மாநகராட்சி

வைகை அணையிலிருந்து வரும் ராட்சதக் குழாய்கள் உடைந்து சுமார் 10 கன அடி குடிநீர் விவசாய நிலங்களில் பயன்படுத்தும் அவல நிலை! நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் மதுரை மாநகராட்சி குடிநீர் வாரியம்!?

வைகை அணையில் இருந்து வரும் குடிநீரை விவசாய நிலங்களில் பயன்படுத்தும்  அவல நிலை!


மதுரை மாநகராட்சியிக்கு குடி நீர் வரும்  பிரதான ராட்சத குழாய்களில்  நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறும் குடிநீர்   அருகில் உள்ள விளைநிலங்களில் தென்னை மற்றும் வாழை போன்றவற்றிற்கு விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்தும் அவல நிலை.

ராட்சத குழாய்கள் உடைந்து விவசாய நிலங்களில் பயன்படுத்தும் மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர்

வைகை அணை அருகே  இருக்கும் சுத்திகரிக்கும் நிலையத்திலிருந்து  மதுரை மாநகராட்சிக்கு 60 கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய்கள்மூலம் குடி நீர்  கொண்டு செல்லப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதில் எம்ஜிஆர் ஆட்சியில்  ராட்சதக் குழாய்கள் மூலம் மதுரை மாநகராட்சிக்கு கொண்டு செல்லும் வழித்தடங்களில் உள்ள குழாய்கள் இதுவரை எந்த இடத்திலும்  சேதமடையாமல் தண்ணீர் வீணாகாமல் 30 கன அடி குடி நீர் மதுரை மாநகராட்சிக்கு அப்படியே வந்து சேருகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக   இருந்தபோது மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் மேலும் 30 கன அடி குடிநீர் கொண்டு செல்ல ஒப்பந்தம் விடப்பட்டது. ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் பெயர் பெரியசாமி ,சின்னசாமி என்பவர்கள் என்ற தகவல் தெரிவிக்கின்றனர். இவர்கள் ஒப்பந்தம்  எடுத்த 60 கிலோ மீட்டர் வரை ராட்சத குழாய்கள் பதித்து மதுரை மாநகராட்சிக்கு உயர்மட்ட தண்ணீர் தொட்டிக்கு குடிநீரை கொண்டு சொல்ல வேண்டும். ஒப்பந்ததாரர்கள் அவசரக் கதியில்  செய்த அரைகுறை பணியால் ராட்சதக் குழாய்களை இணைத்துள்ள இடங்களில் எல்லாம் தண்ணீர் வெளியே வீணாக சென்று கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. ராட்சதக் குழாய்கள் இணைப்பில் இருந்து வெளியே வீணாக வரும் குடிநீர்  அருகில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள தென்னை வாழை மரங்களுக்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர் .


மதுரை மாநகராட்சியில் இருக்கும் 100 வார்டுகளில் சுமார் 15 லட்சம் மக்கள் (2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) வசிக்கின்றனர்.
சுமார் 6 லட்சம் குடியிருப்புகளைக் கொண்ட மதுரை  மாநகராட்சியின் தற்பொழுது மக்கள் தொகை 20 லட்சத்தை நெருங்கிவிட்டது.
2023-ம் ஆண்டில் இன்னும் மக்கள் தொகை 25 சவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் அமைப்பு வழிகாட்டுதல்படி தனிநபர் குடிநீர் தேவை நாளொன்றுக்கு 135 லிட்டர் என்ற அடிப்படையில் குடிநீர் வழங்க வேண்டும். இந்த அடிப்படையில் 2034ஆம் ஆண்டில் மாநகராட்சியின் குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 317 மில்லியன் லிட்டராக இருக்கும் என்று மாநகராட்சி திட்டமிட்டுள்ளது
ஒருநாள் குடிநீர்த் தேவை 268 மில்லியன் லிட்டர்.
தற்போது கிடைப்பதோ 192 மில்லியன் லிட்டர்தான்.
வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மதுரை மாநகராட்சி தினமும் 81 எம்எல்டி குடிநீர் எடுத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை நேரடியாக மதுரைக்கு கொண்டு செல்லும் வகையில் லோயர்கேம்ப் கிராமத்தில் சுமார் 14.78 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் நீர்வளத்துறை மூலம் ஆண்டு முழுவதும் நீர் தேங்கும் வகையில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.
இதன் அருகே நான்கு உறை கிணறுகளும், ஒரு நீர் தேக்கத் தொட்டியும் நிறுவப்படுகிறது. 280HP திறனுள்ள 6 பம்புகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு பம்பும் நிமிடத்திற்கு 26,000 லிட்டர் நீர் உறிஞ்சப்பட இருக்கிறது. இதன் மூலம் தினசரி 125 மில்லியன் லிட்டர் நீர் சேகரிக்கப்பட்டு, தடுப்பணை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில், நிலக்கோட்டை தாலுக்காவிலுள்ள பண்ணைப்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்படும் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று, அங்கு தினமும் 125 மில்லியன் லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படும்.
அதன்பிறகு சுத்திகரிக்கப்பட்ட நீரானது மீண்டும் அங்கிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் மதுரை மாநகராட்சியின் குடிநீர் விநியோகதிற்காக பயன்படுத்தப்பட்டு முக்கிய குழாய்களில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த சுத்திகரிப்பு நிலையம் மதுரை மாநகராட்சியில் இருந்து 120 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்துள்ளதால் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் பயன்படுத்தாமல் நேரடியாக ராட்சத குழாய்கள் மூலம் மதுரை மாநகராட்சியில் உள்ள உயர் மின் குடிநீர் தொட்டிகளுக்கு வந்து சேருவது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், தினசரி 125 மில்லியன் லிட்டர் குடிநீர் மதுரை மாநகருக்கு கூடுதலாக எதிர்காலத்தில் விநியோகம் செய்யப்படும்.
தற்போது மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நீரை எடுத்துச் செல்கிறார்கள். அதேபோல் இன்னும் கூடுதலாக வைகை அணையில் இருந்து தேவைக்கேற்ப நீரை எடுத்துக் கொள்ளலாம்.
மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. .குறிப்பாக வைகை அணையிலிருந்து தினமும் 115 மில்லியன் லிட்டா், வைகை ஆற்றுப்படுகையிலிருந்து 47 மில்லியன் லிட்டர், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் 30 மில்லியன் லிட்டர், ஆக மொத்தம் 192 மில்லியன் லிட்டா் குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

மாநகராட்சி நிர்வாகம்.
மதுரை மாநகரில் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப தடையின்றி குடிநீா் வழங்கும் வகையில் முல்லைப் பெரியாறு லோயா் கேம்ப்பிலிருந்து மதுரை நகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டா் குடிநீர் கொண்டு வருவதற்கு சுமார் 1295.76 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு மத்திய அரசு, மாநில அரசு, சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய மூன்று வழிகளில் இதற்கான நிதி ஒதுக்கப்படுகிறது.

இதைத் தவிர நகர்ப்புற வளர்ச்சி மற்றும் புத்தாக்கத் திட்டம் (AMRUT), ஸ்வச் பாரத், ஸ்மார்ட் சிட்டி, ஆகிய திட்டங்கள் மூலம் மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. மேலும் இத்திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் அரசு கடன் வாங்கியுள்ளது.
154 கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய்கள் மூலம்

தினசரி 125 மில்லியன் லிட்டர் குடிநீர் மதுரை மாநகருக்கு கூடுதலாக எதிர்காலத்தில் விநியோகம் செய்யப்படும்.

இந்த ராட்சத குழாய்களில் ஆங்காங்கே சுமார் 100 இடங்களுக்கு மேல் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு வெளியே வருவதால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ராட்சத குழாய்களை பராமரிக்கும் பணியை மதுரை மாநகராட்சி குடிநீர் வாரியம் மேற்கொண்டு வருகிறது ஆனால் பலமுறை சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தும் குழாய்கள் உடைந்து குடி தண்ணீரை விவசாய நிலங்களில் பயன்படுத்தி வரும் புகைப்படங்களை   சமூக வலைதளங்களில் வந்தும்  மதுரை மாநகராட்சி குடிநீர் வாரியம்  சரி செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

கடந்த ஆகஸ்ட் மாதம் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் சிங் ஜித் காலோன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தேனி மாவட்டத்திற்கு சென்று முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை நகருக்கு குடிநீர் கொண்டு வரும் இந்தத் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

மதுரை மாநகராட்சி ஆணையர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தபோது.

ஆனால் ஏற்கனவே மதுரை மாநகராட்சிக்கு வரும் குடிநீர் குழாய்கள் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் உடைந்து 10 கன அடி வரை குடிநீர் விரையம் ஆவதை தெரிந்தும் மதுரை மாநகராட்சி ஆணையர் அந்த இடங்களை ஆய்வு செய்யாமல் சென்றது ஏன் என்ற சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆகவே உடனடியாக மதுரை மாநகராட்சி குடிநீர் வாரியம் ராட்சத குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநகராட்சி குடிநீர் வாரியத்தில் செயல்பாட்டை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button