தமிழ்நாடு
விழுப்புரம் புதிய பஸ் நிலைய நகராட்சி இருசக்கர வாகன பார்க்கிங்கில் பகல் கொள்ளை!
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகன பார்க்கிங்கில் அரசு நிர்ணயித்த 3 ரூபாய் கட்டணத்தை வசூலிக்காமல் 10 ரூபாய் வசூலிக்கின்றனர். இரண்டாவது நாள் வாகனங்கள் எடுக்க சென்றால் கூடுதலாக 20 ரூபாய் வசூலிக்கின்றனர். இதற்கு ரசீது கொடுக்கப்படவில்லை. இந்த கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.