காவல் செய்திகள்

விதிகளை மீறி சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில் அமோக விற்பனை! கொலை மிரட்டல் விடும் சமூக விரோத கும்பல்கள் ! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் துறை! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி!?

விதிகளை மீறி சட்ட விரோதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் மது பாட்டில் அமோக விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் ! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் அம்மையநாயக்கனூர் காவல் துறை! நடவடிக்கை எடுப்பாரா திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென்மண்டல ஐஜி!?


ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுக்கடைகள் மூடுவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தனர். அதேபோல்
திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2,
திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை
மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற கடைகள் அனைத்தும்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும்
என்றும் அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும் அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக சட்ட விரோதமாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை காற்றில் பறக்க விட்டு கண்டுகொள்ளாமல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலைய காவல்துறையினர் கல்லா கட்டி வந்தனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தாலுகா நிலக்கோட்டை காவல் கோட்டத்திற்குட்பட்ட சுற்றுவட்டார பகுதி முழுவதும் சப்த விரோதமாக விதிகளை மீறி மது பாட்டில்   அமோகமாக விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வைத்து மது பாட்டில் விற்பனை செய்ததாக சமூக ஆர்வலர்கள் பலர் தகவல் கொடுத்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டின்றனர். ஒரு சில சமூக ஆர்வலர்கள் மது பாட்டில் விற்பனை செய்து  வருவதை பத்திரிக்கை நிருபர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட

ஜம்பு துரை கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஜல்லிபட்டி கிராமத்தில் பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று மது பாட்டில் விற்பனை செய்ததாக சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை நிருபர்களுக்கு  கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற  புலனாய்வு பத்திரிக்கை நிருபர்கள்  இரண்டு பேர் மீது

ஜல்லிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மற்றும் அவரது மனைவி அவரது மகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பின்பு நிருபர்களிடமிருந்த அடையாள அட்டை மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டுள்ளனர்.இது சம்பந்தமாக அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் நிலக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசியில் நிருபர்கள் தகவல் கொடுத்தும் பல மணி நேரமாகியும் சம்பவ இடத்திற்கு எந்த காவல்துறையும் சம்பவ இடத்திற்கு வராததால் அதன் பின்பு காவல் கட்டுப்பாட்டு அவசர எண் 100க்கு போன் செய்து தகவல் கொடுத்தவுடன் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திலிருந்து காவலர் மணிவாசகம் கொடைரோடு டோல்கேட் அருகே சென்றுள்ளார் . அதற்குள் மதுபாட்டில் விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல் தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு உட்பட்ட நிருபர் வலி தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்து அமையநாயக்கனூர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று அங்கிருந்து நிலக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தற்போது கடுமையாக தாக்கப்பட்ட நிருபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று சிகிச்சை பெற்று வரும்


நிருபர் ரமேஷிடம் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குருவத்தாய்  நேரில் சென்று விசாரணை செய்துள்ளார். ஆனால் இதுவரை
சட்டவிரோதமாக விதிகளை மீறி மது பாட்டில் விற்பனை செய்ததும் இல்லாமல் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களை தாக்கிய ஜல்லிப்பட்டி கிராமத்தில் மது பாட்டில் விற்பனை    செய்த  பாண்டி மற்றும் அவரது உறவினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போலி மது பாட்டில் விற்பனை தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை  தொடர்ந்து நடந்து வருவதாகவும் அது சம்பந்தமாக சட்டவிரோதமாக மது பாட்டில் கஞ்சா விற்பனை செய்யும் இடங்களுக்கு செய்தி சேகரிக்க நிருபர்கள் சென்றால் அவர்களை கொலை மிரட்டல் விடுவதோடு கடுமையாக தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிருபர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் திண்டுக்கல் மாவட்ட நிலக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள காவல்துறையினர் உதவியுடன் சட்ட விரோத மது பாட்டில் விற்பனை கஞ்சா விற்பனை தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால்தான் சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் கல்லா கட்டி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகவே திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி அவர்கள் சட்ட விரோதமாக விதிகளை மீறி மது பாட்டில் மற்றும் கஞ்சா ,தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யும் சமூக விரோத கும்பல்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பொதுமக்கள் மற்றும் சேதி செய்தி சேகரிக்கச் செல்லும் நிருபர்கள் அச்சமின்றி வாழ முடியும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தென் மண்டல ஐஜி ஆகியோரின் நடவடிக்கையை..

Related Articles

Back to top button