காவல் செய்திகள்

விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவடி தூக்கும் தக்கலை காவல் நிலைய ஆய்வாளர்!? நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?

விசாரணை என்ற பெயரில் மிரட்டும் தோணியில் கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய காவல் ஆய்வாளர்!

குற்றங்கள் குறைய வேண்டி திருவாரூர் மன்னர் காலத்தில் இருந்து வேலிமலை குமாரசுவாமி கோயிலுக்கு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் இருந்து காவல்துறை சார்பில் காவடி எடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது! இப்படி காவடி எடுக்கும் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் காவல் ஆய்வாளர்!?

மன்னர் காலத்திலிருந்து காவடி தூக்கம் தக்கலை காவல் நிலையம்!

தக்கலை காவல்நிலையத்தில் ஒரு புகார் சம்மந்தமாக நாகர்கோவில் அடுத்த விசுவாசபுரம்
வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல்
மீது ஒட்டுநர் பள்ளி நிர்வாகி சாகுல் ஹமீது புகார் மனு கொடுத்துள்ளார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் இக்கு அனுப்பப்பட்ட சம்மரன்



அந்த புகார் மனுவை கொடுக்க சொன்னதே நாகர்கோவில் ,மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலராக (RTO) வாக பணியில் இருக்கும் சசி என்ற தகவல் வந்துள்ளது.
அலுவலகத்தில் வேலை பார்க்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் அவர்களுக்கும்
தலைமை RTO பெண் அதிகாரி சசி இருவருக்கும்
பணி செய்வதில் முரண்பட்ட கருத்து இருந்து வந்துள்ளது என்ற தகவல்!

இதை மனதில் வைத்துக் கொண்டு பழி வாங்கும் நோக்கத்தில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் இரண்டுபேரும் தக்கலை DSP யிடம் போனில் தொடர்பு கொண்டு மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் என்பவரை எப்படியாவது
வழக்கு போட்டு சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வந்து உள்ளது.
இந்த பெண் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒரு
அதிமுக MLA யின் மருமகள் என்றும் பெரிய செல்வாக்கு உள்ளவர் என்றும் இதில் மயங்கி தக்கலை DSP யின் தூண்டுதலால் அந்த அதிகாரிக்கு
CSR போட்டு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல் .
இந்தப் புகார் சம்பந்தமாக 12/09/2022 அன்று தக்கலை காவல் நிலையத்தில் இருந்து
14-09-2022
காலை 10.00மணிக்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று சம்மன் வந்துள்ளது.

14/09/2022 அன்று காலை 10 மணிக்கு மேல் விசாரணைக்கு வரவில்லை என்றால் உன் மீது பல்வேறு வழக்குகள் பதிய செய்ய நேரிடம் என மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷை தக்கலை
இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மிரட்டும்தோணியில் பேசியதாக தகவல்!


அதன் பின்பு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் தனது அரசு அலுவலக பணியைவிட்டு தக்கலை காவல்நிலையத்தில் 4.00 மணிக்கு சென்றுள்ளார்.
தக்கலை காவல் நிலைய ஆய்வாளர் நெப்போலியன்
சுமார் 6 மணிக்கு மேல் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.


மரியாதை நிமித்தமாக வாகன ஆய்வாளர் காவல் ஆய்வாளர் நெப்போலியனுக்கு எனக்கு வணக்கம் சொல்லி தன்னை அறிமுகப்படுத்திய போது நெப்போலியன் தனது செல்போனில் மனைவியின் தம்பியுடன் குடும்ப கதையை பேசிக்கொண்டே உள்ளே போய்விட்டதாக வும் அதன் பின்பு உடனே வாகன ஆய்வாளரை அழைத்து விசாரிக்காமல்
அவமானம் படுத்தும் நோக்கில்
வேறு ஒரு பெண் புகார் கொடுத்தது சம்மந்தமாக விசாரனை செய்துள்ளார். மாலை ஆறு மணிக்கு மேல்
காவல் நிலையங்களில் பெண்களை விசாரிக்ககூடாது என்பது சட்டம் இருந்தும்
சத்தத்தை காட்டில் பறக்க விட்டு விசாரணை என்ற பெயரில் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு நேரத்தை கடத்தி வந்துள்ளார் காவல் ஆய்வாளர் நெப்போலியன்.

பிறகு போக்குவரத்து ஆய்வாளர் உள்ளே போக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் முகத்தை சுழித்து கொண்டு ஏன் இப்படி பன்னுகிறார் RTO அவர்கள் உன் மீதுவழக்கு பதிய சொல்லி DSP யிடம்
போன் மேல்போன் போடுகிறாங்க என மிரட்டும் தோனியில் புகார்க்கு உன் மேல் வழக்கு போட்டு உள்ளே தள்ளி உன் வேலையை காலி பண்ணிவிடுவேன் என ஒருமையில் பேசியாதாகவும் தகவல் !
புகார் மீது CSR போட்டு அந்த அரசு அதிகாரக்கு சம்மன் அனுப்பியதோடு ஆஜராகவில்லை என்றால் மூன்று சம்மன் அனுப்பி உன்மீது பொய் வழக்குப்பதிவு செய்து உன் வேலையை காலி செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும்
ஒரு பிரேக் இன்ஸ்பெக்டர் சீருடையுடன் வந்து உள்ளார்
அதையும் மதிக்காமால் அவமானம் படுத்தும் நோக்கில் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் காவல் ஆய்வாளர்.

மேற்படி அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் டைரி என பின்பற்ற வேண்டும் என விதிமுறை உள்ளது.மேலும் காவல் நிலையங்களில் நடக்கும் ஒவ்வொன்றும் கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் Sp cid-யாக ஒவ்வொரு காவல்நிலையத்தில் நியமிக்கப்பட்ட பிறகும் தமிழக காவல்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கையை யார் கடைபிடிக்க வேண்டும் என குமரி மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் கேள்வியாக உள்ளது.
மேலும் குமரி மாவட்டத்தில் நடக்கும் மனித உரிமை மீறலை தடுப்பது யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

காவல் நிலையத்தில் சிபிஐஎம்எல் (விடுதலை ) கட்சியின் மாநகர செயலாளர் ADV வே.அய்யப்பன் மற்றும் அரசியல் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை நிருபர் என அந்த காவல் ஆயவாளர் நெப்போலியனுக்கு தெரியாது.



மேலும் காவல் ஆய்வாளர் நெப்போலியன் விசாரனை முடிவில் விசாரணைக்கு அழைத்ததின் பெயரில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக எழுதிக் கொடுக்கும்படி கூறியுள்ளார்
அப்படி எழுதியதில் பிழை இருப்பதாகவும் உடனே கடும்கோபம் கொண்ட காவல் ஆய்வாளர் நீ எல்லாம் ஒரு அதிகாரியா?? என ஒருமையில் பேசி எழுத்து பிழைகள் இல்லாமல் டைப் அடித்ததுபோல் எழுதி கொடு
என ஆவேசமாக சொல்லி உள்ளார்.
பின்னர் வட்டார வாகன போக்குவரத்து ஆய்வாளர் மனஉளைச்சலில்
மனவேதனையுடன் திரும்பவும் எழுதி கொடுத்துள்ளார்.
மேலும் காவல் ஆய்வாளர் நெப்போலியன் கூறுகையில் போக்குவரத்து துறை
அமைச்சர் என்னுடைய உரவினர் என்றும்
உன் வேலையை காலி பன்ன சொல்லி
அவர் செல்போன் நம்பர் என்னிடம் உள்ளது, பேசவா!! போன் போட்டு பேச வா ? என்று மிரட்டி உள்ளார்.
RTO விடம் ஏன் வம்பு இழுக்குகிறாய் இங்கு இருந்தால் உன் வேலை காலி
வேறு ஊறுக்கு மாற்றி போ?? என மிரட்டும்
தக்கலை காவல் ஆய்வாளர்க்கு ஆதரவாக தக்கலை DSP யும் இருந்து வருவதால் இரண்டு பேர் மீதும் குமரி மாவட்டத்தில் நேர்மையாக காவல் பணியாற்றும் மாவட்டக் காவல் கண்காணிபாளர் துறைரீதியாக நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என குமரி மாவட்ட சிபிஐஎம்எல் லிபரேஷன் கட்சி கோரிக்கையை முன் வைத்துள்ளார்
வே,அய்யப்பன் (வழக்கறிஞர்) 8760537764

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button