காவல் செய்திகள்

வாடிப்பட்டி அருகே நகை வியாபாரியின் கழுத்தில் கத்தியை வைத்து   19 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்து கோவைக்கு தப்பி ஓடிய  பள்ளபட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் !

வாடிப்பட்டி அருகே கத்தியை காட்டி நகை வியாபாரியிடம்   19 லட்சம் வழிப்பறி செய்து கோவைக்கு தப்பி ஓடிய ஓடிய  பள்ளபட்டியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட கும்பல் !


திருச்சி வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் நிர்மல் கண்ணன் (வயது 31) அடகு தங்க நகைகளை மீட்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் சிவா, பிரபாகரன், ஜெயராஜ், வாசு மற்றும் சிலர் உடன் ஜெயராம் என்பவருக்கு பழக்கமான ஒரு நபர் திண்டுக்கல்லில் 300 பவுன் நகை அடகு வைத்துள்ளதாகும் அந்த நகையை திருப்பிக் கொடுத்தால் உங்களிடமே 300 பவுன் நகையை விற்று விடுகிறேன் என்று வியாபாரிகளிடம் ஆசை வார்த்தை கூறி திருச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு நேற்று
முன்தினம் காலை 2 மணிக்கு காரில் வரவழைத்துள்ளனர்.. திண்டுக்கல் வந்தவுடன்  நகை அடமானம் வைத்துள்ள நபர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட  பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் இருப்பதாக கூறி ஜெயராமன், நிர்மல் கண்ணன், சிவா, பிரபாக ரன் ஆகியோர் ஒரு காரில் திண்டுக்கல்லில் இருந்து பணம் வைத்தவர்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளனர். நேற்று விடாமல்  மழை பெய்து கொண்டு வந்ததால் மாலை 6.30 மணிக்கு இருட்டாக உள்ள பாண்டியராஜபுரம் பகுதியில்  நின்று கொண்டிருந்த ஒரு நபர் பெருமாள்பட்டி ரயில்வே ரோடு அருகே  காரில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த 25 முதல் 30 வயது வரை மதிக்கத்தக்க ஆறு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நிர்மல் கண்ணனிடம் இருந்து ரூ.13 லட்சத்தையும் செல் போனையும், சிவாவிடம் இருந்து ரூ.6 லட்சத்தை யும், செல்போனையும், பிரபாகரன் இடமிருந்து ஒரு செல்போனும் பறித்துக் கொண்டு  சென்றுள்ளனர்.
இதுகுறித்து பணத்தை பறிகொடுத்த நிர்மல் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர்  முத்துக்குமார், காவல் உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து 20 ஆம் தேதி இரவு பள்ளபட்டி நிலக்கோட்டை அம்மையநாயக்கனூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடி வந்த நிலையில் தற்போது வழிப்பறியில் ஈடுபட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் கோயமுத்தூர் பகுதியில்  பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் படி வாடிப்பட்டி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் வழிப்பறி செய்த நபர்களை தேடி கோவைக்கு சென்று தேடி வந்த நிலையில் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிவிட்ட நிலையில் 
தற்போது 19 லட்ச ரூபாய் பணத்தை கத்தியைக் காட்டி வழிப்பறி செய்து தப்பி ஓடிய கும்பல் பள்ளபட்டியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இதற்கு முன்பு இதுபோன்று பல வழிப்பறிகளில் ஈடுபட்டவர்கள் என்றும் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்  தெரிவித்த நிலையில் 28/05/2024 அன்று மாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை முன்பாக வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த

பொட்டுலுபட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் (23) ராமராஜபுரத்தை சேர்ந்த ஆனந்த் (25 ) அர்ஜுனன்(25) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் முன்னுக்கு பின்முரணாக பதில் சொல்லியவர்கள் தங்க நகை அடகு வியாபாரியிடம் 19 லட்சம் வழிப்பறி செய்ததை ஒப்புக் கொண்ட பின் அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.59 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் வாடிப்பட்டி போலீசார் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் 3 பேரை பிடிப்பதற்கு காவல்துறையினர் வலை வீசி தேடி வரும் நிலையில் அவர்களை பிடிப்பதற்கு காவல்துறையினருக்கு  பெறும் சவாலாக இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வரும் கும்பலில் உள்ள முக்கியமான குற்றவாளி lஒருவருக்கு நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்தில் உள்ள  எஸ் பி சி ஐ டி காவலர் ஒருவருக்கு நெருங்கிய உறவினர் என்றும் ஆகையால்தான் திண்டுக்கல் மாவட்டம் எல்கை முடிவு மதுரை மாவட்டம் ஆரம்பம் இந்தப் பகுதிகளுக்கு வரவழைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் மீது அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் அதனால்தான் தற்போது மதுரை மாவட்டம் வாடிப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.

எது எப்படியோ காவல்துறையினருக்கு  சவாலாக இருந்து வரும் நூதன முறையில் பணம் பறிக்கும்  தொடர்  வழிப்பறியில் ஈடுபட்டு வரும் மோசடி கும்பல்களை தென் மண்டல ஐஜி தனிப்படை காவலர்களை அமைத்து வழிப்பறியில் ஈடுபட்டு வரும் ஒட்டுமொத்த கும்பல் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button