விசாரணை என்ற பெயரில் காவலர் குடியிருப்பில் கட்டப்பஞ்சாயத்து செய்து லஞ்சம் வாங்குவதாக கந்தவர் கோட்டை காவல் ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு! நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
பழிவாங்கும் நோக்கத்தில் பொய் வழக்குகள் போடும் கந்தவர் கோட்டை காவல் ஆய்வாளர் மீது
நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம்
சிபி (எம்எல்) மக்கள் விடுதலை கட்சியின் கந்தர்வகோட்டை தாலுகா செயலாளர் செ.அருண்குமார் புகார்.
25/03/2023 அன்று இரவு 10 மணி அளவில் கந்தரோ கோட்டை செங்கிப்பட்டி சாலையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நின்றிருந்தபோது காவல் வாகனம் வந்து நின்றுள்ளது. அந்த வாகனத்தில் சீருடை இன்றி காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் அமர்ந்து கொண்டு வாகன ஓட்டுநரை அருண்குமார் இருக்கும் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவியை வாங்கி வரச் சொல்லி உள்ளார். அந்தக் காவலர் அருண்குமாரிடம் வந்து செல்போன் மற்றும் இரு சக்கர வாகன சாவியை கேட்டதற்கு அருண் குமார் தரமுடியாது என மறுத்துவிட்டார். அதற்கு அந்த காவலர் ஆய்வாளர் மது அருந்தி இருக்கிறார் என்றும் நாளை காலை காவல் நிலையத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் காவலர் கூறியதை அடுத்து அருண்குமார் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் கொடுத்துள்ளார். செல்போனை திருப்பிக் கொடுத்துவிட்டு இருசக்கர வாகனத்தை காவலர் ஓட்டி செல்ல அருண்குமார் வாகனத்தில் அமர்ந்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அருண்குமார் செல்போன் நம்பர் மற்றும் வீட்டின் முகவரியை வாங்கிக் கொண்டு அனுப்பி உள்ளனர். அதன் பின்னர் 12 மணி அளவில் அருண்குமார் வீட்டிற்கு காவலர்கள் சென்று ஆய்வாளர் அழைத்து வரச் சொன்னார் என்று கூறி காந்தவர் கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அருண்குமார் மது அருந்தி இருப்பதாக சான்றிதழ் வேண்டும் என்று காவலர்கள் மருத்துவர்கள் இடம் கேட்டுள்ளனர். அதற்கு அருண்குமார் நான் மது அருந்தவில்லை என்னை பரிசோதனை செய்ய மருத்துவரிடம் கூறியும் கேட்காத அரசு மருத்துவர் அருண்குமார் மது போதையில் இருந்ததாக சான்றிதழ் வழங்கியுள்ளார். சான்றிதழ் பெற்றுக் கொண்ட காவலர்கள் அருண் குமாரை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
26/03/2023 அன்று 11.30 காவலர் குடியிருப்புக்கு அருண்குமார் சென்றுள்ளார். அங்கு காவல் ஆய்வாளரிடம் என்னுடைய இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து காவல் நிலையத்தில் ஏன் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு காவல் ஆய்வாளர் பத்தாயிரம் பணம் கொடுத்து விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு போ என்று சொன்னதும் இல்லாமல் அருண்குமாரை பார்த்து தரை குறைவாக பேசி விட்டு உன்னால் முடிந்ததை போய் பார் உன் இரு சக்கர வாகனத்தை தர முடியாது என்று கூறியவாறு ஆய்வாளர் வீட்டிற்குள் சென்று விட்டாராம் .
ஆகவே கந்தவர் கோட்டை காவல் ஆய்வாளர் தொடர்ந்து சட்ட ஒழுங்கைக் கெடுக்கும் வகையிலும் காவல்துறையின் மதிப்பை சீர்குலைக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தன்னைப் பழி வாங்கும் நோக்கத்தில் பொய் வழக்கு போட்டுள்ளதாகவும் அதுமட்டுமில்லாமல்
ஏழைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து செயல்படுவதோடு சட்டத்திற்கு புறம்பாக காவல் நிலையத்தில் கொடுக்கும் புகார் மனுக்களை காவல் குடியிருப்பில் வைத்து விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும்
இதனால் கந்தர்வகோட்டை பகுதி மக்கள் அச்சத்திற்கு ஆளாகி காவல் துறையின் மீது உள்ள நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது என்றும்
சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், நீதியை நிலை நாட்டவும் கந்தவர் கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் காவல் ஆய்வாளர் மீது அருண்குமார் புகார் மனு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் வருகின்ற 11/03 2023 அன்று புதுக்கோட்டை திலகர் திடலில் சிபி எம் எல் மக்கள் விடுதலை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொய் வழக்கு போட்டு பணம் பறிக்கும் கந்தவர் கோட்டை காவல் ஆய்வாளர் செந்தில் மாறனின் அராஜகப் போக்கை கண்டித்தும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு காவல்துறை தலைவர்
தலைமை இயக்குனர் அவர்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவு
தலைமைச் செயலகம் மற்றும்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் மற்றும்
மனித உரிமை ஆணையம்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் புதுக்கோட்டை,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் புதுக்கோட்டை, ஆகியவர்களிடம் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், நீதியை நிலை நாட்டவும் புகார் மனு நகல்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.