ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மக்கள் வரிப்பணம் 180 கோடி ரூபாய் நூதன மோசடி!! நடை பாதைகளை ஆக்கிரமித்து பொது மக்கள் நடப்பதற்கு இடையூறாக இருக்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மாதம் பல லட்சம் கல்லா கட்டும் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ! தற்போது T .நகர் பாண்டி பஜார் ஸ்மார்ட் சிட்டியின் அவலநிலை!, நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!?

கடந்த அதிமுக ஆட்சியில் T.நகர் பாண்டி பஜார் சௌந்தரபாண்டியன் சாலை சுமார் 180 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்பட்டது. அப்போதிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஸ்மார்ட் சிட்டி பணி முடிந்து முடியாமல் இருக்கும் நிலையிலேயே அவசர அவசரமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது ஸ்மார் சிட்டி ஒப்பந்தம் வழங்கியதில் 40% லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் தரமான ஸ்மார்ட் சிட்டி உருவாகவில்லை என்றும் அவசர கோலத்தில் பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின் கடந்த ஒரு ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பாண்டி பஜார் ஸ்மார்ட் சிட்டி பராமரிப்பு பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் கடமைக்கு ஏதோ சென்னை மாநகராட்சியில் இருந்து ஒரு சில ஊழியர்களை துப்புரவு பணியாளர்கள் ஆக பணியமர்த்தி அதுவும் அங்கு இருக்கும் கடைகளில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த மட்டுமே இந்த பணியாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .அதுமட்டுமில்லாமல் பல கோடி ரூபாய் செலவில் நவீன வாகன நிறுத்தும் அமைக்கப்பட்டும் அங்கு வாகனங்கள் நிறுத்த ச சரியான வழிமுறைகளை கடைபிடிக்காத மாநகராட்சியின் மெத்தன போக்கால் சாலைகளின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

ஏனென்றால் வாகன நிறுத்தத்திற்கு வசூல் செய்ய ஒப்பந்தம் விட்டு இருப்பதாகவும் அதனால் ஒப்பந்தம் எடுத்தவர் பல லட்ச ரூபாய் கமிஷன் மட்டும் கொடுத்து ஒப்பந்தம் எடுத்துள்ளதாகவும் அந்தப் பணத்தை எல்லாம் எடுப்பதற்கு சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டாலும் பொதுமக்கள் அவதி பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து சாலைகளில் வாகனங்களை நிறுத்தி வசூல் செய்தால் மட்டுமே ஒப்பந்த எடுப்பதற்கான செலவு செய்த பணத்தை எடுக்க முடியும் என்றும் ஒப்பந்ததாரர்கள் கூறுவதாக தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டமே நடைபாதைகளில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தி நடைபாதைகள் நடப்பதற்கு மட்டுமே என்ற ஒரு வாசகம் எழுதி வைத்துவிட்டு இரண்டு புறமும் உள்ள நடைபாதைகளில் கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதாகவும் அதற்கு காரணம் கடைக்காரர்களிடம் மாநகராட்சி ஊழியர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்டும் காணாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் இருந்து வருகிறது. இதை பற்றி யாராவது மேலதிகாரி களிடம் புகார் கொடுத்தால் மட்டுமே அந்த நேரத்தில் பாதையை ஆக்கிரமித்து கடைகள் மீது அவதாரம் விதித்து கண்துடைப்பு நாடகம் நடத்தி வருவதாகவும் தகவல் வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடைகளை பராமரிக்கிறேன் என்று கூறி அதற்கான நேரத்தில் பராமரிப்பு வேலைகள் செய்யாமல் பொதுமக்கள் அதிகமாக வரும் நேரமான மாலை நேரங்களில் நடைபாதைகளில் முழுவதும் கடை பராமரிப்புக்கான பொருட்களை இறக்கி வைத்து முதியவர்கள் சிறுவர்கள் நடக்கமுடியாமல் பேட்டரி கார் செல்ல முடியாமல் ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள். அதில் முக்கியமாக பூர்விகா மொபைல் என்ற செல்போன் கடை பாலாஜி பவன் உணவகம் அருகே அமைந்துள்ளது இந்த செல்போன் கடை அடிக்கடி பராமரிப்பு என்று கூறி கடைக்கு முன்பு நடைபாதைகளில் ஒரு லாரி பொருட்களை இறக்கி வைத்து பொதுமக்கள் நடப்பதற்கு இடையூறு செய்து வருகின்றனர் . பலமுறை இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது சம்பந்தமாக விசாரித்தால் கடைகளில் பராமரிப்பு நடக்கும் போது காவல்துறை முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை பெரிய தொகை பெற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் கடை பராமரிப்பு செய்து வருவதை பார்த்து ரசித்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். எது எப்படியோ ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் 180 கோடி செலவு செய்ததும் மக்கள் பணமே. அந்த மக்கள் நடப்பதற்கு நடைபாதை இல்லை என்றால் எங்கு போய் யாரிடம் கேட்பது என்று கூக்குரல் இடுகின்றனர் பொதுமக்கள். ஏனென்றால் சென்னை மாநகராட்சித் தேர்தல் முடிந்த பின்பு அந்தந்த பகுதிகளில் உள்ள கவுன்சிலர்களின் ஆதிக்கம் தான் இதற்கு காரணம் என்றும் இதை கண்டுகொள்ளாமல் கட்சியின் தலைமை இருப்பதாகவும் பலவித குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. இன்னும் அதிர்ச்சியான ஒரு தகவலை சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மாநகராட்சி தேர்தலுக்குப் பின் சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளின் ஓரங்களில் ஆயிரக்கணக்கான தள்ளுவண்டி கடைகள் உருவாகி இருக்கின்றன என்றும் ஒவ்வொரு கடைக்கும் 5லட்சம் ரூபாய் வரை அந்தப்பகுதி கவுன்சிலர்கள் பெற்றுக்கொண்டு இதுபோன்று தள்ளுவண்டி கடைகளை நடத்த அனுமதி வழங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டு வந்துள்ளது . இந்த தள்ளுவண்டிகளில் பெரும்பாலும் காலை டிபன் மதிய உணவு இரவு டிபன் கடைகள் இருப்பதாகவும் அந்தக் கடைகளில் தரமற்ற உணவு கொடுக்கப் படுவதாகவும் அது மட்டுமில்லாமல் உணவு வழங்கும் போது பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் சுகாதாரமற்ற தண்ணீர் வைத்துள்ளதாகவும் கடையைச் சுற்றி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் இதனால் அங்கு வந்து சாப்பிட்டு செல்பவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எது எப்படியோ மாநகராட்சி தேர்தலுக்கு முன்பு பொதுமக்கள் புகார் கொடுத்தால் புகார் மீது உடனே நடவடிக்கை எடுத்து வந்ததாகவும் தற்போது மாநகராட்சி தேர்தலுக்குப்பின் பொதுமக்கள் தங்கள் பகுதியில் சட்டவிரோதமாக செயல்படுவதை புகார் அளித்தால் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் இதற்கெல்லாம் காரணம் மாநகராட்சி மேயராக பதவி ஏற்றுள்ள பிரியா அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எது எப்படியோ பொது மக்கள் பத்து வருடமாக தங்கள் குறைகளை நிறை வேற்ற திமுக தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போதுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்களை நம்பி வாக்களித்தனர்