வாடிப்பட்டி ஆதி அய்யனார் கோயில் பெட்டி தூக்கும் திருவிழா நடத்துவதில் மீண்டும் சிக்கல்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள மேட்டு நீரேத்தான் கிராமத்தில் ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழாவை பல 50 ஆண்டுகளுக்கு மேல் மூன்று தலைமுறையாக நடந்து வந்த நிலையில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை செய்வதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில வருடங்களாக திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர் .
இந்த மனுவில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள ஆதி அய்யனார் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் மரியாதை செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுரேஷ் கண்ணன் என்பவர் சார்பாக வழக்கு தொடரப்பட்டது இதில் கடந்த 2/9/2024 ஆம் தேதி படி எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை சேர்க்கப்படாத நிலையில் எங்களுடைய தரப்பு கருத்துகளையும் கேட்கப்படாத சூழ்நிலையில் தற்போது திருவிழா நடத்துவது சம்பந்தமாக தங்களுக்கு உயர் நீதிமன்றம் சிறப்பு உத்தரவு ஏதாவது பெறப்பட்டு உள்ளதா என்பதை தெரிவிக்கவும் மேலும் கோயில் சம்பந்தமாக சமாதானத்துக்காக அழைக்கப்பட்டவர்களில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் காலங்காலமாக திருவிழாவை நடத்தி வரும் நபர்களுக்கு சரியான கால அவகாசம் கொடுத்து பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் இது தொடர்ந்து எங்கள் கிராமத்தில் உள்ள மிகப் பெரும்பான்மை மக்களின் முதல் மரியாதை செய்கின்ற வழக்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் எங்களுக்கு இல்லை என்றும் இத்தகைய சூழலில் சாமி கும்பிடுவது என்ற ஒற்றை இலக்கை முன்வைத்தே காலங்காலமாக திருவிழாவை நடத்தி வருகின்றோம் எங்களுடைய கிராம பெரும்பான்மையான மக்கள் பழைய நடைமுறையை கடைபிடிக்க விரும்புகிறோம் . ஆகையால் தாங்கள் எங்கள் தரப்பு நியாயங்களை கேட்டு திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட வாடிப்பட்டி வட்டாட்சியர் மனு மீது பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். ஆனால் இன்னும் புரட்டாசி மாதம் முடிவதற்கு சில நாட்களை உள்ளதால் அய்யனார் கோவில் பொங்கல் திருவிழா நடக்குமா!? இல்லை நீதிமன்ற உத்தரவுபடி நடத்த முடியுமா !? என்பது சாத்தியமில்லை என கிராம பெரியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்!