100 நாள் வேலைத் திட்டம்: ஏழைகளை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?விவசாயத்தை காப்பாற்றும் MGNREGA சட்டத்தை காற்றில் பறக்க விட்டு கட்டாய ஆதார் இணைப்பு!!
நிர்வாகப் பிரச்சனையை மண்வெட்டும் தொழிலாளரின் தலையில் கட்டுவதா!?
ஊரகத்துறை நிர்வாகம்!?

100 நாள் வேலைத் திட்டம்: ஏழைகளை வஞ்சிக்கிறதா மத்திய அரசு?விவசாயத்தை காப்பாற்றும் MGNREGA சட்டத்தை காற்றில் பறக்க விட்டு கட்டாய ஆதார் இணைப்பு!!
நிர்வாகப் பிரச்சனையை மண்வெட்டும் தொழிலாளரின் தலையில் கட்டுவதா!?
ஊரகத்துறை நிர்வாகம்!?
ஆதார் அட்டை வந்தவுடன் உங்கள் பணம் உங்கள் கையில், மக்களுக்கு அதிகாரம் என்றெல்லாம் மோடி அரசு முழங்கியது
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2005ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படும்.தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பில்,”மாநிலத்திலுள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் உள்ள “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணி நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 75 சதவீதம் மத்திய அரசும், 25% மாநில அரசும் வழங்குகிறது.
18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் இத்திட்டத்தின் பயனாளியாக தகுதி உடையவராவார்.
1.20 கனமீட்டர் மண்ணை வெட்டி எடுக்க வேண்டும் . (ஒரு கனமீட்டர் என்பது 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1 மீட்டர் ஆழம் கொண்டதாகும்.)
தற்போதைய கூலிரூ.229…..
நீர்வள பாதுகாப்பு மற்று நீர் சேமிப்பு வறட்சி எதிர்ப்பு திறன் ஏற்படுத்துதல், காடு வளர்ப்பு, மரம் நடுதல் நீர்பாசன வாய்க்கால், நுண்பாசனம், சிறுபாசனம் போன்ற வேலைகள் மற்றும் மத்திய அரசு மாநில அரசுடன் கலந்து ஆலோசித்த மற்ற பணிகளும் இதனுள் அடங்கும்….
ஆனால் இதை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு
100 நாள் வேலையைப் பறிக்கும் ஆதார் இணைப்பு கட்டாயம் என்று பயனாளிகளை அலைக்கழிப்பதில் ஊரக வளர்ச்சித் துறை நிர்வாகத்திற்கு என்ன லாபம் என்று தெரியவில்லை!
ஆதார் இணைப்பினால் வேலை மறுக்கப்பட்ட பெண்களுக்கு வேலையைப் பெற்றுத்தந்தது அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கம் (AIARLA) குற்றம் சாட்டுகின்றனர்.
வேலை அட்டைதான் வேலையுறுதித் திட்டத்தின் அடிப்படை ஆதாரம். வேலை அட்டை வைத்திருக்கும் ஓர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு குறைந்தது 100 நாள் வேலை அளிக்க வேண்டும் என்று MGNREGA சட்டம் சொல்கிறது. அதனை நிறைவேற்ற வேண்டியது அரசு அதிகாரியான BDOவின் கடமை.
ஆதார் அட்டை வந்தவுடன் உங்கள் பணம் உங்கள் கையில், மக்களுக்கு அதிகாரம் என்றெல்லாம் மோடி அரசு முழங்கியது. உண்மையில், மக்கள் கையில் உள்ள பணத்தைப் பறிக்கவும், அவர்களின் சட்ட உரிமையைப் பறிக்கவும் ஆதாரை அரசு பயன்படுத்துகிறது.
மதுரை கிழக்கு ஒன்றியத்தின் பொய்கைகரைபட்டி பஞ்சாயத்தில் வேலை அட்டை கொடுத்து வேலை கேட்கும்போது ஆதார் ஜெராக்சையும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். சில வேலை அட்டைகளில் இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்ட ஆதார் மாயமாகக் கழன்று கொள்வதால் சம்பளம் போட முடியவில்லை என்றும், அதனால், ஆதார் பிரதி வேண்டும் என்றும் சொல்லிவந்தார்கள்.
சில வாரங்களாக வேலை கோரும் பெண்களில் சிலரை திருப்பி அனுப்பி அவர்களின் ஆதார் இணைப்பைச் சரிபார்த்து வரச் சொன்னது ஊரகத்துறை நிர்வாகம். “உனக்கு சம்பளம் வேணும்னா, சம்பளம் ஏறனும்னா ஆதார சரிபார்த்துக்கொண்டு அப்புறம் வேலைக்கு வா” என்று வேலையை மறுத்தனர் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
வேலை மறுக்கப்பட்ட தொழிலாளர்களுடன் அவிகிதொசவின் மாநில நிர்வாகி தோழர் மல்லிகா மதுரை கிழக்கு வட்டார வளர்ச்சி அதிகாரியைச் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார்.
வேலை அட்டைதான் அடிப்படை ஆதாரம். வேலை அட்டையிருந்தால் வேலை கொடுப்பது அதிகாரியின் சட்டக் கடமை. சம்பளம் வழங்குவதில் அதிகாரிக்குச் சிக்கல் இருந்தால் அது அவரின் நிர்வாகப் பிரச்சனை. அவரின் நிர்வாகப் பிரச்சனையை மண்வெட்டும் தொழிலாளரின் தலையில் கட்டக் கூடாது என்பது சங்கத்தின் நிலை
அந்த நிலையை அதிகாரி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் , . அட்டைக்கு வேலை கொடுத்து சட்டக் கடமையை நிறைவேற்றுங்கள் என்று வற்புறுத்தியுள்ளார்.
அதன்பின், அதிகாரி, தனக்குக் கீழுள்ள ஊழியர்களை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இறுதியில், ஆதார் இணைப்புக்காக தொழிலாளர்கள் அலைய வேண்டாம். அந்த வேலையை அரசு நிர்வாகம் பார்த்துக் கொள்ளும் என்று வட்டார வளர்ச்சி அதிகாரி சங்கத்துக்கு உறுதி அளித்தார்.
சில வாரமாக, பலருக்கு ஏற்பட்ட வேலை இழப்பு இனி ஏற்படாது என்ற வெற்றியுடன் தொழிலாளர்கள் இப்போது வீடு திரும்புகின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம், சங்கத்தின் இந்த வெற்றியை ஒப்புக்கொள்ளுமா, இல்லை அதற்கொரு போராட்டம் இருக்கிறதா என்று இனிமேல்தான் தெரியும் என்று (அனைத்திந்திய விவசாய கிராமப்புர தொழிலாளர் சங்கம் )(AIARLA) நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.