10 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளதாக கூறி பெண் பயணி மீது சுடு தண்ணீரை ஊற்றி ஆவின் கடை உரிமையாளர் அராஜகம் செய்யும் அதிர்ச்சி வீடியோ!கடையை பூட்டி சீல் வைத்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள்!
திருப்பூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மீது சுடு தண்ணீரை ஊற்றி
அத்துமீறும் ஆவின் கடை உரிமையாளர் !
கோமாவில் இருக்கும் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள்!
திருப்பூர் அக் 21
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் மத்திய பேருந்து நிலையம் ( பழைய பேருந்து நிலையம்) ஆவின் கடை உரிமையாளர் கடைகளுக்கு முன்பு நடை பாதைகளில்
பொது மக்கள் நடக்க முடியாத நிலையில் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு பேருந்துக்காக காத்திருந்த பெண்மணியை எழுந்து போகுமாறு கூறி
அவர் மீது
கொதிக்கும் சுடு தண்ணீரை உற்றியதும் இல்லாமல் அந்தப் பெண்மணியை தகாத வார்த்தைகளால் திட்டி இந்தக் கடைக்கு 10 லட்சம் ரூபாய் திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்துள்ளேன் என்றும் இங்கு உட்கார்ந்தால் தண்ணீர் எடுத்து ஊற்றத்தான் செய்வோம் நீ காவல் நிலையத்தில் போய் புகார் செய் என்றும் உட்கார வேண்டும் என்றால் வேறு எங்காவது போய் உட்காருங்கள் கடை முன்பு உட்காரக் கூடாது என்று அராஜகத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர் மீது சட்டரீதியாக திருப்பூர் மாநகர காவல் துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் ஆவின் பெயரில் கடை உரிமம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக டீக்கடை மற்றும் தின்பண்டங்கள் விற்று வருவதால் கடையின் உரிமத்தை திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆவின் உரிமம் கொடுத்த திருப்பூர் ஆவின் பொது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.வீடியோ வைரல் ஆக தொடங்கியதால் உடனடி நடவடிக்கையாக திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் முன்னிலையில் கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது .
வீடியோ வைரல் ஆக தொடங்கியதால் உடனடி நடவடிக்கையாக திருப்பூர் மாநகராட்சி உதவி ஆணையர் முன்னிலையில் கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது .