வெல்ல கட்டியில் விநாயகர் வடித்து அசத்தியுள்ள சிற்பகலைஞர்,
கோவை குனியமுத்தூரில் வசிக்கும் சிற்பக்கலைஞர் ராஜா, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட புதுவிதமாக கரும்பில் கிடைக்கும் வெல்லக்கட்டியில் விநாயகர் உருவத்தை செதுக்கி வடிவமைத்தார் . இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டி வருகின்றனர்,
உலகமெங்கும் வாழும் இந்துக்களின் இஷ்ட தெய்வமாக வணங்கும் ஸ்ரீ விநாயகர் பெருமானுக்கு ,ஒவ்வொரு வருடமும் ஆவணி மாத மூன்றாம் வாரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடி வருவது வழக்கம் அது போல இந்த வருடம் வரும் செப்டம்பர் 7ம்தேதி சனிக்கிழமை, விநாயகருக்கு சதுர்த்தி விழா விமர்சியாக பூஜைகள் செய்து வழிபாடு செய்வார்கள், விழாவில் தங்கள் தொழில், குடும்ப வளம் செழிக்க, நோயின்றி வாழ பக்தர்களும், பொதுமக்களும் வணங்குவார்கள்,
இந்த நிலையில் கோவை குனியமுத்தூரில் வசிக்கும் சிற்பக்கலைஞர் ராஜா, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட புதுவிதமாக கரும்பில் கிடைக்கும் வெல்லக்கட்டியில் விநாயகர் உருவத்தை செதுக்கி வடிவமைத்தார் . இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து பாராட்டி வருகின்றனர்,
வெல்லக்கட்டியில் விநாயகரை வடித்த சிற்பி ராஜா கூறுகையில் ஆண்டு முழுவதும் ,இந்துக்களின் முதற்முதல் கடவுளான விநாயக பெருமானை வணங்கினால் வாழ்க்கை இனிமையாகும், அதனை கருத்தில் கொண்டு விநாயகர் உருவத்தை செதுக்கி வடிவமைத்துள்ளேன் என்றார்,நாமும் வினை தீர்க்கும் கஜமுக கணபதி, விநாயகரை வணங்கி வளம் பெறுவோம்,,