விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து பொய் வழக்கு பதிவு !? பழனி நகர காவல் ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கம்யூனிஸ்ட் CPI கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
கட்டப்பஞ்சாயத்து செய்து பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதாக திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரவுண்டானா அருகே கம்யூனிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
பழனி நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் உதயகுமார் விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து புகார் கொடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
பழனிக்கு தமிழக ஆளுநர் ரவி வருகையின்போது கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருவதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வேனில் ஏற்றி கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்து உள்ளனர்.