10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு
10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு!
கலைஞர் நூற்றாண்டில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இளைஞரணி மாநில மாநாடு !
1980 ஜூலை 20 அன்று
மதுரை ஜான்சிராணி பூங்காவில் இப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் திமுக இளைஞரணி தொடங்கப்பட்டது .பின்னர் 1982 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இளைஞர் அணி இரண்டாம் ஆண்டு விழாவில் நடைபெற்றது மு க ஸ்டாலின் இளைஞரணி மாநில அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக மு க ஸ்டாலின் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து மு.க ஸ்டாலின் திமுகவின் தலைவரானார் இதனால் இளைஞர் அணி செயலாளர் பதவி வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது. இதனை யடுத்து 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து திமுகவின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாற்றங்களை மேற்க்கொண்டு வந்துள்ளார்.
மேலும் பொறுப்பேற்றவுடன் 30 லட்சம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக உதயநிதி ஸ்டாலின் திமுகவில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க.வில் பல அணிகள் உள்ளது. அதவாது 22 அணிகள் இருக்கிறது. ஆனால் அணிகள் இருந்ததும் அதில் முதன்மையான அணி எதுவென்றால் இளைஞர் அணி என்று கலைஞரால் பலமுறை பாராட்டப்பட்டது.
தற்போது நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக இருந்து முதலமைச்சராக இருக்கிறார் என்றால் அவருடைய உழைப்பு எப்படி பட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும்.இளைஞர் அணியினர் உழைத்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.உழைத்தால் யாரும் முன்னேறலாம் என்பதற்கு நம்முடைய இளைஞர் அணியே சாட்சி. அதற்கு நம்முடைய தலைவரே சாட்சி. உழைப்பு என்றால் ஸ்டாலின், ஸ்டாலின் என்றால் உழைப்பு என்று பாராட்டப்பட்டவர் தான் நம்முடைய தலைவர் அவர்கள்.14 வயதில் 1967-ம் ஆண்டு கோபாலபுரத்தில் ஒரு முடிதிருத்தும் கடையில் இளைஞர் தி.மு.க.வை தொடங்கினார்கள். அதன் பிறகு 1968-ல் சென்னை மாநகராட்சி தேர்தலுக்காக சென்னை முழுவதும் சைக்கிள் பிரசாரம் செய்தார். 1969-ம் ஆண்டு சென்னை மாவட்டத்தினுடைய வார்டு பிரதிநிதி, 1973-ம் ஆண்டு தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர். 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டு கடுங்காவல் தண்டனை.1980-ம் ஆண்டு தி.மு.க. இளைஞரணி ஆரம்பிக்கும்போது 7 அமைப்பாளர்களில் ஒருவர். கடின உழைப்பால் நம்முடைய தலைவர் முதலமைச்சர் ஆகியுள்ளார்.பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. அமைச்சர் உதய நிதி ஸ்டாலின்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 9 வருடங்கள் ஆகி விட்டது. 2014-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொன்னார். இப்போது மீண்டும் அதே வாக்குறுதியை கொடுக்கிறார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி காட்டுவேன் என்று சொல்கிறார். ஒரு விசயத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியாக வேண்டும். ஒரு வாக்குறுதி கொடுத்தார். இந்தியாவை மாற்றி காட்டுவேன் என்றார். இதை மட்டும் செய்து விட்டார். என்னவென்று கேட்டால் அவர் இந்தியா பெயரை பாரத் என மாற்றி விட்டார். தன்னுடைய சொல்லை காப்பாற்றி விட்டார் என சொல்கின்றார்.
சி.ஏ.ஜி. என்கிற அமைப்பு மத்திய, மாநில அரசுகளின் செலவு கணக்கை தணிக்கை செய்யும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மத்திய அரசில் ரூ.7½ லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை எனவும், மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு பணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து நம்முடைய தலைவர் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார்
ஆனால் மத்திய பா.ஜனதா அரசு பதில் சொல்லாமல் அந்த சி.ஏ.ஜி. அறிக்கை தயார் செய்த அத்தனை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து விட்டார்கள்
தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி சேர்ந்துள்ளது. அதில் ரூ.2 லட்சம் கோடி மட்டுமே திருப்பி தரப்பட்டுள்ளது. ஆனால் உத்தரபிரதேசத்தில் ரூ.3 லட்சம் கோடி வருவாய் சென்றுள்ள நிலையில் ரூ.9 லட்சம் கோடி அந்த மாநிலத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. செயல்வீரர்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில்
இந்திய அரசியலில் திருப்புமுனையாகவும், தமிழ்நாட்டு வரலாற்றில் தடம் பதிக்கக் கூடியதாகவும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கவே சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடத்தப்படுவதால், இளைஞர்களே உரிமைகளை வென்றெடுக்க ஒன்று திரள்வோம்,நடைபெறும் மாநில மாநாடு எழுச்சியோடு வெற்றி மாநாடாக அமைய அனைத்து இளைஞரணி நிர்வாகிகளும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி உரிமை , கல்வி உரிமை ஆகியவற்றை மீட்டெடுக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய வேண்டும். எனவே, அனைத்து நிர்வாகிகளும் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு பங்கேற்று மாநாட்டை வெற்றிகரமாக வழி நடத்த வேண்டும். என சேலத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
.
சேலத்தில் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
இளைஞரணியின் முதல் மாநாடு 2007ல் முதல்வர் இளைஞரணி செயலாளராக இருந்தபோது, கட்சியின் முதல் இளைஞரணி மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்ற நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாடு நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2007ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி அன்று கழக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு’ சேலத்தில் நடைபெறும்.” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு ஒரு பெருமைமிகு வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை
உதய நிதி தெரிவித்து கொண்டு
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை, இந்திய அரசியலில் திருப்புமுனை மாநாடாகவும், தமிழ்நாட்டு வரலாற்றில் தடம் பதிக்கக்கூடிய மாநாடாகவும் மாற்ற இன்றிலிருந்தே உழைக்க உறுதியேற்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நவம்பர் 22 ஆம் தேதி காலை பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு வரும் பிரமாண்டமான பந்தலை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டார்.
மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தில் நடைபெறும் 2வது மாநில திமுக இளைஞர் அணி மாநாட்டில் கலந்துகொள்ளும் இளைஞர் அணியினர் பட்டியலை தயார் செய்து வருகின்றனர். மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு திமுக இளைஞர் அணி சீருடை வழங்க அளவு எடுக்கப்பட்டு அதற்கான சீருடைகளும் தயாராகி வருகிறது.
இதை முன்னிட்டு இளைஞரணி நிர்வாகிகளின் மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
இந்த வாகன பேரணி 234 சட்டப்பேரவை தொகுதி களுக்கும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் உதயநிதி பேசியதாவது: பேரணியில் கலந்து கொண்டுள்ள நிர்வாகிகள் மாவட்டந் தோறும் சென்று மக்களை சந்தித்து திமுக அரசின் கொள்கைகள், சாதனைகளை விளக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இணைய தளம் மூலமாக 9 லட்சம் பேரும், போஸ்ட் கார்டு மூலம் 10 லட்சம் பேரும் கையெழுத் திட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 50 லட்சத்தை தாண்டி கையெழுத்து பெற வேண்டும். வாகன பேரணி மேற்கொண்டுள்ள 188 பேரும், 15 நாட்களில் 8,400 கி.மீ. பயணம் செய்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் 3 லட்சம் பேரை சந்திக்க உள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனோ தங்கராஜ் கலந்து கொண்டனர். பிரச்சார பேரணி நேற்று கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் மற்றும் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட தொகுதிகளுக்கு செல்கிறது. தொடர்ந்து தென்காசி, விருதுநகர் வழியாக நவம்பர் 27-ம் தேதி சேலம் சென்றடைந்தது.
மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு சேலம் இளைஞரணி மாநாடு அடித்தளம் அமைக்கும்”என : அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை 6 மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டோம். மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு அடித்தளம் அமைக்கும்” என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
” எங்களது அடுத்த முக்கியமான பணி, சேலத்தில் நடைபெறக்கூடிய மாநில இளைஞரணி மாநாட்டை, சிறப்பாக நடத்துவது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தலைவர் கூட்டியதற்கான முக்கிய நோக்கமே இதுதான். திமுக மாநாடு நடக்கிறது என்றால், அதன் எழுச்சி தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும்.
அமைச்சர் உதயநிதி, இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, ஏராளமான இளைஞர்கள் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர். அவர் பயணிக்கும் ஊர்களில் இருந்து புதிய இளைஞர்கள் கட்சியை நோக்கி வருகின்றனர். திமுக அரசும் இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்த இளைய பட்டாளத்தை, கட்டுக்கோப்பாகவும், திராவிடக் கொள்கையில் பற்றுக்கொண்டவர்களாகவும் மாற்றுவதற்காகத்தான், இளைஞரணி மாநாட்டை நடத்த
முதல்வர் ஸ்டாலின்
உத்தரவிட்டார்.
சேலத்தில் நடைபெறும் இது ஒருநாள் உதயநிதி தலைமையில் சேலத்தில் நடை பெற இருக்கும் இளைஞரணி மாநாட்டில்
காலை 9 மணியளவில், கட்சியின் இரு வண்ணக் கொடியை கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., ஏற்றி வைக்கிறார்.
மாணவரணி செயலாளர் எழிலரசன் மாநாட்டைத் திடலைத் திறந்து வைக்கிறார். முக்கியப் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். மாநாட்டில் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த இளைஞரணி மாநாடு, கட்சியின் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக மற்றும் இந்திய வரலாற்றிலும் முக்கிய மாநாடாக அமையப்போகிறது. வரவிருக்கின்ற, மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு, சேலத்தில் நடைபெறவுளள்ள இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும் மாநாடாக அமையும். கிட்டத்தட்ட 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் அனைத்து பணிகளையும் அமைச்சர் நேரு மேற்கொண்டு உள்ளதாகவும் இளைஞரணி மாநாடு முத்திரை பதித்து இந்திய அளவில் பேசப்படும் என அமைச்சர் ஐ. பெரியசாமி
தெரிவித்துள்ளார்.