயதாகிவிட்டது காலையில் வருகிறேன் என்று கூறியுள்ளார் அதெல்லாம் முடியாது என்று சொன்ன காவல் உதவி ஆய்வாளர் உடனே வந்து ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த வயதிலும் அந்த நேரத்தில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சேர்ந்து விசாரணை என்ற பெயரில்  காந்தி ராஜனை மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் அனுப்பிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.
அதன் பின்பு 21/10 2022 வெள்ளிக்கிழமை கதிரவன் தன் தந்தை காந்தி ராஜன் தலையில் கம்பியால் அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி உள்ளார். தலையில் அடிபட்ட காந்தி ராஜன் சிறிது நேரத்தில் கை கால் செயலிழந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் உடனே காந்திராஜனை மகள்கள் இரண்டு பேரும்  அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.ஆனால் அங்கு மருத்துவர்கள் உடனே மதுரைக்கு எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர் உடனே மதுரையில் உள்ள பூமா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் இது சம்பந்தமாக 22/10/22 அன்று சின்னமனூர் காவல் நிலையத்தில் தந்தையை மகன் கதிரவன் தலையில் அடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த புகார் மீதும் சின்னமனூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் வழக்கு பதிவு செய்யாமல்  காந்தி ராஜன் மகன் கதிரவனிடம் வஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.. தலையில் அடிபட்ட காந்தி ராஜன் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் மதுரைக்கு எடுத்துச் சென்று உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியதை அடுத்து காந்தி ராஜன் இரண்டு மகள்களும் உடனே மதுரையில் உள்ள பூமா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் . அங்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து ஒரு மாதம் சிகிச்சை பெற்ற காந்திராஜன் பேசவும் நடக்கவும் ஆரம்பித்துள்ளார். அதன் பின்பு சின்னமனூருக்கு வந்த காந்தி ராஜன் தன்னுடைய சொந்த வீட்டில் இருக்கப் போகிறேன் என்று தன்னுடைய மகள்களிடம் கூறியுள்ளார் அவர் கூறியபடி அங்கேயே இருக்குமாறு கூறியுள்ளனர். ராஜராஜன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து இருந்தபோது பார்க்க வராத மகன் கதிரவன் ஏப்ரல் மே மகன் பள்ளி விடுமுறைக்கு சின்னமனூர் வந்துள்ளார். அப்போது காந்த ராஜன் மனைவி இறந்து சரியாக ஒரு வருடம் ஆன நிலையில் வீட்டில் சாமி கும்பிடுவதற்காக ஆட்களை வைத்து  வீடு முழுவதும் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார். காந்தி ராஜன் ராஜராஜன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து இருந்தபோது பார்க்க வராத மகன் கதிரவன் ஏப்ரல் மே  மாதம் பள்ளி விடுமுறைக்கு சின்னமனூர் வந்துள்ளார். அன்று இரவு மது போதையில் கதிரவன் மீண்டும் தன்னுடைய தந்தையுடன் வாக்குவாதம் செய்து வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் பணம் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு தந்தையை வீட்டை விட்டு வெளியே தள்ளி வீட்டை பூட்டி விட்டு விட்டதாகவும் உடனே 77 வயதுடைய காந்திராஜன் தன் மகளுக்கு தொலைபேசி தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெரிவித்து ள்ள உடனே தன் மகள்கள் எங்கள் வீட்டிற்கு கிளம்பி வரச் சொல்லி உள்ளனர். அதன் பின்பு மீண்டும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்
தேனி மாவட்ட  காவல் அலுவலகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   மற்றும்  கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சுகுமார்(CWC) அவர்களிடம் புகார் கொடுத்ததன் பேரில் போடி துணை காவல் கண்காணிப்பாளரை விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமா உத்தரவு பிறப்பித்த பின்பு

08/06/2023 போடி dsp யிடம் கொடுத்த புகார் மனு.

08/06/2023 அன்று போடி  துணை காவல் கண்காணிப்பாளர்  காந்த ராஜன் அவர்களிடம்  புகாரை பெற்றுக் கொண்டு புகாரின் மீது சின்னமனூர் காவல் நிலையத்தில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

போடி.DSP.பெரியசாமி

ஆனால் சின்னமனூர் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் சுப்பிரமணிமற்றும் காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன் மற்றும் காவல் உதவியாளர்  மாயன் மூன்று பேரும்  துணை காவல் கண்காணிப்பாளர் போட்ட உத்தரவின் மீது வழக்கு பதிவு செய்யாமல்  காந்திராஜனின் மகன் கதிரவனிடம் பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு  காந்தி ராஜன் மற்றும் மகள்களை வரவழைத்து விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கு பதிவு செய்யாமல் மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன் போடிநாயக்கனூர் ,ஆண்டிபட்டி காவல் நிலையங்களில் பணி புரிந்த போது இவர் மீது மாமூல் வசுள்செய்வதாகவும் அது மட்மில்லாமல் புகார் கொடுத்தால் அதன் மீது விசாரணை செய்து வழக்குப் பதிவு செய்யாமல்  பொய் புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.   தேனி மாவட்டத்தில் விஜிலென்ஸ் காவல் உதவி காவல் ஆய்வாளராக இருந்தால் இவர் நேர்மையான   காவல் அதிகாரியாக  உயர் அதிகாரிகளிடம் சொல்லி தப்பித்துக் கொண்டு வருவதாகும் அதற்சி தகவல் வந்துள்ளது.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

காவல் உயர் அதிகாரிகளின் உத்தரவின் மீது வழக்கு பதிவு செய்யாமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டி வரும் சின்னமனூர் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் அனைவர் மீதும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எது எப்படியோ கடந்த காலங்களில் தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் மற்றும் உத்தமபாளையம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பல புகார்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

அதில் குறிப்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் தற்போதுள்ள காவல் உதவி ஆய்வாளர் கோதண்டராமன் மற்றும் மாயன் இவர்கள் இருவரும் மீது புகார்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.
ஆகவே தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சின்னமனூர் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக வரும் குற்றச்சாட்டு புகாரின் மீது உண்மை தன்மையை விசாரணை செய்து காவல் உதவி ஆய்வாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலரின் கோரிக்கையாக இருக்கிறது.

எது எப்படியே காவல் நிலையங்களில் நடக்கும் உண்மைமை நிகழ்வுகளை காவல் கண்காணிப்பாளர் நேரடி தனிப் பிரிவு காவலர்கள் மறைத்து வருவருதாதால் இது போன்று கட்டப் பஞ்சாயத்து தொடர்ந்து காவல் நிலையங்களில் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்களின் குற்றச் சாட்டாக உள்ளது. ஆகயால் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து காவல் நிலையங்களுக்கு நேரடியாக சென்று ஆவண பதிவேடுகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப் பட்ட பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. பொது மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?பொறுத்திருந்து பார்ப்போம்.



Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button