15 நாட்களுக்குள் சீமான் மன்னிப்பு கேட்காவிட்டால் இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி!!. வீரலட்சுமி
15 நாட்களுக்குள் பதில் தராவிட்டால் இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும். தமிழர் முன்னேற்ற படை கட்சி சீமானுக்கு நோட்டீஸ்!
சக்திமூர்த்தி அம்மன் நகர் பாலவாக்கம் சென்னை41. என்ற முகவரியில் வசிக்கும் சீமான்/தபெ செந்தமிழன்
அவர்களுக்கு தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் சட்ட வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீஸ் இல் no.5/23 ஈஸ்வரன் கோயில் தெரு ,ராமாபுரம் சென்னை 89 முகவரியில் வசிக்கும் தமிழர் முன்னேற்ற படையின் தலைவரும் மற்றும் நிறுவனர் வீரலட்சுமி கணவர் பெயர் கணேசன் அவர் மீது நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் அவர்கள் வீரலட்சுமி அவர்கள் தெலுங்கு பேசுபவர் என்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தொடர்ந்து பொதுவெளியிலும் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவதூறு பரப்பி வருவதாகவும் . அது மட்டுமில்லாமல் 04/09/2023 அன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப் படை கட்சி தலைவர் வீரலட்சுமி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்தபோது பாத்திமா கணவர் பெயர் சாகுல்அமீது பவர் வீரலட்சுமி நாயுடு என்று பொது வழியில் பேசினார் என்றும் அதன் பின்பு 13/09/2023 அன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழர் முன்னேற்றப்படை கட்சி தலைவர் வீரலட்சுமி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த அய்யனார் இடிமுரசு தங்கமாரி இவர்கள் மூன்று பேரும் ஆனந்தி நாயுடு என்ற பெயரை வீரலட்சுமி என்று தவறாக கூறி வருவதாகவும் அது மட்டும் இல்லாமல் ஒரு பெண் என்று பாராமல் ஆபாசமாகவும் அநாகரிகமாக பொதுவெளியில் பேசி அவதூறு பரப்பியதாகவும்
அதன் பின்பு 16/09/2023 அன்று திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு தரிசனம் செய்ய தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி சென்றபோது நாம் தமிழர் கட்சியை நிர்வாகி பசுபதி தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து தகராறு செய்து வீரலட்சுமி நாயுடு ஆனந்தி நாயுடு என்று பொதுவெளியில் ஆவேசமாக முழக்கமிட்டு அவரது உரிமையை பறிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியை அனைத்து ஊடகங்களின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து தமிழர் முன்னேற்ற படை வீரலட்சுமி தாய் மொழியையும் அவரது சமூகத்தையும் பற்றி தொடர்ந்து பொதுவெளியில் அவதூறு பரப்பி வருவதாகவும் தமிழர் முன்னேற்ற படை கட்சித் தலைவர் 17 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளதை களங்கப்படுத்தும் வகையில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் தமிழர் முன்னேற்ற படை கட்சித் தலைவர் ஒரு சாதி மறுப்பாளர் என்றும் அவர் வன்னியர் குலத்தைச் சார்ந்தவர் என்றும் தாய்மொழியாக கொண்டவர் என்றும் தெரிவித்துக் கொண்டு நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் உடைய தூண்டுதலின் பெயரில் தமிழர் முன்னேற்றக் படை கட்சி தலைவர் வீரலட்சுமி அவர்கள் பெண் என்ற பாராமல் குற்ற மனதுடன் அவதூறையும் கலங்கத்தையும் தொடர்ந்து பொது வழியில் ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வருகிறார்.
ஆகவே இந்த அறிவிப்பு வந்த 15 நாட்களுக்குள் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் ஆகிய நீங்களும் உங்கள் கட்சி நிர்வாகிகளும் மன்னிப்பு அல்லது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் எனவும் அப்படி வருத்தம் அல்லது மன்னிப்பு கோராவிட்டால் உங்கள் மீதும் உங்கள் கட்சிக்காரர் மீதும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுவார் என்பதை இந்த நோட்டீஸ் மூலம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.