வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசும் அதிர்ச்சி வீடியோ!அச்சத்தில் சோழவந்தான் பொதுமக்கள்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் மருது தியேட்டர் அருகே
சங்கங்கோட்டை தெருவை சேர்ந்த முத்தையா வயது 49 என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் திருவிழாவின் போது இரண்டு பேருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது .
அப்போது கிராமத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். அதன் பின்னர் மாதவனுக்கு ஆதரவாக சித்தடிதெருவை சேர்ந்த மதன் குமார் வயது 25 என்பவர் ஆதரவாக செயல்பட்டதால் முத்தையா விற்கும் மதன் குமாருக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முதல் நாள் முத்தையா விற்கும் மதன் குமாருக்கும் தகராறு நடந்துள்ளது. அங்கு வந்த உறவினர்கள் இருவரையும் சத்தம் போட்டு அனுப்பி வைத்து உள்ளனர் .
இதனை தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் முத்தையாவின் மகன் விக்னேஸ்வரன் வயது 19 குவாட்டர் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி மதன் குமார் வீட்டு முன்பாக எரிந்து விட்டு சென்றுள்ளார். இதில் வீட்டின் அன்பு போடப்பட்டிருந்த ஸ்கிரீன் மற்றும் குடை எரிந்து உள்ளது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர் தப்பி உள்ளனர். இது குறித்து மதன் குமார் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு சோழவந்தான் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் விசாரணை செய்தனர். சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர் விக்னேஸ்வரனை கைது செய்து மேற்கொண்டு அவரிடம் விசாரணை செய்து வருகிறார். சோழவந்தானில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது