வாடிப்பட்டி ஒட்டான் குளத்தில் புல் புதர் மண்டி பராமரிப்பின்றி இருப்பதால் ஏடிஸ் கொசுக்களால் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்! அச்சத்துடன் பொதுமக்கள்!!
கொசுக்கள் உற்பத்தியாகாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம்!!?

சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்
டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய்
தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேண்டுகோள்.
-தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட காரணத்தால் மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் தென்படுகிறது.
பொது மக்கள் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு வீடுகளைச் சுற்றியும் மொட்டை மாடிகளிலும் தேவையற்ற பொருட்களை சேமித்து வைப்பதால் இவற்றில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. மேலும் வீட்டின் உள்ளேயும் நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைத்திடுமாறும், மேலும் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களை வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்திடுமாறும்,
வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழை நீர் தேங்கி கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வண்ணம் தங்களது நிறுவனங்களை சுத்தமாக பேணிகாத்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், வாகனங்களை பழுது நீக்கும் இடங்களில் உள்ள டயர்களில் மழை நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ளுமாறும், பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் சாமான் வாங்கி விற்கும் கடைகளில் உள்ள பொருட்களை மழை நீர் தேங்காமல் பாதுகாப்பாக வைத்திடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். புதிய கட்டிடங்கள் கட்டும் இடங்களில் நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட உரிமையாளரின் கடமையாகும். இவ்விதிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை முடித்து திறக்கப்படுவதால் பள்ளி நிர்வாகிகள் தலைமை ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தினை சுத்தமாக பராமரிக்குமாறும், பள்ளி வளாகத்தினுள் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் மாணவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் தென்படின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் தகவல் தெரிவித்து பள்ளி குழந்தைகளை காய்ச்சல் நோயிடமிருந்து பாதுகாத்திடவும், பள்ளி மாணவர்கள் எவரேனும் காய்ச்சல் தொடர்பான விடுப்பிலிருந்தால் அவர்களது பெற்றோர்களை தொடர்பு கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு செல்ல ஆலோசனை தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொது மக்கள் காய்ச்சல் கண்ட உடன் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். பொது மக்கள் அரசு அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற செல்ல வேண்டாம் எனவும் போலி மருத்துவர்கள் டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு அரசின் நிலையான சிகிச்சை முறைகளை செயல்படுத்தாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, போலி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு பணியாளர்கள் வீடு தேடி வரும்போது அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்கி டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டத்தினை உருவாக்கிட மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்
அதே போல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் அதிமுக ஆட்சியில் தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில்
பல கோடி செலவில் நடை பயிற்சியுடன் உருவாக்கப்பட்ட ஒட்டான் குளம் தான் தற்போது சுகாதாரமற்ற நிலையில் புல் புதர் மண்டிக் கிடக்கும் அவலநிலை!!
மாவட்ட ஆட்சியர் மேலே குறிப்பிட்டது போல்
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்தக் குளத்தில் இருக்கும் மண்டிக் கிடக்கும் புதரில் மறைந்து இருக்கும்
ஏடிஸ் கொசுக்களால் டெங்கு மற்றும் இதர வைரஸ் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் உள்ளதாக குளத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஏனென்றால் தற்போது வைரஸ் காய்ச்சல் தொற்று காரணமாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் தினந்தோறும் காய்ச்சலால் சிகிச்சை பெற வருகின்றதை யாராலும் மறுக்க முடியாது. வாடிப்பட்டி யின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒட்டான் குளத்தில் சுகாதாரமற்ற நிலையில் புல் புதர் மண்டி இருப்பதால் கொசுக்கள் உருவாகி வைரஸ் காய்ச்சல்கள் தொற்றுநோய் உருவானால்

மாவட்ட ஆட்சியர் சொல்வதுபோல்
இதற்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதையும் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் . ஆகவே ஏடிஸ் கொசுக்கள் உருவாகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வண்ணம் சுத்தமாக பேணிகாத்திட மாவட்ட ஆட்சியர் கூறியதுபோல் கொசுப்புழு பணியாளர்களை அனுப்பி குளத்தில் மண்டிக்கிடக்கும் புதரை சுத்தம் செய்து வாரம் இருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்திடவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.டெங்கு காய்ச்சல் இல்லாத பேரூராட்சியாக வாடிப்பட்டி பேரூராட்சி உருவாக்கிட வேண்டும். இது பேரூராட்சி நிர்வாகத்தின் கடமை ஆகும்.இவ்விதிமுறைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வணிக வளாகங்கள் இவைகள் அனைத்துக்கும் போடும் சட்டம் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளுக்கும் பொருந்தும் என்பதை தெரிந்துகொண்டு பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக ஒட்டன் குளத்தை சுத்தம் செய்து பிளீசிங் பவுடர் போட்டு கொசுக்கள் உற்பத்தியாகாமல் வைரஸ் தொற்று நோய்கள் பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.