மாவட்டச் செய்திகள்

விருதுநகர் மாவட்டம்
கால்நடை பராமரிப்பு துறையில் 10 லட்சம் லஞ்சம் கொடுத்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18,000 சம்பளத்தில் தற்காலிக வேலை என்ற தவறான தகவலை நம்பி படித்த மாணவர்கள் யாரும் ஏமாற வேண்டாம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!

கடந்த சில மாதங்களாக மாவட்ட ஆட்சியாளர்களின் பெயரில் போலி முக நிலை உருவாக்கி பல மோசடி வேலைகளை சமூக விரோதிகள் செய்து வருவதாகவும் அதை யாரும் நம்ப வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியாளர்கள் அவ்வப்போது பொது மக்களுக்கு அறிவுறுத்தி அந்த தற்போது விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் தற்காலிக பணிக்கு 18 ஆயிரம் சம்பளம் என்றார் தவறான தகவலை முகநூலில் சமூகவிரோதிகள் பரப்பி வருகின்றனர் . இதை நம்பி வேலை தேடும் மாணவர்களை குறிவைத்து இந்த மோசடி கும்பல் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த வேலைக்கு 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை கேட்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளி வந்த நிலையில் இது சம்பந்தமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியாளர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அதில்தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறையில் 90 மணி நேர பயிற்சி அளித்து ரூ.15000- முதல் ரூ.18000 வரை சம்பளத்தில் கால்நடை உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பதவியில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது எனவும் இதற்கான பணி நியமன ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறும் நான்காண்டுகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் மோசடி தகவல் வாட்ஸ்அப் சமூக ஊடகம் வழியாக பரவி வருகிறது .கால்நடை பராமரிப்பு துறைக்கு சம்பந்தமில்லாத தவறான இந்த தகவலை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் த.ஜெ.மேகநாதரெட்டி.தெரிவித்துள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button