சினிமா

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி (ஏப்ரல் 13 காலை 4 மணி)டிக்கெட் விலை 2,000 முதல் 5,000 ரூபாய் வரை திரையரங்குகளில் விற்பதாக அதிர்ச்சித் தகவல்!

250 கோடி ரூபாய் செலவில் மிக பிரமாண்டமாக சன் நிறுவனம் எடுக்கப்பட்ட விஜய் நடித்த பீஸ்ட் திரைபடத்தில் இயக்குனர் நெல்சன் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு விஜய்க்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்!


தற்போது இந்த திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியிட உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இந்தத் திரைப்படம் தமிழகத்தை தவிர மற்ற மொழிகளில் சுமார் 300 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல் வந்துள்ளது!

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் சுமார் 150 கோடி வரை முன்பணம் பெற்று
விஜய் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது என்ற தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 1000 திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் சிறப்புக் காட்சி (காலை 4 மணிக்கு)டிக்கெட் விலை 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை திரையரங்கு உரிமையாளர்கள் விற்று வருவதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
முக்கியமாக சென்னையை சுற்றியுள்ள உள்ள மால் திரையரங்குகள் தவிர மற்ற திரையரங்குகளில் சிறப்புக் காட்சி டிகெட் 2000 ரூபாய் முதல் 5000 வரை கார்ப்பரேட் ஐடி நிறுவனங்களில் பணி செய்யும் ஊழியர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வந்துள்ளது.
இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படுவதாகவும் டிக்கெட் விற்பனை முறையை ஒழுங்குபடுத்த சமூக ஆர்வலர்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

எது எப்படியோ அரசியலுக்கு வரவேண்டும் தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படும் நடிகர்கள் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்த திரைப்படம் வெளியாகும்போது சாமானிய குடும்பத்தில் இருக்கும் நபர்கள் (விஜய் ரசிகர்கள் )என்று சொல்லிக் கொள்பவர்கள் இதுபோன்று இரண்டாயிரம் மூவாயிரம் ரூபாயை எடுத்து வந்து டிக்கெட் எடுத்து திரைப்படத்தை பார்ப்பதை திரைப்படத்தில் நடித்த முன்னணி நடிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் வரை இந்த அவல நிலை தொடரும் என்பது தான் நிதர்சனம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button