விவசாயிகள் போர்வையில் உடுமலையில் கனிம வள கொள்ளை! அரசு புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக பல லட்சம் மதிப்புள்ள கனிம வளம் வெட்டி கடத்தும் கும்பல்! கண்டும் காணாமல் கல்லா கட்டி வரும் உடுமலை கோட்டாட்சியர்! நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!
தமிழக அரசு, ‘நீர் நிலைகளில், விவசாயிகள் வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ளவும், மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான மண் எடுத்துக்கொள்ளலாம், என இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.
ஆனால், மாவட்ட அரசிதழ் முறையாக அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை; பின்னர்,
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், இணைய தள முகவரி வழக்கப்பட்டு, இ – சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அரசு இணையதளத்தில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மண் எடுக்க
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு உடுமலை திருமூர்த்தி அணை மற்றும் குளம், குட்டைகளில் விவசாயிகள் மண் எடுத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பித்தும், மாவட்ட ஆட்சி நிர்வாகம் அனுமதி வழங்காமல் விவசாயிகள் அல்லாத நபர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பெரியவாள வாடி ஊராட்சி க்கு உட்பட்ட பகுதியில் சர்வே நம்பர் 250 இல் உள்ள ஊரக வளர்ச்சி துறைக்கு கட்டுப்பட்ட அரசு புறம்போக்கு நடுக்குட்டையிலிருந்து PAP வாய்க்காலில் இருந்து 300 மீட்டர் சுற்றளவில் ஆழப்படுத்த எவ்வித அரசு அனுமதி வழங்கக் கூடாது.ஆனால் வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று சட்ட விரோதமாக கிராவல் மண் வெட்டி எடுத்து கடத்தி வருகிறார்கள்.அனுமதி பெற்றாலும், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீர் நிலைகளில் மண் எடுக்க வேண்டிய பகுதிகள் , அளவு குறித்து அளவீடு செய்தும், டோக்கன் வழங்க வேண்டும்.ஆனால்வண்டல் மண் வெட்டி எடுக்கும் இடத்தில் அளந்து விடவோ கன மீட்டர் அளவீடு, எத்தனை லோடு விபரம் சேகரிக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் யாரும் வருவதில்லை. மேலும் இது குறித்து தமிழக விவசாய பாதுகாப்பு நிர்வாகிகள் உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணா விடம் நேரில் முறையிட்டு புகாரளித்தனர். புகாரைப் பெற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கண்துடைப்பு நாடகம் நடத்தி சட்டவிரோதமாக திராவல் மண் வெட்டி எடுக்கும் நபர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் திருப்பூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குனர் அலுவலகத்தில்வழங்கப்பட்ட அனுமதி குறித்து வருவாய்த்துறைக்கு தெரியாது என்றும் இது ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலம் என்பதால் திருமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றும் செய்திட இயலாது ..என உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் சுந்தரம் கூறியுள்ளார். ஆக மொத்தம் சட்ட விரோதமாக கனிம வளத்தை வெட்டி எடுக்கும் சமூக விரோத கும்பலிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் உள்ள கோட்டாட்சியர் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய மூன்று பேரும் பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக கனிம வளம் வெட்டி கடத்துவதற்கு உடனடியாக இருப்பதாகவும் விவசாயிகள் மற்றும் சமூக அலுவலர்கள் குற்றம் சான்றுகின்றனர்.
எது எப்படியோ உண்மையான உள்ளூர் விவசாயிகள் பல மாதங்களாக இந்தகுட்டையில் வண்டல் எடுக்க அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் உண்மையான விவசாயிகளுக்கு வழங்காமல் கனிம வளம் வெட்டி எடுத்து விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது எவ்வாறு என வாளவாடி பகுதி விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். அதுமட்டுமில்லாமல் குளம், குட்டைகளை காணவில்லை!? உடுமலை தாலுகாவில், நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமூர்த்தி அணையில், மண் எடுத்துக்கொள்ள, 4 சர்வே எண்களில், 98 ஆயிரத்து, 100 கன மீட்டர்; பெரியகுளத்தில், 30 ஆயிரம்; கரிசல் குளம், தினைக்குளத்தில், தலா, 15 ஆயிரம் கன மீட்டர் மண் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முறையாக பட்டியல் வழங்கப்படவில்லை. உடுமலை ஒன்றியத்தில், 118 குளம், குட்டைகள் உள்ள நிலையில், 4 குளங்களும், குடிமங்கலம் ஒன்றியத்தில், 74 குளங்கள் உள்ள நிலையில், 11 குளங்கள் மட்டுமே பட்டியலில் உள்ளது. அவற்றிலும், மண் எடுக்கப்பட்டு, வெறும் பாறைகள் மட்டுமே உள்ளன.மடத்துக்குளம் ஒன்றியத்தில், 33 குளங்கள் உள்ள நிலையில், 4 மட்டுமே பட்டியலில் உள்ளது. மாவட்ட அரசிதழில், தாராபுரம் பகுதியிலுள்ள குளங்கள், உடுமலை தாலுகாவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த குழப்பங்களுக்கு தீர்வு காணவும், விவசாயிகள் அருகிலுள்ள குளங்களில் மண் எடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை வட்டாட்சியர் சுந்தரம்
உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி
உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணா