வாடிப்பட்டி மத கோவிலுக்கு செல்ல நெடுஞ்சாலையில் பெயர் பலகை வைத்து பரப்புரை செய்ய பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை !??
விதிகள் மீறி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நெடுஞ்சாலைத் துறை மீது நடவடிக்கை என்ன!??
இதே போன்று வாடிப்பட்டியில் சில வருடங்கள் முன்பு மாதாக்கோயில் உருவாக்கப்பட்டது. அந்தக் கோவில் உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் அந்தக் கோவிலை சின்ன வேளாங்கண்ணி மாதா கோவில் போல் உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில தனிநபர்கள் வெளிநாட்டுப் பணத்தில் பல கோடிகள் செலவிட்டு கோவில் மீது உள்ள எல்லா சர்ச்சைகளையும் பணத்தால் மறைக்கப் பட்டு விட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது.
ஆனால் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வாடிப்பட்டியில் பாரம்பரிய மிக்க 1000 ஆண்டுகள் பழமையான மீனாட்சி கோவில் மற்றும் சின்னங்கள் நிறைய உள்ளன .அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத நெடுஞ்சாலைத்துறை உயர்அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம். கடந்த சில வருடங்களாக மதுரையை சுற்றியுள்ள சமூக விரோதிகளின் கூடாரமாக வாடிப்பட்டி மாதா கோவில் அமைந்து விட்டதாகவும் கோவிலை சுற்றிப் பார்க்க வருவதுபோல் சட்ட விரோத செயல்களை செய்யும் நபர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்றவற்றை கோவிலுக்கு வெளியே பஸ் நிறுத்தத்தில் உட்கார்ந்து விற்பனை செய்து வருவதாகவும் புகார் சம்மந்தமாக சமூக ஆர்வலர்களின் புகாரின் பெயரில் பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் மற்றும் அப்போது இருந்த காவல்துறை ஆய்வாளர் சில்வியா ஜாஸ்மின் அவர்களிடம் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வரை புகார் அளிக்கப்பட்டது. அதன்பின் அந்த ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாதா கோவில் ஒரு மதத்தைச் சார்ந்த தனியாருக்கு சொந்தமான கோவில் என்றும் இந்தக் கோவில் வியாபார ரீதியாக மட்டுமே செயல்பட்டு வருகிறது என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் தமிழக அரசின் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த வாடிப்பட்டி AD நான்குவழிச் சாலையில் இருந்து வாடிப்பட்டி நுழைவு வாயிலில் இடத்தில் வாடிப்பட்டி செல்லும் வழி என்று பெயர்ப்பலகை வைப்பதை தவிர்த்து விட்டு மாதா கோவில் போட்டோ வைத்து மதத்தை அடையாளப்படுத்தும் வகையில் அரசுக்கு எதிராக சட்ட விரோதமாக மாதா கோவில் நிர்வாகத்திடம் பல லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு நெடுஞ்சாலை துறையினரால் போர்டு வைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுசமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். . இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் வாடிப்பட்டி பெயர் பலகை இல்லாததால் நேராக சென்று விடுவதாகவும் இதனால் பல கிலோமீட்டர்கள் மறுபடியும் சுற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.ஆகவே நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகள் பெயர்ப்பலகை சம்பந்தமாக வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை AE மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக மதுரை நெடுஞ்சாலை துறை உயரதிகாரிகளுடன் சமூக ஆர்வலர்கள் கேட்டதற்கு தற்போது அந்தக் கோவில்தான் பிரபலமாக இருப்பதாகவும் அதனால் அந்தக் கோவில் பெயர் பலகை வைத்ததாகவும் காரணத்தை சொல்லி உள்ளதாக தகவல். ஆனால் கோவிலைப் பற்றி விசாரித்ததில் கோவில் ஆரம்பித்த நாளிலிருந்தே சட்டவிரோதமான செயல்கள் இந்த கோவிலில் நடந்ததாகவும் பாலியல் தொழில் செய்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்து அந்த புகாரை காவல் நிலையம் வரை சென்று அதன்பின் அந்தப் புகார் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை அப்பகுதி மக்கள் கூறினார்கள்!
எது எப்படியோ நான்கு வழி புறவழிச் சாலையில் இருந்து வாடிப்பட்டி பேருந்து நிலையத்திற்கு வரும் நுழைவாயிலில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அடையாளமாக வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என்றும் தனியார் மாதா கோவிலின் பெயர் பலகையை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் முன்பு முற்றுகைப் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வந்துள்ளது.
மதுரைமாவட்டம் வாடிப்பட்டி வட்டம் அலங்காநல்லூர் செல்லும் வழியில் பாரம்பரிய ஊர் ரெட்டியபட்டி கிராமம்.
தற்போது மரியம்மாள் குளம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.இதை விட அதிர்ச்சித் தகவல் என்னவென்றால் அரசு கெஜட்டில் உள்ள ஊர்பெயரையே மாற்றி இருப்பது அங்குள்ள அனைத்து சமுதாய மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
எது எப்படியோ பெயர் பலகையால் மதத்தை பரப்பாமல் இருந்தால் சரி. அவரவர்கள் விருப்பம் உள்ளவர்கள் அவர்களது திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு கொள்வார்கள். தனியார் கோவிலுக்கு நெடுஞ்சாலைத்துறை பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இருந்தாலே போதும்!
ஒன்றே குலம் என்று போற்றுவோம் !ஒருவனே தேவன் என்று வணங்குவோம்!