வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான்
நீரேத்தான் கிராம முல்லை பெரியார் கால்வாய் பாசன விவசாயிகளுக்கு லஞ்சம் இல்லாத “நேரடி நெல் கொள்முதல் மையம்
மதுரை வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான்
நீரேத்தான் கிராம முல்லை பெரியார் கால்வாய் பாசன விவசாயிகளுக்கு லஞ்சம் இல்லாத “நேரடி நெல் கொள்முதல் மையம் !
வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான் மற்றும் மேட்டுநீரேத்தான் கிராம விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசின் சார்பில் நெல் கொள்முதல் மையம் மேட்டுநீரேத்தான் கிராமத்தில்( சம்பக் களத்தில்)திறந்து வைக்கப்பட்டது.
மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையுடன் தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கி விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகிறது. இதன்படி, 17 சதவீதத்துக்கு மிகாமல் ஈரப்பதம் உள்ள சன்ன ரக நெல், ஒரு குவிண்டால் (100 கிலோ) 2, 060 ரூபாய் விலையில் வாங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத் தொகை ரூ.100 அடக்கம். பொது ரக நெல் குவிண்டால் 2,015 ரூபாய் விலையில் வாங்கப்படுகிறது. இதில் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ. 75 ஊக்கத் தொகையும் அடக்கம்.
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் P. மூர்த்தி வழிகாட்டுதலின் படியும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ. வெங்கடேசன் ஆலோசனைக்கு இணங்கவும் வேளாண்மை உதவி இயக்குனர் வாசுகி முன்னிலையில் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் . பால்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இதில் துணைத் தலைவர் ரா.கார்த்திக் , . பிரகாஷ் மற்றும் 3-வது வார்டு உறுப்பினர் ஜெயகாந்தன் விவசாய சங்கத்தைச் சார்ந்த கண்ணார், ஜெகதீசன் ஜெகத்ரட்சகன் ராதாகிருஷ்ணன் சுரேஷ் பாபு காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் நலன் காக்கும் அரணாக அரசு செயல்படுகிறது. நெல்லுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உயர்வு, நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற அறிவிப்புகள் உழவர் நலனில் முதலமைச்சர் கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடாகும்.
எனவே, நெல் கொள்முதலில் எந்தவித தவறும் நடைபெறக் கூடாது என்பதில் அரசு கவனமாகவும் உறுதியாகவும் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ஒரு பைசா வாங்கினாலும் அரசு பொறுத்துக் கொள்ளாது. தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் தொடர்பாக புகார் ஏதேனும் இருந்தால் 18005993540 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணில் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
உதவிக்கு தொலைபேசி எண்கள்
கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வது குறைந்துள்ளது .
என்கிறார்கள் விவசாயிகள்.
ஆனால், அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களிலும் வசூல் செய்வதில்லை என்கிற நிலை ஏற்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
நெல் விற்பனை தொடர்பாக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் குறித்து ஆலோசனை பெறவும் அங்கு நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்கவும் உழவர் உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும் கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது போல், தமிழ்நாடு மாநில குடிமை பொருள் வழங்கல் கழக, தலைமை அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 094451 90660 மற்றும் 09445195840 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது