வால்பாறையில் தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளிகளை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் போலி மது பாட்டில் அமோக விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறை! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
வால்பாறையில் கூலித் தொழிலாளிகளை குறிவைத்து தடை செய்யப்பட்ட லாட்டரி அமோக விற்பனை கண்டு கொள்ளாத காவல்துறை! நடவடிக்கை எடுப்பாரா கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர்.
பல குடும்பங்கள், குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி சீரழிகின்றன. இது ஏழைகளின் பொருளாதாரத்தை நேரடியாக பாதிக்கிறது’ என, அரசு தரப்பில்,… 2005ம் ஆண்டில், தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், பக்கத்து மாநிலமான கேரளாவில், இன்று வரையிலும் லாட்டரிக்கு தடையில்லை. எனவே, கேரளத்தின் எல்லையில் இருக்கும் கோவை மற்றும் சுற்று வட்டாரப் பக்திகளில் லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்து விற்பது, தங்குதடையின்றி விற்பனை நடப்பாத சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவ்வப்போது, போலீசார் லாட்டரிகள் புழக்கத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுப்பதாகவும், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்வதாகவும், விற்போரை கைது செய்வதாகவும் செய்திகள் வருவதுண்டு.இந்த நடவடிக்கைகளால் லாட்டரி விற்பனை கட்டுக்குள் வந்ததாகத் தெரியவில்லை போலீசாரின் நடவடிக்கை வெறும் கண்துடைப்புக்காக மட்டுமே
என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
குறிப்பாக கோவை மாவட்டம் வால்பாறையில் 3000 க்கும் மேற்பட்ட தேயிலை தோட்ட கூலித் தொழிலாளிகள் வசித்து வருகின்றனர் .அவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்தி வரும் நிலையில்
குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பி கேரளா லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை இழந்து தங்கள் குடும்ப வாழ்க்கையையே சீரழித்து வருவதாக அப்பகுதி கூலி பெண் தொழிலாளிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டும் இல்லாமல் லாட்டரிகளை கட்டடத் தொழிலாளிகள், சிறு வியாபாரிகள், தினக் கூலி உடல் உழைப்பாளர்களே பெரிதும் வாங்குகுவதால் அவர்களது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்கின்றனர்.
வால்பாறையில் கேரளா லாட்டரி சீட்டுகள் எந்த இடத்தில் விற்பனை செய்கிறார்கள் என்று அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது
பஜார்களில் உள்ள பெட்டிக்கடைகள், சிறு ஹோட்டல்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் கூடுகிற இடங்கள், மைதானங்களை ஒட்டி உள்ள இடங்கள் அது மட்டுமில்லாமல் முக்கியமாக
வால்பாறை வளையல் கடைவீதியில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர் அலுவகத்தின் அருகில் கேரளா லாட்டரி அமோக விற்பனை நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அது மட்டும் இல்லாமல் சட்டமன்ற அலுவலகம் அருகே போலி மதுபாட்டில் விற்பனை செய்துவருவதாகவும் அங்கு மது பாட்டல் வாங்கி செல்லும் மது பிரியர்கள் சட்டமன்ற அலுவலக வளாகத்தில் உட்கார்ந்து மது குடிப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. சட்டமன்ற அலுவலக வளாகத்தில் மது பாட்டில்கள் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் கூலித் தொழிலாளிகளிடம் நேரடியாக லாட்டரி சீட்டுகளை விற்பதுக்கு பதில், துண்டு சீட்டுகளில் நம்பர்களை எழுதி கொடுப்பது செல்போன்கள் வழியாக லாட்டரி எண்களை குறுந்தகவல் அனுப்புவது; ‘வாட்ஸ் ஆப்’ குழுக்கள் மூலம், சீட்டுகளை படமெடுத்து விற்பது என, பலவித நவீன தொழில்நுட்ப வசதிகளை கையாண்டும் லாட்டரி விற்பனை ஜோராக நடக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அதுவும் குறிப்பாக ஒரு நம்பர் லாட்டரி என்றால், ரூ.10 லாட்டரிக்கு, ஒரு லட்சம் ரூபாய் முதல் பரிசு; ரூ.20 லாட்டரிக்கு, லாட்டரிக்கு, ரூ.10 லட்சம் முதல் பரிசு; ரூ.50 லாட்டரிக்கு, ரூ.3.5 லட்சம் முதல் பரிசு; ரூ.100 லாட்டரி லாட்டரி என்றால், ஒரு கோடி ரூபாய் முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ‘வின்வின், தனஸ்ரீ,
பவுர்ணமி, காருண்யா, சொர்ண லட்சுமி, திவ்யலட்சுமி, சிக்கிம், மணிப்பூர்’ என்ற பெயரில் பலவித பெயற்களிகளில் லாட்டரிகள் விற்கப்படுவதாகவும்
இவை தவிர, நம்பர் லாட்டரிகளில் மூணு நம்பர் லாட்டரி, 2 நம்பர் லாட்டரி, 5 நம்பர் லாட்டரி போன்றவை துண்டு சீட்டுகளில் அச்சடித்து விற்றுவருவதாகவும்
தகவல்கள் வந்துள்ளது.
லாட்டரி சீட்டுகளை தேயிலை தோட்டத் கூலித் தொழிலாளிகள் குடியிருக்கும் பகுதிகளில் நேரடியாக சென்று விற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.கேரளாவிலிருந்து பஸ், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் லாட்டரி சீட்டுகள் கொண்டு வருகின்றனர். ஆனால் வரும் வழியில் அத்தனை சோதனை சாவடிகளில் கடந்து வந்து வால்பாறை பகுதிகளில் லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர். சோதனைச் சாவடிகளில் இருக்கும் காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்யும் போது அவர்களுக்கு மட்டும் இந்த லாட்டரி சீட்டுகள் எப்படி கண்ணில் படாமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
கேரளாவிலிருந்து பஸ், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் லாட்டரி சீட்டுகள் கொண்டு வருகின்றனர். ஆனால் வரும் வழியில் அத்தனை சோதனை சாவடிகளில் கடந்து வந்து வால்பாறை பகுதிகளில் லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர். சோதனைச் சாவடிகளில் இருக்கும் காவல்துறையினர் வாகனங்களை சோதனை செய்யும் போது அவர்களுக்கு மட்டும் இந்த லாட்டரி சீட்டுகள் எப்படி கண்ணில் படாமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்
சட்டவிரோத லாட்டரி விற்பனையை கட்டுக்குள் வைக்க, பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் உண்மையிலேயே
லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் காவல்துறை எடுக்கவில்லை என்றால், ஏழைகள் மேலும் மேலும்
மேலும் ஏழைகளாக்கப்படுவதும், அவர்களது குழந்தைகள் வேறு வேலைகளுக்குச் செல்லும் கல்வித் தரத்தை எட்ட முடியாமல், கூலித் தொழிலாளர்களாகவே வாழ்ந்து மடிந்து வருகிறார்கள் என்பது தான் நிதர்சனமாக உள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து தமிழக எல்லைக்குள் எப்படி லாட்டரிகள் கொண்டு வரப்படுகிறது….
எந்தெந்த இடங்களில், எந்தெந்த குழுக்கள் லாட்டரி விற்பனையில் ஈடுபடுகின்றன என்கிற விபரம் அனைத்தும் போலீசாருக்கு தெரியாமல் இருக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
உண்மையில், ஏழைகள் கடினமாக உழைத்து பெற்ற பணத்தை அபகரிக்கும் லாட்டரி விற்பனையாளர்களுடன் ஒரு சில காவல்துறையினர் கைகோர்த்திருப்பது வேதனை அளிக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.ஆகவே
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படைகள் அமைத்து, கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே லாட்டரி விற்பனையை ஒழிக்க முடியும்’ அதுமட்டுமில்லாமல் கேரள லாட்டரிக்கு அடிமையாக சாமானிய ஏழை எளிய கூலித் தொழிலாளிகளின் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்….