வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதியதில் லாரியில் சிக்கி உயிரிழந்த நபரை
15 கிலோ மீட்டர் இழுத்துச் சென்ற பதபதைக்கும் சம்பவம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர்
ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள லாரி செட்டில் வேலை செய்து வந்தார்.
இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் வடுகபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டிபட்டி பெட்ரோல் பங்க் அருகே ஹரியானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரியின் இடது புறம் வந்த மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில்

மோட்டார் சைக்கிள் லாரியில் சிக்கியது. அதை உணராமல் லாரி டிரைவர் லாரியை 15 கிலோமீட்டர் வரை ஓட்டிக்கொண்டு சென்றார். இதை பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சமயநல்லூர் கட்டபுளி நகரில் லாரியை வழி மறித்து மோட்டார் சைக்கிளுடன் வாலிபர் சிக்கி உயிரிழந்ததை தெரிவிக்க உடனே லாரியை விட்டு விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இஸ்பெக்டர் ரபிக் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று வலது கால் துண்டாகி உயிரிழந்த நிலையில் இருந்த சூரிய பிரகாஷ் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சூரிய பிரகாசுககு பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்