விதிகள் மீறி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி !
பொள்ளாச்சி நகராட்சி
நரகமாக மாறி
வரும் அவல நிலை!
விதிகள் மீறி வணிக வளாக கட்டிடங்களுக்கு அனுமதி !
ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம், தயக்கம், திட்டங்கள் செயல்பாடில்லாத
நகராட்சி நிர்வாகத்தால்
நரகமாக மாறி
மாறி வரும் பொள்ளாச்சி நகரம்!
தமிழ்நாட்டில் 48.45 சதவீதம் மக்கள் நகர்ப்புரங்களில் வாழ்வதால் தமிழ்நாடு மிகுந்த நகர்மயமான மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் 7.21 கோடி மக்கள் தொகையில் 3.50 கோடி மக்கள் தற்போது நகர்ப்புரங்களில் வசிக்கின்றனர்.தமிழகத்தில் பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டிட அனுமதிகளில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்று, அப்போது நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா தற்போது (தலைமைச் செயலாளர்) பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்குப் புகார்கள் வந்துள்ளதாக 2022 ஆகஸ்ட் மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளைப் பின்பற்றி அனுமதி வழங்குமாறு நகர்ப்புற உள்ளாட்சிகளுககு அறிவுறுத்தும்படி, நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகளின் ஆணையர் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
.கட்டிட அனுமதி வழங்குவதில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளைப் பின்பற்றுமாறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சிகளில் கட்டிட அனுமதி வழங்குவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளின்கீழ், கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான விதி 6,10,15 மற்றும் இதர விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
புதிதாக கட்டிடப் பணி தொடங்கும் இடங்களை ஆய்வுசெய்து, முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை நகரமைப்பு அலுவலர், ஆய்வாளர் உறுதி செய்ய வேண்டும். கட்டிட அனுமதி வழங்கியபின், உரிய காலஇடைவெளியில் ஆய்வுசெய்து, கட்டிட அனுமதியின்படிதான் கட்டிடங்கள் கட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும்.
முறையான அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டுவது கண்டறியப்பட்டால், ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, கட்டிட அனுமதிக்கு மாறாக கட்டிடங்கள் கட்டுவது கண்டறியப்பட்டாலோ, தவறான ஆவணங்கள் அடிப்படையில் அனுமதி பெற்றுள்ளதாக தெரியவந்தாலோ, வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
அனுமதியற்ற, அனுமதிக்கு மாறான கட்டுமானங்கள் மீது சட்டரீதியான அமலாக்க நடவடிக்கை எடுப்பதுடன், நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி குற்றவியல் நடவடிக்கை உட்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து நகராட்சிகளின் நகரமைப்பு ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் மாநகராட்சிகளின் இளநிலைப் பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் இதை தவறாமல் பின்பற்ற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் இவற்றை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்த சுற்றறிக்கையை காற்றில் பறக்க விட்டு பல வணிக வளாக கட்டிடங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கி
பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது.
சாலையோரம் இருக்கும் வியாபாரிகளுக்காக கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சித் தலைவரிடம் தெரிவிக்காமல் நகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்க உள்ளதாகக் கூறி, மதிமுக கவுன்சிலர் துரை பாய், கவுன்சிலர் கூட்டத்தில் நகராட்சி ஆணையாளரிடம் விவாதித்தார். அதற்கு ஆணையாளர், “உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். இதற்கு மேல் பிரச்னை கிளப்ப வேண்டுமானால், கிளப்பி கொள்ளுங்கள், எனக்கு ஆட்சேபனை இல்லை” என கவுன்சிலர்களைப் பார்த்து பேசினார்.
பின், நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஆணையாளரைப் பார்த்தவாறு, “அதிகாரிகள் தங்கள் அறைக்குள் என்ன செய்கிறீர்கள் என்று நான் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார். இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த மூன்று கவுன்சிலர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த நான்காவது நாளில் 13 ஆம் தேதி தமிழக பொள்ளாச்சியில்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ. 560.05 கோடி செலவில் 273 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ. 489.53 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 57,325 பயனாளிகளுக்கு ரூ. 223.93 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாவில் பேசிய தமிழக முதல்வர் பொள்ளாச்சியை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில்
பொள்ளாச்சியில்
அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக பொள்ளாச்சி
நகர சாலைகளில் வாகன போக்குவரத்து
நெரிசலால் நரகமாக மாறி இருந்தது என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அது மட்டுமில்லாமல்
கோவை மாவட்டத்தில் பத்தாண்டு அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நலத் திட்டங்களையும் செய்யவில்லை என்றும் திமுக ஆட்சி வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும்
பொள்ளாச்சி நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் களை தடுக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. என்றும் தமிழக முதல்வர் கூறினார்.
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி நகரப்பகுதியில் பொள்ளாச்சி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இங்கு தென்னை சார்ந்த தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால்.
தமிழக மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொள்ளாச்சி தனியார் நிறுவனங்களில் குடும்பத்துடன் வேலை செய்து வருகின்றனர். என தமிழக முதல்வர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி கோவை மாவட்டத்திலிருந்து பிரித்து தனி மாவட்டமாக அறிவிப்பு வெளியாகலாம் என பொதுமக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் தற்போது
பொள்ளாச்சி நெரிசல் மிகுந்த நகரமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் நாளுக்கு நாள்
போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே போகிறது.
அதில் பிரதானமான சாலையின் ஒரு பகுதி பொள்ளாச்சி காந்தி சிலை நான்கு ரோடு பகுதி. இது பல்லடம் பாலக்காடு உடுமலைப்பேட்டை, கோவை ஆகிய முக்கிய நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளின் சந்திப்பாக இருக்கிறது.
இந்த சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அந்த சந்திப்பை கடந்து செல்வதற்கு குறைந்தது அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் ஆவதாகவும் இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அப்பகுதி வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் நியூஸ்கீம் ரோடு, கடை வீதி, ராஜாமில்ரோடு, சத்திரம் வீதி, மார்க்கெட் ரோடு போன்ற பகுதிகளில் வணிக வளாகங்களுக்கு செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த ‘பார்க்கிங்’ வசதியில்லாததால் வாகனங்கள் ரோட்டையே ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. இதனால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை பற்றி நகரப் பகுதி மக்களிடம் விசாரித்த போது அதிர்ச்சி தரும் தகவல்களை தெரிவித்தனர். முக்கியமாக பொதுமக்கள் கூறியது
பொள்ளாச்சி காந்தி சிலை நான்கு ரோடு சந்திப்பில் கௌரி கிருஷ்ணா பேக்கர்ஸ் மற்றும் உணவகம் உள்ளது.
ஆனால் கௌரி கிருஷ்ணா பேக்கர்ஸ் கடைக்கு இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வருபவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்த போதுமான அளவில் வாகனம் நிறுத்த வசதி கிடையாது . கடைக்கு முன்பு
10 இருசக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்தும் அளவிற்கு மட்டும்தான் இடம் வசதி உள்ளது. அந்த இடத்தில் கௌரி கிருஷ்ணா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனத்தை நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த வழி இல்லாமல் பிரதான சாலைகளில் நிறுத்தி செல்கின்றனர். காலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.அதுமட்டும்.
இல்லாமல் கௌரி கிருஷ்ணா பேக்கரியின் வெளிப்பகுதியில் தேநீர், குழம்பி மற்றும் தின்பண்டங்கள் விற்கப்படுகிறது.
இதே போல் கௌரி கிருஷ்ணா பேக்கரி பகுதிக்கு வடபுறம் இருக்கும் ஃபோர் ஸ்கொயர் (4 SQUARE) தங்கும் விடுதியிலும் பார்க்கிங் வசதி கிடையாது. அங்கு தங்க வரும் வாடிக்கையாளர்களும் ரோட்டில் தான் வாகனத்தை நிறுத்தி செல்லும் அவல நிலை.
தங்கும் விடுதியில் பணிபுரியும் வாட்ச்மேன் சாலையே தங்கள் விடுதிக்கு சொந்தமாக நினைத்துக் கொண்டு செயல்படுவதாலும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கௌரி கிருஷ்ணா உணவகத்திற்கு முன்பு ஆட்டோ வாகனம் நிறுத்தும் இடமாக பல ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கௌரி கிருஷ்ணா உணவகத்தின் கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கம் செய்வதன் பெயரில் சாலை வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதனால் ஆட்டோ வாகனங்கள் நிறுத்தும் இடம் கொஞ்சம் கொஞ்சமாக சாலை வரை வந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
இதனால் காந்தி சிலை நால்ரோடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கோவை சாலையில் இருந்து வந்து இடது புறம் திரும்புவது நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது ஏனென்றால் அந்த பகுதியில் இரண்டு முதல் மூன்று வரிசையில் இரண்டு சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் விதிகளை மீறி நிறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி நகரம் வளர்ந்து வரும் போது, அதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாதது; ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம், தயக்கம்; திட்டங்கள் செயல்பாடில்லாதது
காரணங்களினால், மக்கள் நித்தம் நித்தம் மனவேதனை அடைந்து வருகின்றனர்.
ஆகையால் பார்க்கிங் வசதி இல்லாத வணிக வளாக இடங்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மட்டுமில்லாமல் புதிய வணிக வளாக கட்டடங்களுக்கு சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்க வேண்டும்.
விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை, நோ-பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்கவும் போதிய திட்டங்களை செயல்படுத்தவும் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.