லஞ்சம் வாங்கிய பல லட்சம் ரூபாய் பணத்தில் உல்லாசமாக இருந்த
திண்டுக்கல் மாவட்ட கனிமவள உதவி இயக்குனர்!லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்!

திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருப்பவர் செல்வ சேகர்.


இவரது சொந்த ஊர் திருநெல்வேலி ஆகும்.
இவர் தற்போது

திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார் .
திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் செல்வ சேகர் வீட்டிற்கு காலை 5 மணிக்கு
திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை
கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் 20 பேர் கொண்ட குழு அதிரடியாக சோதனை நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருக்கும் செல்வக்குமார் இதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனராக இருந்தபோது இவர் மீது லஞ்சம் வாங்கிய புகாரின் பெயரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் இந்த நிலையில்
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு சுமார் 50க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் எம் சாண்ட் தயாரிக்கும் கிரஸர்களில் இருந்து லாரிகளில் கனிம வளம் எடுத்துச் செல்ல திண்டுக்கல் மாவட்ட கனிமவளத்துறை அலுவலகத்தில்
ஆன்லைன் மூலம் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது.
தீபாவளிக்கு முன்பு ஆன்லைன் அனுமதி சிட்டு வழங்குவதற்கு OTP ஒன்றுக்கு 2000 ரூபாய் என
ஆயிரக்கணக்கான வாகனங்களில் கனிம வளம் எடுத்துச் செல்ல ஆன்லைன் அனுமதிச்சீட்டு OTP வழங்க பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வெளியான நிலையில்
24/10/25 அன்று காலை 5 மணிக்கு செல்வகுமார் வசித்து வரும் திண்டுக்கல்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சென்னமநாயக்கன்பட்டி, ஏழுமலையான் நகரில் உள்ள செல்வ சேகர்
வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.அதே நேரத்தில்
திருநெல்வேலி என்ஜிஓ காலனியில் உள்ள செல்வ சேகரனின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். .
அதன் பின்னர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை துணை மற்றும் உதவி இயக்குனர் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருவதாகவும் அப்போது நடத்தப்பட்ட சோதனையில்

பல ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக
தகவல் வந்துள்ளது.
அது சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குனர் செல்வ சேகர் இடம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



எது எப்படியோ லஞ்சம் ஊழல் முறைகேட்டில் கொடி கட்டி பறந்த கனிம வளத்துறை உதவி இயக்குனர் செல்வசேகர் லஞ்சமாக பெற்ற பல லட்சம் ரூபாய் பணத்தை தன்னுடைய நெருங்கிய தோழிகளுக்கு அள்ளிக் கொடுத்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் ஒரு சில பெண் தோழிகளுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஆடம்பர சொகுசு பங்களாக்கள் வாங்கி கொடுத்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் லஞ்சமாகப் பெற்ற பல கோடி ரூபாய் மதிப்பில் பினாமி பெயர்களில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கி வைத்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் செல்வ சேகரின் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என தகவல் வெளியாகியுள்ளது.