மாவட்டச் செய்திகள்

வாகனமே இல்லாமல் இரண்டு வருடங்களாக ஓட்டுநர்களுக்கு சுமார் ஒன்றைக் கோடி சம்பளம் வழங்கி வரும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை!

அரசு அலுவலகங்களில் தற்காலிக ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் !
அரசு வாகனம் இல்லாமல் அரசு வாகன நிரந்தர ஓட்டுனர்கள் 13 பேருக்கு இரண்டு வருடமாக சுமார் ஒரு கோடிக்கு மேல் ஊதியம் வழங்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை!


நாட்டில் காற்று மாசை குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான சொந்த பயன்பாட்டு வாகனங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் காலாவதி வாகனச் சட்டத்தின்படி, இந்த தடை, 2023 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது.
இதற்காக, மத்திய அரசு அலுவலகங்களில் இயக்கப்படும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் 40க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் அதிகாரிகள் பயன்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாகனங்கள் இரண்டரை லட்சம் கிலோ மீட்டர் அல்லது 15 ஆண்டுகள் இயக்கப்பட்ட பின் காலாவதியாகியதாக அறிவிக்கப்பட்டு பயன்படுத்துவதற்கு தகுதியில்லை என கழிவு செய்யப்பட வேண்டும்
ஆனால், தமிழக அரசு அது போன்ற எந்த முடிவையும் எடுக்காமல் .தமிழகத்தில் அரசு துறைகள் அலுவலகங்களுக்கு பயன்படுத்தப்படும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜீப், கார் உள்ளிட்ட வாகனங்கள் காலாவதியாகிவிட்ட நிலையில் அவற்றை 2024 செப்., 30 வரை இயக்க அரசு அனுமதித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, பொதுத் துறை நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் 10,730 வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்துவிட்டதால் காலாவதியாகிவிட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு பதிவுச் சான்றுகளை ரத்து செய்துவிட்டது.
இதன் அடிப்படையில் மோட்டார் வாகன பராமரிப்பு துறை இயக்குநருக்கு தமிழக போக்குவரத்துத் துறை கமிஷனர் சண்முகசுந்தரம் 2023, ஜூன் 20ல் அனுப்பிய சுற்றறிக்கையில் ‘எம் பரிவாகன்’ போர்டலில் பதிவு சான்று (ஆர்.சி.,) ரத்து செய்யப்பட்ட வாகனங்கள் காலாவதியாகிவிட்டன. அவை ரோடுகளில் இயக்க தகுந்தவை அல்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது வரை வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக தற்போது 20 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படுவது உட்பட 5739 வாகனங்கள் கழிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்
தொகு
திருப்பூர் ஒன்றியம்
அவினாசி ஒன்றியம்
பல்லடம் ஒன்றியம்
உடுமலைப்பேட்டை ஒன்றியம்
தாராபுரம் ஒன்றியம்
காங்கேயம் ஒன்றியம்
மடத்துக்குளம் ஒன்றியம்
குடிமங்கலம் ஒன்றியம்
ஊத்துக்குளி ஒன்றியம்
குண்டடம் ஒன்றியம்
வெள்ளக்கோயில் ஒன்றியம்
மூலனூர் ஒன்றியம்
பொங்கலூர் ஒன்றியம் ஆக 13 ஒன்றியங்கள் உள்ளது.மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் , திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் பதின்னொன்று கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மடத்துக்குளத்தில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
13 ஊராட்சி ஒன்றிய வட்டாரங்களில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு

அரசால் ஜீப் வாகனம் வழங்கப்பட்டிருந்த தாகவும் அந்த வாகனங்களின் ஆயுட்காலம் 2022ம் ஆண்டே முடிந்து தற்போது பயன்படுத்த முடியாது நிலையில் அந்த வாகனங்கள் அனைத்தையும் அழிக்க முடிவு செய்யப்பட்டது.

2023 மே மாதம் 10 ஆம் தேதி
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பயன்பாட்டிற்காக

ரூ.25.40 கோடி மதிப்பிலான
200 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியக்
ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஐந்து பேருக்கு மட்டும்

புதிய ஸ்கார்பியோ வாகனம் வழங்கப் பட்டுள்ளது என்றும் மீதமுள்ள 13 வட்டாரங்களில் புதிய வாகனம் வழங்கப் படாத நிலையில் 13 ஓட்டுனர்களுக்கு சுமார் 18 மாதங்களுக்கு மேலாக எந்தப் பணியும் வழங்காமல் மாதம் 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
மாவட்ட நிர்வாகத்தால் 13 ஓட்டுநர்களுக்கு எந்த மாற்றுப் பணியும் வழங்க வழங்கப்படவில்லை என்றும் இதனால்
மக்கள் வரிப்பணத்தில் சுமார்
18 மாதங்களாக சுமார் 1,28,70,000 ஒரு கோடியே இருப்பத்தெட்டு லட்சத்து எழுபது ஆயிரம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் எந்த பயன்பாடும் இல்லாமல் எந்த பணியும் செய்யப்படாமல் ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும் ஆனால் மற்ற மாவட்டங்களில் இதே போன்று உள்ள ஓட்டுனர்களுக்கு மாற்றுப் பணி அந்த மாவட்ட நிர்வாகம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அரசு பணத்தில் ஊதியம் வாங்கிக்கொண்டு 18 மாதங்களுக்கு மேலாக தங்கள் சொந்த வேலையை கவனித்து வருகின்றனர் என்றும்
அரசு உயர் அதிகாரிகள் தங்கள் சொந்த வாகன ஓட்டுனர்கள் எந்த பணியும் செய்யாமல் ஊர் சுற்றி வந்தால் மாதம் ஊதியம் வழங்குவார்களா?
மக்கள் வரிப்பணம் தான் என்று எண்ணுவதால் தான் இதுபோன்று எந்தப் பணியும் செய்யாதவர்களுக்கு மாதம் ஊதியம் வழங்கி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை விட கொடுமை என்னவென்றால் திருப்பூர் மாவட்டத்தில் பல அரசு அலுவலகங்களில் ஓட்டுநர்கள் இல்லாமல் அரசு வாகனங்களுக்கு தற்காலிக ஓட்டுனர்கள் நியமனம் செய்து அவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஊதியம் வழங்கி வருகின்றனர்.
இந்தக் குளறுபடிகளை கண்காணிக்கத் தவறிய மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button