வாடிப்பட்டியில்
கட்டணம் இல்லா இலவச குளிர்சாதன பெட்டி வசதியுடன் அமரர் ஊர்தி சேவை!

வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரணமாக
வாடிப்பட்டியில்
கட்டணம் இல்லா இலவச குளிர்சாதன பெட்டி வசதியுடன் அமரர் ஊர்தி சேவையை வாடிப்பட்டி பேருந்து நிலையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தொடங்கி வைத்த போது!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கடந்த சில மாதங்களாக அருணா அம்மா மக்கள் குறை தீர்க்க வழிகாட்டு மையம் இயங்கி வருகிறது. இந்த வழிகாட்டு மையத்தில் சாதாரண ஏழை எளிய பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பதிவு செய்யலாம். அது மட்டும் இல்லாமல் தங்களது பல நாட்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்கலாம். அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நேரடியாக அருணா அம்மா மக்கள் குறைதீர்க்க மையம் கொண்டு சென்று தீர்வு காணப்பட்டு வருவதாகவும்.

தற்போது வாடிப்பட்டியில் உள்ள 18 வார்டுகளிலும் வசிக்கும் ஏழை எளிய நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் அனைத்து சமுதாயத்தினரின் குடும்பத்தில் யாராவது இயற்கை மரணம் மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தால் அவர்களது உடலை அடக்கம் செய்யும் வரை குளிர்சாதன பெட்டி மற்றும் குளிர்சாதன வசதியுடன் அமரர் ஊர்தி முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள ஒரு அரிய வாய்பாக அமையும்.


வாடிப்பட்டி பேரூர் அதிமுக செயலாளர் அசோக் அவர்கள் பேசிய போது 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த வாகனத்தை இலவசமாக அருணா அம்மா மக்கள் குறை தீர்க்க மையத்திற்கு வழங்கியுள்ளதாகவும்
தற்போது முன்னோட்டமாக வாடிப்பட்டியில் உள்ள 18 வார்டுகளுக்கு மட்டும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சில நாட்களுக்குப் பின்பு வாடிப்பட்டி தாலுகா அளவில் இந்த இலவச அமரர் உறுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக அருணா அம்மா மக்கள் குறை
தீர்க்க மையம் தொண்டு நிறுவனம் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இலவச அமரர் உறுதி வழங்கியதின் நோக்கம் முற்றிலும் சமூக தொண்டு செய்வதற்காக மட்டுமே நல்ல எண்ணத்துடன் அர்ப்பணித்துள்ளதாகவும் இதனால் பல ஏழை எளிய நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ள அரிய வாய்ப்பாக அமையும் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
வழிகாட்டும் மனிதர்கள், முன்னுதாரண மனிதராக அருணா அம்மா மக்கள் குறை தீர்க்க வழிகாட்டு மையம் இருப்பதாக வாடிப்பட்டி பொதுமக்கள் பாராட்டி வருகின்றன.