காவல் செய்திகள்

விவசாய நிலங்களுக்கு  வண்டல் மண் எடுத்துச் செல்ல அரசு அனுமதி இருந்தும் நடை ஒன்றுக்கு 500 ரூபாய் லஞ்சம்  கொடுக்காவிட்டால் வழக்குப் போட்டு கைது செய்வேன் என எரியோடு காவல் ஆய்வாளர் மிரட்டுவதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு!


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில்
விவசாயிகள்  தங்கள் விவசாய
நிலம் மேம்பாட்டிற்க்காக   வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட  ஈ. சித்தூர் மந்தை குளத்திலிருந்து மண் எடுத்து

எரியோடு  தண்ணீர் பந்தம்பட்டி அரசு கலைக்கல்லூரி எதிரில் உள்ள விவசாயத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து
செல்ல

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து முறையான அனுமதி பெற்று வேடசந்தூர் வட்டாட்சியர் ஒப்புதலோடு   விவசாய நிலத்தின் மேம்பாட்டிற்காக வண்டல் மண் எடுத்து வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியுடன்  விவசாய நிலத்திற்கு விவசாயிகள் வண்டல் மண் எடுத்துச் செல்வதை 

எரியோடு காவல் நிலைய காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உடனே 

வேடசந்தூர் வடமதுரை  நெடுஞ்சாலையில்  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த சாலையில்  வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே  நிறுத்தப்பட்டிருந்தது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த எரியோடு காவல்துறையினரிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று விவசாய நிலங்களுக்கு  வண்டல் மண் எடுத்துச் செல்வதை ஏன் தடுத்து நிறுத்துகிறீர்கள் என விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் கைவிடும் ஆறு அதிகாரிகள் கூறினர்.
இது சம்பந்தமாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கூறும்போது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று குளத்திலிருந்து வண்டல் மண் எடுத்துச் செல்லும்போது எரியோடு ஒரு நடைக்கு 500 ரூபாய் லஞ்சம்  கொடுக்க வேண்டும்  அப்படி கொடுக்கவில்லை என்றால் வழக்கு பதிவு செய்து கைது செய்வேன் என எரியோடு காவல் ஆய்வாளர்  முருகன் மிரட்டி வருவதாகவும் மண் எடுத்துச் செல்லும் டிராக்டர்களை தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு வரும்படி மிரட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எது எப்படியோ  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்ற குளங்களிலிருந்து  விவசாய நிலங்களுக்கு தடையின்றி வண்டல் மண்  எடுத்துச் செல்வதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும்
தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதுமட்டுமில்லாமல் விவசாய நிலங்களுக்கு எடுத்துச் செல்லும் வண்டல் மண்ணுக்கு எரியோடு காவல் ஆய்வாளர் முருகன் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள்  கூறும் குற்றச்சாட்டு உண்மையா என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விசாரணை நடத்தி எரியோடு காவல் ஆய்வாளர்  லஞ்சம் கேட்டது உண்மையாக இருந்தால் எரியோடு காவல் ஆய்வாளர் முருகன்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான்  விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது

Related Articles

Back to top button