திரைப்பட இயக்குனர் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோட்டூர்புரம் வரதராஜபுரம் பகுதியில் கோவத்தில் இறந்த நிலையில் உடல் ஒன்று மிதந்துள்ளது. உடனே அந்தப் பகுதியில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி மருத்துவ பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்த போது இறந்து கிடந்தவர் மறைந்த நடிகா் ரோபோ சங்கா் நடித்த

‘தங்க முட்டைகள்’ திரைப்படத்தை இயக்கிய கோபிநாத் நாராயணமூா்த்தி என்றும்
கடந்த 10 ஆண்டுகளாக குடும்பப் பிரிவு, நீண்டகால மன உளைச்சல் மற்றும் திரைப்படத் துறையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த நிலையில் ஜனவரி 29 ஆம் தேதி
கோட்டூர்புரம் மேம்பாலத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தில் இருந்து கூவத்தில் குதித்ததாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்வதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றிய இயக்குனர் கோபிநாத் நாராயணமூர்த்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
